இதயத்தில் ப்ளாக்… யோகா காப்பாற்றியது!

இதயத்தில் ப்ளாக்... யோகா காப்பாற்றியது!, Idhayathil block yoga kappatriyathu

ஒரு நோய் வருவதற்கு பல்வேறு காரணிகள் காரணமாகின்றன. யோகா செய்தாலும் கூட, பரம்பரை காரணமாக சில நோய்கள் வந்துவிடுகின்றன. 99% இதயக்குழாய் அடைப்பு கொண்டிருந்த இவர், யோகா மற்றும் சத்குருவின் அருளால் அதிலிருந்து மீண்டுவந்த உணர்ச்சி மிகு அனுபவம் இங்கே…

திரு. முத்து சரவணன்:

நான் விழுப்புரத்தில் மருந்து மொத்த வியாபாரம் செய்து வருகிறேன். முதுகில் மிகுந்த வலியுடன் அவதிப்பட்டுக் கொண்டிருந்த காலமது. 2002ல் எனது உறவினர் ஒருவர் ஈஷா யோகாவை அறிமுகம் செய்துவைத்து என்னை வகுப்பில் சேரச் சொன்னார்.

muthu saravanan

முதல் நாளில் இருந்தே எனக்குள் அற்புதமான மாற்றம் நிகழ ஆரம்பித்தது. அதை என்னால் உணர முடிந்தது. புதிதாய் பிறந்ததொரு உணர்வு. வாழ்க்கையில் அப்படி ஒரு உன்னதமான ஆனந்தமான உணர்வைக் கண்டேன். அன்று முதல் எனது யோகப் பயிற்சியை ஆரம்பித்து பல பலன்களை அடைந்தேன். எனது முதுகுவலி முழுமையாக நின்றுவிட்டது.

எனது எடையும், ஒரே மாதத்தில் வெகுவாக 75ல் இருந்து 65 ஆக குறைந்தது. எனக்குள் நிகழ்ந்த மாற்றத்தைப் பார்த்து எனது நண்பர்களும் உறவினர்களும் என்னை வியப்பாக பார்த்தார்கள். சத்குரு அவர்கள் அடிக்கடி சொல்வார்கள், உங்களை பார்த்து மற்றவர்கள் யோகா வகுப்பிற்கு வர வேண்டும் என்று. அதேபோல் என் வாழ்வில் நடந்தது. என்னைப் பார்த்து பல பேர் யோகா வகுப்பில் சேர்ந்தனர்.

2003ல் முதன்முதலில் விழுப்புரத்தில் ஈஷா யோகா வகுப்பு ஆரம்பிக்கப்பட்ட போது எனக்கு அப்படி ஒரு கொண்டாட்டம். ஈஷா யோகா வகுப்பு என்றாலே திருவிழாதான், மகிழ்ச்சிதான். நானும் என் மனைவியும் ஒன்றாகவே ஈஷா யோகா வகுப்பில் சேர்ந்தோம். இதனால் எங்களுக்குள் பரஸ்பர புரிதல் அதிகமாகியது. என் மனைவிக்குள்ளும் வியக்கத்தக்க மாற்றங்கள்.

பிறகு அடுத்தடுத்த உயர்நிலை வகுப்புகளான பாவஸ்பந்தனா, ஹடயோகா, சம்யமா போன்ற நிகழ்ச்சிகளுக்கு சென்று பயன்பெற்றேன். சத்குருவின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும், ஈஷா நிகழ்ச்சிகளிலும் தன்னார்வத் தொண்டு செய்து பேரானந்தம் அடைந்தேன்.

இப்படியாக என்னுடைய ஈஷாவின் 9 வருட வாழ்வில் பல்வேறு கோணங்களிலும், என்னுடைய உணவு பழக்க வழக்கங்கள், வேலையிலும் பல தடைகள் எனக்குள் உடைந்து வாழ்வில் வசந்தத்தையும், ஆனந்தத்தையும் உண்டாக்கின.

