இளைஞர்கள், புத்துணர்வு, விழிப்புணர்வு - இந்த வாரப் பகிர்வு!
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் இருந்து இந்த வார ஸ்பாட் பதிவை சத்குரு ஒலிப்பதிவாக வழங்கியிருக்கிறார். இவ்வுலகில் நடக்கும் விஷயங்களும், மாற்றங்களும் கெட்டதாகத்தான் இருக்கும், கெட்டதாகத்தான் இருக்கமுடியும் என்பதை மாற்றும் வகையில், சத்குருவின் இந்த வார அனுபவப்பகிர்வு நமக்கு மகிழ்ச்சியும் புத்துணர்வும் அளிக்கக்கூடியதாக இருக்கிறது. நல்ல விஷயங்கள், நன்மையும் மேன்மையும் தரும் மாற்றங்கள் ஆகியவை கூட இங்கு நடந்து கொண்டிருக்கின்றன என்ற நம்பிக்கையோடு வாழ்வை புதியதொரு கோணத்தில் அணுக இது நமக்கு கைகொடுக்கிறது. இந்த வாரம், அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி மற்றும் உரையாடல், மேலும் மற்றபிற இடங்களில் தான் பங்கேற்ற நிகழ்வுகளில், பல விஞ்ஞானிகளும் வருங்காலத் தலைவர்களும், நீடித்து நிலைக்கும் தீர்வுகளையும், விழிப்புணர்வை மேம்படுத்தும் வழிகளையும் நாடும் சூழ்நிலை பரவலாகக் காணமுடிகிறது என்று சொல்கிறார் சத்குரு. "இதுதான் தீர்வு என்று இவ்வுலகில் யாவரும் இதை நோக்கித் திரும்பும் காலம் வெகு தொலைவில் இல்லை" என்றும் அவர் சொல்கிறார். ஆங்கிலத்தில் சத்குரு பதித்திருக்கும் இந்த அனுபவப்பகிர்வின் இறுதியில், வாழ்வை எதிர்நோக்கும் நம் கண்ணோட்டத்தை விரிவடையச் செய்வதற்கு தினசரி நாம் செய்யக்கூடிய எளிய வழிமுறை ஒன்றையும் அவர் வழங்குகிறார்.
Subscribe