தற்போது அமெரிக்காவின் பல இடங்களில் பேரானந்தமாய் வாழ்வதற்கான வழிமுறைகளை சத்குரு வழங்கி வருகிறார். அந்த பரபரப்பான நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பை இந்த வார ஸ்பாட்டில் உங்களுடன் பகிர்கிறோம். இத்துடன் 'வஞ்சகம்' என்ற தலைப்பில் 'பேரானந்தத்திற்கான நுழைவாயிலாய்' திகழும் மூச்சை அவர் வசைபாடுவதுபோல் போற்றும் கவிதையும் உங்களுக்காக!

வஞ்சகம்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

என் மூச்சே
என் அருமை மூச்சே
எனதாகவோ என்னில் ஒரு பாகமாகவோ
நான் நினைத்த, நம்பிய
வஞ்சகர்களில்
உனக்கு நிகர் யாருமில்லை!

அனுபவம் பண்பட்டபோது
எனதென்று,
என்னில் ஒரு பாகமென்று
எவருமில்லை
என்பதை நான் உணர்ந்தேன்

ஆனால் நீயோ
என் அருமை மூச்சே
எந்தன் இணைபிரியா பாகம்
என்றெண்ணி இருந்தேன்

ஆனால் இன்று
வஞ்சகத்திற்கெல்லாம் வஞ்சகமாய்
நீ எனதும் அல்ல,
என்னில் ஒரு பாகமும் அல்ல
என்பதை எனக்கு உணர்த்தினாய்!

எனினும் பிறரின் வஞ்சகத்தால்
நொறுங்கிப் போவதுபோல் அல்லாது
இதோ இங்கு நானிருக்கிறேன்
தனியாய், பரவசமாய்
பேரானந்தத்தில் திளைத்து!

Love & Grace