2010 மே மாதம் என் உடம்பில் ஒருவித சோர்வினை உணர்ந்தேன். எனது அலுவலகத்தில் ஏசி அறையில் ஒருநாள் வேலை செய்து கொண்டிருந்தேன். திடீரென என் உடம்பில் வியர்வையும், இடது கழுத்துப் பகுதியில் ஒருவிதமான வலி ஆரம்பித்து தாடை பகுதி, இடது தோள்பட்டை, கை வரை அந்த வலி பரவியது. இந்த மாதிரி ஒரு வலியோ, மாற்றமோ என் உடம்பில் ஏற்பட்டது கிடையாது. இந்த வலி சுமார் 20 நிமிடத்திற்கு மிக வெகுவாக என்னை தாக்கியது.

இதைப் பற்றி நான் யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால், மறுநாள் எனது குடும்ப நண்பர் டாக்டரிடம் சென்று நடந்ததை கூறினேன். உடனே அவர் எதற்கும் ஒரு இருதய நோய் நிபுணரிடம் காண்பிக்கச் சொன்னார். அவர் என்னை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து ஒரு நாள் முழுக்க observation ல் வைத்து, பிறகு எல்லா டெஸ்ட்டும் நார்மலாக இருக்கின்றது எனவும், non-viral infection ஆக இருக்கக்கூடும் என அனுப்பிவிட்டார்.

அதன்பின், எனக்கு மூச்சுத் திணறலும், படிக்கட்டுகளில் ஏறும்போது மூச்சு வாங்குவதும், அவ்வப்போது வியர்வையும் ஏற்பட்டு எனக்குள் வலியை உண்டாக்கியது.

அடுத்த 10 நாட்களிலேயே மறுபடியும் அதே வலி என்னை தீவிரமாக தாக்கியது. அந்த தீவிர வலியிலும் எனது ECG test report நார்மல் என வந்தது. அப்பொழுது டாக்டர் உங்களுக்கு gastric problem ஆக இருக்கக்கூடும் என அனுப்பிவிட்டார். பிறகு சென்னையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனைக்குச் சென்று காண்பித்தேன். எல்லா test ம் எடுக்கப்பட்டது. ECG. Echo, TMT, Cholesterol, BP என testம் நார்மல் என வந்தது. பிறகு Endoscopy செய்து பார்த்தார்கள், அதிலும் நார்மல் என வந்தது.

எனக்கோ வலி தீர்ந்த பாடில்லை. பிறகு மறுபடியும் விழுப்புரத்தில் எனது நெருங்கிய நண்பர் cardiologist டிடம் காண்பித்தேன். அவர், எதற்கும் ஒரு angio CT Scan எடுத்துவிட்டு வாருங்கள் என்றார். உடனே சென்னைக்கு சென்று test எடுத்தேன். angio CT Scan எடுக்கப் போகும்போது கூட நான் மட்டும் காரை எடுத்துக் கொண்டு டிரைவ் பண்ணி போகலாம் என்று நினைத்தேன். என் மனைவி அப்பொழுது ஈஷாவிற்கு எனது மகனை பள்ளியில் விடுவதற்காக சென்று இருந்தாள். அவள்தான் எதற்கும் ஒரு டிரைவரை கூட்டிட்டு போய் வாருங்கள் என்று சொன்னாள். அதனால் எனது டிரைவரை அழைத்துக்கொண்டு சென்றேன். அப்பொழுதுகூட எனக்குள் பயமோ, பதற்றமோ இல்லை. மிகவும் தைரியமாக சென்றேன். எதையும் எதிர்கொள்ளும் தன்மை எனக்கு ஈஷா மூலம்தான் கிடைத்தது.

