ஈஷா அறக்கட்டளை மற்றும் 'சக்தி விகடன்' ஆன்மீக இதழ் இணைந்து இலவச யோகா வகுப்புகளை தற்போது வழங்கி வருகின்றன. இவ்வகுப்பு குறித்து சில தகவல்களையும் இதில் கற்றுத்தரப்படும் பயிற்சியின் தன்மைகள் குறித்தும் இங்கு சில வார்த்தைகள்...!

ஈஷாவின் சமூக மற்றும் ஆன்மீக செயல்பாடுகளில் பல்வேறு நிலைகளில் விகடன் பத்திரிக்கை குழுமம் தனது ஒத்துழைப்பை வழங்கி வந்துள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ ஒருவிதத்தில் ஈஷாவுடன் தொடர்பில் இருந்து வந்துள்ள விகடன் இம்முறை இலவச யோகா வகுப்பை வழங்கும் முயற்சியில் ஈஷாவுடன் கைகோர்த்துள்ளது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ ஒருவிதத்தில் விகடன் ஈஷாவுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளது.

ஆன்மீகத்திற்கென தனி இதழாக வெளிவரும் 'சக்தி விகடன்' ஈஷா அறக்கட்டளையுடன் இணைந்து வழங்கும் இந்த வகுப்பின் மூலம், யோகப் பயிற்சியை சக்திவிகடன் வாசகர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களுக்கும் இலவசமாகப் பெறமுடியும்.

என்னென்ன பயிற்சிகள்...?!

இலவச யோகப் பயிற்சி என்றவுடன் இதன் மதிப்பை குறைவாக எண்ணிவிட வேண்டாம். இந்த யோகப்பயிற்சி, பயிற்சி பெற்ற ஈஷா ஆசிரியர்களின் மேற்பார்வையில் நிகழ்வதோடு சத்குரு வழங்கும் சக்திமிக்க ஆசனப் பயிற்சி மற்றும் தியானங்களும் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஈஷா கிரியா தியானம் மற்றும் யோக நமஸ்காரம் போன்ற யோகாசனப் பயிற்சிகளும் இதில் கற்றுத்தரப்படுகின்றன. சத்குருவுடன் நேரடியாக பயிற்சியைக் கற்றுக்கொள்வதைப் போலவே தியானக் குறிப்புகளும் விளக்கங்களும் சத்குரு பேசிய வீடியோ காட்சியின் மூலமாகவே கற்பிக்கப்படுகிறது. மேலும்,சத்குருவின் சொற்பொழிவுகளும் இடையிடையே ஒளிபரப்பப்படும்.

முதற்கட்டமாக சென்னை, கோவை மற்றும் மதுரையில் நடைபெற்றுள்ள இந்த யோக வகுப்புகள் தொடர்ந்து திருச்சி, திருநெல்வேலி, பாண்டிச்சேரி, சேலம் மற்றும் காஞ்சிபுரம் போன்ற பல ஊர்களிலும் நடைபெற உள்ளன.

பங்கேற்பாளர்களின் ஆசிரம விசிட்...!

சமீபத்தில் கோவையில் நிகழ்ந்த இலவச யோகா வகுப்பில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்கள், வகுப்பு முடிந்தவுடன், வெள்ளியங்கிரி அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்திற்கு குழுவாக வருகை தந்து ஆசிரமச் சூழலை ரசித்து அனுபவித்து சென்றதுடன், யோகா மையம் தங்களை வெகுவாக ஈர்த்துவிட்டதை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.

தினமும் ஈஷா கிரியா பயிற்சியைத் தொடர்ந்து செய்துவருவதன் மூலம் ஆரோக்கியம், செயல்திறம், அமைதி மற்றும் நல்வாழ்வைப் பெறமுடிகிறது.

இதுபோல் பிற ஊர்களிலும் வகுப்பில் கலந்துகொள்ளும் பங்கேற்பாளர்களும் குழுவாக யோகா மையத்திற்கு வருகைதந்து ஆசிரமச் சூழலை அனுபவித்துச் செல்ல முடியும். இதற்கான உதவிகள் அந்தந்த ஊரிலுள்ள வகுப்பு ஒருங்கிணைப்பாளர் மூலம் செய்துதரப்படும்.

இவ்வகுப்பில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் ஈஷா கிரியா தியான குறிப்புகள் அடங்கிய குறுந்தகடு இலவசமாக வழங்கப்படுகிறது. எதிர்வரும் இலவச யோகா வகுப்புகள் குறித்த தகவல்கள் சக்திவிகடன் இதழில் வெளியிடப்படும். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என யாரை வேண்டுமானாலும் இவ்வகுப்பில் கலந்துகொள்ளச் செய்யலாம்.

ஈஷா கிரியா எனும் அற்புதம்!

'ஈஷா' என்பது படைத்தலின் மூலத்தைக் குறிக்கிறது; 'கிரியா' என்பதற்கு உள்நிலையிலான செயல் என்று பொருள்படும். ஈஷா கிரியா வடிவமைக்கப்பட்டுள்ளதன் நோக்கம், ஒவ்வொரு மனிதனும் படைத்தலின் மூலத்துடன் தொடர்புகொண்டு, தான் விரும்பும் விதமாகவும் சுயசிந்தனையின் படியும் வாழ்வை உருவாக்கிக்கொள்ளச் செய்வதே ஆகும்.

தினமும் ஈஷா கிரியா பயிற்சியைத் தொடர்ந்து செய்துவருவதன் மூலம் ஆரோக்கியம், செயல்திறம், அமைதி மற்றும் நல்வாழ்வைப் பெறமுடிகிறது. இன்றைய பரபரப்பான இயந்திர வாழ்க்கைச் சூழலை எதிர்கொண்டு அமைதியையும் ஆரோக்கியத்தையும் பெறுவதற்கு 'ஈஷா கிரியா' எனும் இந்த தியானப் பயிற்சி ஒரு சக்திவாய்ந்த கருவியாகும்.