கடந்த சில தினங்களில் ஈஷாவில் நடந்த சில நிகழ்ச்சிகளைப் பற்றி உங்களுக்காக இங்கே பதிகிறோம்...

ஐஏஎஸ் அதிகாரிகளுடன் சத்குரு




கர்நாடகாவின் ஐஏஎஸ் அதிகாரிகள் அமைப்பு, ஏப்ரல் 10ம் தேதியன்று பெங்களூரூவில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், சத்குரு கலந்துகொண்டார். "உள்நிலை நிர்வாகம்" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் கலந்துகொண்டு சத்குருவிடம் உள்நிலை நிர்வாகம் பற்றிய கேள்விகள் கேட்டனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தூத்துக்குடியில் தேவி நேத்ரம்

தூத்துக்குடியில் தேவி நேத்ரம், Devi eye in tuticorin

தூத்துக்குடியில் தேவி நேத்ரம், Devi eye in tuticorin

லிங்கபைரவியின் அருளை அன்பர்கள் தங்கள் ஊர்களுக்கும் கொண்டு செல்லும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதுதான் தேவி நேத்ரம். இந்த தேவி நேத்ரத்தை ஊரில் எங்கு வேண்டுமானாலும் நிறுவிக்கொள்ளமுடியும். ஏப்ரல் 4ம் தேதியன்று, தூத்துக்குடியில், தியான அன்பர்கள் குரு பூஜை செய்து நேத்ரத்தை நிறுவினர்.

அமைந்துள்ள இடம்: மணிராம் எலக்ட்ரிகல்ஸ் காம்ப்ளக்ஸ், எட்டயபுரம் ரோடு, தூத்துக்குடி.

சத்குருவுடன் வினிதா பாலி உரையாடல்

சத்குருவுடன் வினிதா பாலி உரையாடல்

ஏப்ரல் 11ம் தேதி பெங்களூரூவில். சத்குருவுடன் வினிதா பாலி அவர்கள் நிகழ்த்திய உரையாடல் நடந்தது. “In Coversation with the Mystic” என்ற தலைப்பில் நடந்த இந்நிகழ்ச்சியில், வணிகம், நாட்டின் வளம் பற்றி விவாதிக்கப்பட்டது. வினிதா பாலி அவர்கள் சர்வதேச அளவில் அறியப்படும் ஒரு வணிகத் தலைவர். கோகோ கோலா, பிரிட்டானியா ஆகிய நிறுவனங்களில் அதிகாரப் பொறுப்பில் இருந்தவர். உலகக் குழந்தைகளின் நலனுக்காக ஐக்கிய நாடுகள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட 27 பேரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.