நல்ல வேளையாக டிரைவரை அழைத்துச் சென்றது நல்லதாகிவிட்டது. ஏனென்றால், அங்கே attender இருந்தால்தான் CT angio எடுக்க முடியும் என்று சொல்லி விட்டார்கள். அதனால் டிரைவரையே attender ஆக்கி CT angio எடுக்கப்பட்டது. அதில் தெளிவாக 99% பிளாக் இருக்கிறதென்று வந்தது. அதெப்படி மற்ற எல்லா testம் நார்மல் என வந்தது என்று டாக்டருக்கே ஆச்சரியம். பிறகு சென்னையில் உள்ள பிரபல மருத்துவரிடம் சென்று காண்பித்தேன். அவரும் என்னுடைய ரிப்போர்ட்டை பார்த்து ஆச்சரியப்பட்டு, real angio ஒன்று எடுக்க வேண்டும் என்று சொன்னார். அதை எடுத்ததில்தான் தெரிந்தது, 5 block இருக்கிறதென்று, 2 block 99%, 3 block 56, 5, 54 ஆக இருந்தது. அதன்பிறகு எனது family history, உணவுப் பழக்க வழக்கங்கள் அனைத்தையும் கேட்டு அறிந்து கொண்டார்.

அவரிடம் நான் கடந்த 9 வருடமாக யோகா, தியானம் செய்து வருவதாக குறிப்பிட்டு இருந்தேன். அப்பொழுதுதான் அவர் முழுமையாக புரிந்துகொண்டு தன் சக மருத்துவர்களிடம் கலந்தாலோசித்துவிட்டு, என்னை இருதய நோய் இந்தளவு வெகுவாக தாக்கியும், பல டெஸ்ட்களிலும் எதிலும் கண்டுபிடிக்க முடியாமல் போனது காரணமே நான் செய்து வந்த யோகப் பயிற்சிகள்தான் என்று வியப்பாக சொன்னார்கள்.

இல்லையேல், சராசரி மனிதனுக்கு இவ்வளவு அதிக சதவீதமான பிளாக் இருந்த போதிலும் சாதாரணமாக இருந்திருக்க முடியாது என்று வியந்தனர். மேலும், அவர்கள் இது பரம்பரை நோய் என்று கூறினர். எனது அப்பா, சித்தப்பா, மாமா அனைவரும் இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள். யோகப் பயிற்சி இல்லையென்றால், நிச்சயமாக 10 வருடத்திற்கு முன்பே என்னை இந்த நோய் தாக்கி இருக்கக்கூடும் என்று சொன்னார்கள்.

பின்பு angio எடுத்து முடித்தவுடன் உடனடியாக By-pass surgery செய்ய வேண்டும் என்று கூறினார்கள். சத்குரு அச்சமயம் அமெரிக்காவில் இருந்தார். சத்குரு அவர்களும் அவரது அருளையும், ஆசீர்வாதத்தையும் சொல்லி இருந்தார். பிறகு டாக்டரிடம் அடுத்த நாளே surgery செய்ய ஒத்துக் கொண்டேன். என்னுள்ளும் எந்தவிதமான பதற்றமும் பயமும் இல்லாமல் சத்குருவின் ஆசிர்வாதத்தோடு surgery இனிதே நடைபெற்றது.

எனது வாழ்வில் யோகப் பயிற்சியினால் மட்டுமே 2 முறை attack ஏற்பட்டும், என்னால் அதை சரியான முறையில் கவனித்து விழிப்புணர்வாக இருந்து கையாள முடிந்தது. எனது 2வது பிறப்பு என் வாழ்க்கையில் சத்குரு கொடுத்தது. ஈஷா யோகா வகுப்பு கொடுத்த ஒவ்வொரு கருவிகளுமே எனக்கு பயன்படக்கூடியதாக அமைந்தது.

நான் surgery முடிந்து ward க்கு வந்த பிறகு என் மனைவி என்னிடம் “surgery க்காக என்னை அழைத்துக் கொண்டு போனபோது சத்குருவினுடைய இருப்பை அவளால் உணர முடிந்தது என்றும், அவள் ‘பிரம்மானந்த ஸ்வரூபா’ உச்சரித்துக் கொண்டே இருந்தது அவளுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது என்றும் கூறினார்.

ஈஷா இல்லாமல் என் வாழ்வே இல்லை. நான் குணமடைய என்னை வாழ்த்திய அனைத்து ஈஷா ஆசிரியர்களுக்கும், தியான அன்பர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என் உள்ளங்கனிந்த கோடானு கோடி நன்றிகள்.

இது முழுதும் சத்குருவின் அருளால் மட்டுமே சாத்தியமானது!
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert