பள்ளி-கல்லூரி காலங்களில் நண்பர்கள்தான் உலகம் என்றிருக்கும் பலரும், காலச்சுழற்சியில் தங்கள் குடும்பம், குழந்தை, வீடு என மாறிவிடுவதை பார்க்கிறோம்! தனது இளம் வயதில் சத்குரு கொண்டிருந்த நண்பர்களும் நட்புறவும் எப்படிப்பட்டது என்பதை சத்குரு இங்கே கூறுகிறார்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

Question: தற்போது நீங்கள் குரு, உங்கள் பழைய நட்பு வட்டத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்?

சத்குரு:

அவரவர் தேவைகளை உத்தேசித்துதான் பல உறவுகள் பூக்கின்றன. பெரும்பாலானவர்கள் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு, சாய்ந்து கொள்ள ஒரு தோள் தேடுகிறார்கள். அதேபோல் அடுத்தவருக்குச் சாய்ந்து கொள்ள தங்கள் தோளைக் கொடுக்கிறார்கள். நண்பர்களாகிறார்கள். ஒரு கட்டத்தில் இவரில்லாமல் அவரில்லை, அவரில்லாமல் இவரில்லை என்கிற அளவுக்கு ஒருவரை ஒருவர் சார்ந்து விடுகிறார்கள்.

நல்ல நண்பன் என்பவன் இப்படி இருக்க வேண்டும் என்று எந்த விதியும் எழுதி வைத்துக் கொண்டு, அதன்படி அவர்கள் நடக்கிறார்களா என்று கவலைப்பட்டதில்லை.

எனக்கும் எத்தனையோ நண்பர்கள் இருந்தார்கள். ஆனால், யாருடனும் நான் உணர்வுப்பூர்வமாக என்னை விலங்கிட்டுக் கொண்டதில்லை. மலையேற்றம் என்று வந்துவிட்டால், குறிப்பிட்ட சிலர் வந்து சேர்ந்து கொள்வார்கள். வனங்களில் சுற்றி அலைவதற்கென்று என்னுடன் சில நண்பர்கள் சந்தோஷமாக வருவார்கள். மோட்டார் சைக்கிளில் பக்கத்து ஊர்களுக்கு ஜாலியாகப் போய்வர வேண்டுமா? அதற்கென்று நண்பர்கள் பட்டாளம் தயாராக நிற்கும். எல்லா நண்பர்களுடனும் நெருக்கமாகத்தான் இருப்பேன். அன்பைப் பரிமாறிக் கொள்வதில் எந்தக் குறைவும் இருக்காது. ஆனால், யாரிடமும் எதையும் நான் எதிர்பார்த்ததில்லை. நல்ல நண்பன் என்பவன் இப்படி இருக்க வேண்டும் என்று எந்த விதியும் எழுதி வைத்துக் கொண்டு, அதன்படி அவர்கள் நடக்கிறார்களா என்று கவலைப்பட்டதில்லை.

ஒவ்வொரு இடத்தில் நான் ஒவ்வொருவிதமாக இருந்திருக்கிறேன். சில நண்பர்கள் என்னை அதிகம் பேசாதவனாகப் பார்த்திருக்கிறார்கள். வேறு சில நண்பர்கள் எப்போதும் பேசி ஜாலியாக சிரித்துக் கொண்டு, சுறுசுறுப்பாக இருப்பவனாகவே என்னைப் புரிந்து கொண்டு இருக்கிறார்கள். என்னைக் கவனித்து வந்தவர்கள் எல்லோருக்கும் என்னில் சில பகுதிகள் மட்டுமே வெளிப்படையாகப் புலப்பட்டு இருக்கின்றன. என்னை முழுமையாக அறிந்தவர்கள்?