இளம் சாதனையாளரின் இளைய ராகம்

9 mar 13

அபிரிமிதமான திறமை, அசாத்தியமான ஈடுபாடு இவற்றையே தன் பலமாகக் கொண்டு இசையுலகில், இளம் வயதில் ஜாம்பவனாக பவனி வரும் திரு. டி.எம். கிருஷ்ணா அவர்களின் இசை விருந்திலிருந்து…


திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று சொல்வார்கள் ஆனால், கடல் தாண்டி நம் கலாச்சாரத்தின் சாரத்தை கொண்டு செல்வதில் பெரும் பணி ஆற்றிய திரு. டி.எம். கிருஷ்ணா அவர்களின் கர்நாடக இசையுடன் இன்றைய யக்ஷா துவங்கியது.

பிரான்ஸ் மண்ணில் இசை நாடகம் மூலம், ராமரை அரங்கேற்றிய பெருமையும், சிங்கப்பூரில் நம் பாரம்பரிய இசையை வளர்க்க இசைக் குழு அமைத்து நடத்தி வரும் பெருமையும் கொண்ட இந்த இளம் கலைஞர் டைம்ஸ் ஆஃப் இந்தியா வழங்கிய இளம் சாதனையாளர் விருது பெற்றவர்.

காலை தூக்கி நின்றாடிடும் தெய்வமே என்று இவர் நடராஜரை அழைத்திட, இனிய தமிழில் இனித்திடும் இந்த பாடல் அனைவரையும் ரசித்திட வைத்தது.

yaksha, mahashivarathri, music, festival, celebration, isha, sadhguru, TM Krishna

அவரது அடுத்த பாடலில் சிறுவானைக்காவல் வாழும் சிவனை போற்றிட தமிழ் மணம் கமழும் சிவ பஜனையில் அனைவரும் சிலிந்தனர்.

இந்திய பாரம்பரியக் கலைகள் என்றாலே போரடிக்கும் என்று அலுத்துக் கொள்ளும் இந்த நவ நாகரீக மனிதர்கள் அதிலும் இளைஞர்கள் எல்லாம் அதன் அறிவியல் உண்மையை விளைத்திடும் வகையில் நம் கலாச்சாரத்தின் நுணுக்கங்கள் எல்லாம், ஒரே மேடையில் வெளிப்பட்ட இந்த யக்ஷா திருவிழா இன்று நிறைவடைகிறது.

இந்த நிறைவு நாளன்று நம் கலைகளுக்கு புத்துணர்வூட்ட அறக்கட்டளைகள் ஸ்தாபித்து கலாச்சார மறுமலர்ச்சி ஏற்படுத்தி வரும் திரு. கிருஷ்ணா அவர்களின் கர்நாடக இசையுடன் இன்றைய யக்ஷா நிகழ்ச்சி முடிவடைவது மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

நாளை மஹாசிவராத்திரியில் சந்திப்போம்!
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert