குருவின் மடியில்

குருவின் மடியில்
Day 1 Day 2 என்னை வசீகரித்த தமிழர்கள்…

8 Sep - 7.49pm

அலை அலை அலை…

எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். கேட்டவுடன் மனங்களையும் உயிர்களையும் அசைத்துப் பார்த்து குதித்தாடச் செய்யும் எழுச்சிமிக்க தாளம். தற்போது இதயம் அள்ளிக் கொண்டு போகும் வீடியோவாக…

சப்தத்தை மட்டும் கேட்டு ஆடியவர்களுக்கு இதோ வீடியோ பார்த்து ஆட ஒரு வாய்ப்பு… அலை அலை அலையாய்…

சென்னையில் சத்குருவுடன் நிகழவிருக்கும் சத்குருவுடனான ஈஷா யோகா வகுப்பின் மூலம் மீண்டும் இணைவோம்.

AnandaAlai-Lapofthemaster-Day2evening-17
AnandaAlai-Lapofthemaster-Day2evening-15
AnandaAlai-Lapofthemaster-Day2evening-20 AnandaAlai-Lapofthemaster-Day2evening-19
AnandaAlai-Lapofthemaster-Day2evening-18

8 Sep - 5.49pm

பக்தி ஒரு பித்து ஏறிய நிலை

AnandaAlai-Lapofthemaster-Day2evening-1
AnandaAlai-Lapofthemaster-Day2evening-2 AnandaAlai-Lapofthemaster-Day2evening-3
AnandaAlai-Lapofthemaster-Day2evening-4

உங்களுக்குள் பித்து ஏறிய நிலை இல்லாவிட்டால் நீங்கள் வாழ்வதற்கு தகுதியற்றவர் என்று அர்த்தம். அது எல்லை மீறிப் போனாலும் வாழ்வதற்கு தகுதி அற்றவர்தான்.

கேனோ ரோமி கார் ஓட்டும் போட்டிகளில் எல்லா சமயங்களிலும் சில நொடி வித்தியாசத்திலாவது வெற்றி பெற்றதுப் பற்றி அவரிடம் கேட்டபோது, நான் எப்போதும் out of control with control என்றார். நான் எல்லா சமயத்திலும் இப்படித்தான் இருக்கிறேன். ஆனால் இப்படி எல்லைமீறி போவதற்கு சற்று பயிற்சி செய்திருக்க வேண்டும்.

இந்த பாரம்பரியத்தில் போற்றி வணங்கப்பட்ட பக்தர்களை நாம் பார்த்து வந்திருக்கிறோம். மீராபாய் இதற்கு சிறந்த உதாரணம். தனக்குள் அத்தனை இனிமையான நிலையை அவர் அடைந்திருந்தார். பாவ ஸ்பந்தனா நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்திருந்தால் விழிப்புணர்வுடன் பித்தேறும் நிலையை உணர்ந்திருக்க முடியும். இது விழிப்புணர்வுடன் பித்தேறும் நிலை.

8 Sep - 5.38pm

வெற்றியின் வழி

ஆழமான அடிப்படை, மக்களை கவர்ந்திழுக்கும் திறமை! இவையிரண்டும் இந்த உலகில் வெற்றி பெற தேவையிருக்கிறது.

சத்குரு ஸ்ரீ பிரம்மா வாழ்ந்த காலத்தில் அவரை கடவுளாக மக்கள் பார்த்தார்கள். அவர் செய்ய வந்த செயலுக்கான அனைத்து திறமையும் அவருக்கு இருந்தது. ஆனால் அவர் மூடர்களின் திறமையை குறைத்து மதிப்பிட்டுவிட்டார்.

ஞானம் சக்திவாய்ந்ததுதான், ஆனால் மடமையும் சக்தி வாய்ந்தது. இதனை உணராததால் சத்குரு ஸ்ரீ பிரம்மாவால் அவர் நினைத்ததை செய்ய இயலவில்லை. ஆனால் நான் அப்படி இல்லை. நான் மூடர்கள் வந்தால் அவர்களிடமும் டீல் போடுவேன். என்னை பொறுத்தவரை ‘எது அறிவு, எது மடமை’ என்பது அல்ல. எது வேலை செய்கிறதோ அதுதான் முக்கியம். இந்த உலகத்துடன் சமரசம் செய்து கொள்ளவில்லை என்றால் வெற்றி கிடைக்காது.

8 Sep - 5.10pm

முரண்படும் கல்வி முறைகள்…

மேடையின் ஒருபுறம் ஈஷா ஹோம் ஸ்கூலின் மேற்கத்திய இசைக் கதம்பம்; மற்றொரு புறம் ஈஷா சம்ஸ்கிருதி குழந்தைகளின் பாரம்பரிய பாடல் மற்றும் களரிபயட்டு செயல்முறை. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பாடாய் தோன்றவில்லையா? சத்குரு பேசத் துவங்கியதும் இதைப் பற்றித்தான்.

இங்கு தமிழ்நாட்டில் 12,000 வருடமாக விவசாயம் செய்த பாரம்பரியம் உள்ளது. அதே நிலத்தை 12,000 வருடங்களாக பயிர் செய்யச் செய்துள்ளனர். ஆனால் ஒரே தலைமுறையில் நாம் அதனை சுரண்டி, அழிக்கத் துவங்கிவிட்டோம். இது நம் மனநிலையில் ஏற்பட்டுள்ள பிரச்சனை. எப்படி பொருட்களை உறிஞ்சுவது என்ற மனநிலையில் வாழத் துவங்கிவிட்டோம்.

சமீபத்தில் ஒருவர் தன் 4 1/2 வயது குழந்தையின் படிப்பு, திருமணம், சம்பாத்தியம், பென்ஷன் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். பிழைப்பு மிக முக்கியமாய் போய்விட்டது. எனக்கு எப்போதும் பிழைப்பைப் பார்த்துக் கொள்வது பெரிய விஷயமாக இருந்திருக்கவில்லை. ஒரு குழந்தையை அதன் முழு திறனிற்கு வளர்த்துவிட்டால் அக்குழந்தை தனக்கு வேண்டியதை நடத்திக் கொள்ளும் திறன்பெரும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அந்த குழந்தையை அதன் முழு உடல் திறனிற்கும் மனத் திறனிற்கும் வளர்த்துவிடுவது மட்டுமே. இந்த இரு கல்விமுறைகளும் ஒன்றுகொன்று முரணாக தோன்றினாலும் அவை முரண்பட்டதல்ல அவை குழந்தைகளின் முழு வளர்ச்சியின் மீது கவனம் கொண்ட கல்விமுறை என்றார்.

8 Sep - 4.41pm

சவுன்ட்ஸ் ஆப் ஈஷாவுடன் போட்டியிடும் ஹோம் ஸ்கூல் குழந்தைகள்…

AnandaAlai-Lapofthemaster-Day2evening-5
AnandaAlai-Lapofthemaster-Day2evening-6 AnandaAlai-Lapofthemaster-Day2evening-7

இதோ கடைசி வகுப்பு துவங்கிவிட்டது. சம்ஸ்கிருதியும் சவுன்ட்ஸ் ஆப் ஈஷாவும் பாடி கைதட்டல்கள் அள்ளிய மேடையை இப்போது ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள் அலங்கரித்து கொண்டிருக்கின்றனர்.

உயிர்நோக்கத்திற்கு சவுன்ட்ஸ் ஆப் ஈஷா ஒரு மெட்டமைக்க, போட்டிக்கு இதோ ஹோம் ஸ்கூல் குழந்தைகள் மனதை முழுவதும் சுண்டியிழுக்கும் வகையில் சூபி பாணியில் ஒரு மந்திர இசையை இசைத்துக் கொண்டிருக்கின்றனர். அற்புதம், என்று சொன்னால் போதாது, குழந்தைகளுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். அருமையான அரங்கேற்றம்.

8 Sep - 3.56pm

கொடுத்துக் கொண்டே இருக்கிறார்…

ஹைதராபாத்திலிருந்து ஆசிரமத்திற்கு முதல் முறையாக வந்திருக்கும் திரு ஹேமந்த் கூறும்போது, “இந்த நிகழ்ச்சி அருமையாக இருக்கிறது. நான் இங்கேயே இருந்துவிட வேண்டுமென விரும்புகிறேன். ஒவ்வொரு கட்டிடமும் ஒரு மனிதனுக்கு என்னவெல்லாம் தேவையோ அவையெல்லாவற்றையும் மனதில் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது. வாழ்க்கைக்கு தேவையானவை எல்லாம் இங்கே இருக்கிறது. அதைத் தாண்டிய தேவைக்கும் இங்கே உதவி இருக்கிறது,“ என்றார்.

“சத்குரு தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறார். இவ்வளவு கொடுத்த பின்னரும் இன்னமும் மடி மீது அமர்த்தி அருளுகிறார். என் உள்நிலையில் மிகப் பெரிய மௌனம் நிகழ்ந்திருப்பதை உணர்கிறேன்,” திருச்சி SRM பொறியியல் கல்லூரி மாணவர் திரு. சுனில்குமார் கூறினார்.

8 Sep - 2.07pm

AnandaAlai-Lapofthemaster-Day2evening-8
AnandaAlai-Lapofthemaster-Day2evening-9 AnandaAlai-Lapofthemaster-Day2evening-10
AnandaAlai-Lapofthemaster-Day2evening-11
AnandaAlai-Lapofthemaster-Day2evening-12 AnandaAlai-Lapofthemaster-Day2evening-13
AnandaAlai-Lapofthemaster-Day2evening-14

தமிழர்களைப் பற்றி சத்குரு பேசி அலை ஓய, ஒருசிலர் தங்கள் கைலாய அனுபவத்தை கண்மூடி அமர்ந்த சத்குருவின் முன்னிலையில் பகிர்ந்து கொள்ள, ஒரு குருவுடன் கைலாய யாத்திரை செல்வதிலுள்ள சிறப்பை உணர்ந்தனர்.

தற்சமயம் இடைவேளை. 4 மணிக்கு இறுதி வகுப்பு. மீண்டும் இணைவோம்.

8 Sep - 1.05pm

என்னை வசீகரித்த தமிழர்கள்…

ஜனவரியில் இரண்டு வார ஆசிரியர் பயிற்சி ஒன்று நடக்கவிருக்கிறது. இந்த அற்புத சாத்தியத்தை; பலர் வாழ்க்கையை தொடும் வாய்ப்பு உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆசிரியர் பயிற்சியை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்நிகழ்ச்சி தமிழில் நடக்கவிருக்கிறது.

சத்குரு இதைக் கூறியவுடன் கூட்டத்தில் கொஞ்சம் அமைதி நிலவியது.

தமிழர்களை பொறுத்த வரையில், ஈஷாவில் நாம் அவர்களுக்கு சாதகமாக ஒருதலைபட்சமாக இருந்திருக்கிறோம். இவர்களது அன்பு நம்மை வசீகரித்திருக்கிறது. ஏனெனில், உலகிலேயே தமிழர்களைப்போல ஆன்மீக பித்து பிடித்தவர்கள் கிடையாது. நீங்கள் டெல்லி, மும்பை, பெங்களூரு என பல ஊர்களில் நடந்திருக்கும் வகுப்புகளை பார்த்திருக்கலாம், ஆனால் தமிழ் வகுப்புகள்… உங்களுக்கு புரியவில்லையென்றால் சென்னையில் அடுத்த வாரம் நடக்கவிருக்கும் மெகா வகுப்புக்கு வந்து பாருங்கள். தமிழ் மக்களின் தீவிரம், அவர்களின் உணர்ச்சி தீவிரத்தை நீங்கள் காண முடியும்.

நான் தமிழன் அல்ல. ஆனால் அவர்கள் தங்களது தன்மையால் என்னை அவர்களை விரும்பும்படி செய்துவிட்டார்கள் (they forced me to like them). உணர்ச்சிப் பெருக்கில் அவர்களைப் போல கிடையாது. நான் உலகம் முழுவதும் சென்றிருக்கிறேன், பல அற்புதமான மனிதர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த பூமியில் தமிழர்களைப் போல வெகு சில மனிதர்களே இருக்கிறார்கள், என்றார்.

8 Sep - 12.34pm

கேதார் யாத்திரை அபாயமானதா?

AnandaAlai-Lapofthemaster-Day2-Sadhguru1
AnandaAlai-Lapofthemaster-Day2-Sadhguru2 AnandaAlai-Lapofthemaster-Day2-participants19

கேதாரில் நிகழ்ந்த பெரும் சோகம் நாம் அனைவரும் அறிந்ததே. இனி இந்த புனித யாத்திரை நம் கலாச்சாரத்திலிருந்து அழிந்துவிடுமா?

சத்குரு என்ன சொல்கிறார்…

“கேதாருக்கு இனி செல்வது மிக மிக அபாயமானது,” என இப்போது பிரச்சாரம் செய்யப்படுகிறது. சரியான முன்னேற்பாடுகளுடன் செல்லவில்லை என்றால் எல்லா இடமும் அபாயமானதுதான்.
நாம் ஈஷாவில் சுமார் 1500 பேரை அழைத்துக் கொண்டு அடுத்த வருடம் கேதாருக்கு செல்ல போகிறோம். தயார் நிலையில் ஒழுங்கான ஏற்பாடுகளுடன் சென்றால் இது அபாயமானது இல்லை என்பதை உணர்த்த வேண்டும்.

நான் இந்த வழிதடத்தில் சென்று ஒரு ஜென்மம் ஆகிவிட்டது. சத்குரு ஸ்ரீ பிரம்மா ருத்ரபிரயாகிலிருந்து கௌரிகுண்டம் வரை கால்நடையாக சென்றார். இறுதியில் குப்தகாசியை அடைந்தார். கடந்த முறை வெகு சிலருடன் சென்றேன், இம்முறை 1500 பேருடன் செல்லலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்,” என்று கூறி கேதாரின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

8 Sep - 11.54am

காசி…

காசி என்றால் ஒளியின் சிகரம் (டவர்), காசி இந்த உலகில் இருக்கும் நகரங்களில் எல்லாம் பழையது. ஆதியோகியும் இவ்விடத்தைவிட்டு செல்ல மனமில்லாமல் இருந்தார். ஒரு இளவரசியை திருமணம் செய்து கொண்டதால் இமயத்திலிருந்து காசிக்கு குடிபெயர்ந்தார். வஞ்சகமாய் பத்ரிநாத்திலிருந்து இடம் மாற்றப்பட்டார் என்று அவர்கள் குடிபெயர்ந்த கதையை அழகாய் விளக்கினார்.

காசி முன்பு எப்படி இருந்ததோ அப்படி இல்லை. அந்நகரத்தின் அழகிய கட்டமைப்பு சிதைக்கப்பட்டுவிட்டது. அங்குள்ள கோவில்கள் மிக அசுத்தமாக உள்ளன. பழைய சந்தைக் கடை போல் அங்குள்ள கோவில்களில் எல்லோரும் காசு, காசு, காசு… என ஓலமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கோவில் எப்படி இருக்கக் கூடாதோ அத்தனை அம்சமும் கொண்டதாய் உள்ளது காசி நகரத்து கோவில்கள். ஆனால் மாலை 6 மணியளவில் சப்தரிஷி ஆரத்தி என்றொரு வைபவம் நடக்கிறது.

சப்தரிஷிகள் சிவனிடமிருந்து பிரிந்து உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்றபோது, உங்களுடன் எப்படி நாங்கள் தொடர்பில் இருப்பது என்று கேட்டபோது சிவன் அவர்களுக்கு ஒரு முறையினை சொல்லிக் கொடுத்தார்.

அந்த முறையினை இன்று இந்த சப்தரிஷி பூஜையில் பூஜாரிகள் சடங்காக செய்கின்றனர். அவர்களுக்கு எப்படி சொல்லிக் கொடுக்கப்பட்டதோ அப்படியே செய்கின்றனர். அலைஅலையாய் சக்திப் பிரவாகத்தை இதன் மூலம் உருவாக்குகின்றனர். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாமல் இத்தனை சக்தி வாய்ந்த ஒரு செயல்முறையை செய்து கொண்டிருக்கின்றனர். இதுபோன்ற ஒரு சக்தி சூழ்நிலையை பூஜாரிகள் உருவாக்கி நான் பார்த்ததே இல்லை. இதுதான் சடங்குகளின் சக்தி.

ஈஷா யோகா மையத்திற்கு புதிதாய் வந்துள்ள உங்களில் சிலர், நாம் கடந்த 3 வருடங்களாய்தான் சடங்குகளை உருவாக்கி இருக்கிறோம் என்று தெரிந்து கொள்ளுங்கள். அதற்குமுன் சடங்குகள் என்றால், நாம் புறக்கணித்தே வந்துள்ளோம். சடங்குகள், இந்த உலகிற்கு தற்சமயம் தேவைப்படுகிறது. சடங்குகளை செய்து முடித்தபின் கைநீட்டுபவர்களாய் நீங்கள் இல்லாமல் இருந்தால் நீங்கள் இதுபோன்ற செயல்முறைகளில் ஈடுபட வேண்டும். ஏதோ சில பிரம்மச்சாரிகளும் ஆசிரியர்களும் மட்டுமே செய்து நாம் மக்களைச் சென்றடைய முடியாது. இதனால் நாம் பெரிய எண்ணிக்கையிலான மக்களை சென்றடைய இந்த விஞ்ஞானப்பூர்வமான செயல்முறைகளை உருவாக்கி வருகிறோம்.

உங்களில் பலர் இதனை எடுத்துச் செய்ய வேண்டும். மற்றொரு மனிதர் மலர்வதை உங்கள் கண்களால் பார்க்கும் பாக்கியம் உங்களுக்கு இதனால் கிடைக்கும். ஒருவரின் பெற்றோரால் இதனைச் செய்ய முடியாது, ஒருவரின் குழந்தையால் இதனை அவர்களுக்கு செய்ய முடியாது, நண்பரால் அவர் வாழ்வை இதுபோல் அணுக இயலாது. ஆனால் இதுபோன்ற செயல்முறைகளால் நீங்கள் நினைத்துப் பார்க்க இயலாத வகைகளில் ஒரு உயிரை உங்களால் தொட முடியும்.

இதனை நிகழச் செய்ய நாம் பல சக்திவாய்ந்த கருவிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். முதல் நிகழ்ச்சி தமிழில் நடைபெற உள்ளது என்று பேசிய சத்குரு, தமிழ் மக்களின் துடிப்பான நிலையை பற்றி, ஆன்மீகம் உணரும் இவர்களின் திறன் பற்றி வெகு நேரமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

8 Sep - 11.02am

சவுன்ட்ஸ் ஆப் ஈஷா

AnandaAlai-Lapofthemaster-Day2-soi-2
AnandaAlai-Lapofthemaster-Day2-participants-3 AnandaAlai-Lapofthemaster-Day2-participants-4
AnandaAlai-Lapofthemaster-Day2-participants-5 AnandaAlai-Lapofthemaster-Day2-participants-6
AnandaAlai-Lapofthemaster-Day2-participants-7
AnandaAlai-Lapofthemaster-Day2-participants-9 AnandaAlai-Lapofthemaster-Day2-participants-10
AnandaAlai-Lapofthemaster-Day2-participants-8

இதோ இவர்களின் உற்சாக குமுறல்கள் சவுன்ட்ஸ் ஆப் ஈஷாவை மேடையேற்றி இருக்கிறது. இசையும் கைதட்டல்களும் இணைய உற்சாக வெள்ளத்தில் பங்கேற்பாளர்கள்.

8 Sep - 10.51am

கதி கலங்கிக் கொண்டிருக்கிறது

AnandaAlai-Lapofthemaster-Day2-soi-1
AnandaAlai-Lapofthemaster-Day2-soi-3 AnandaAlai-Lapofthemaster-Day2-participants-1
AnandaAlai-Lapofthemaster-Day2-participants-2 AnandaAlai-Lapofthemaster-Day2-participants-13
AnandaAlai-Lapofthemaster-Day2-participants-12 AnandaAlai-Lapofthemaster-Day2-participants-14
AnandaAlai-Lapofthemaster-Day2-participants-11

இன்றைய நாள் சமஸ்கிருதி குழந்தைகளின் “காலைத் தூக்கி..” எனும் தில்லை அம்பலர், நடராஜர் பாடலுடன் துவங்கியது. மக்கள் இசையை அவர்கள் வளர்வதற்கு ஒரு கருவியாக பயன்படுத்தி வந்துள்ளனர் என்றார் சத்குரு.

தொடர்ந்து வெறும் சப்தங்களை பயன்படுத்தி ஒருவருக்கு ஒருவர் தொடர்பு செய்து கொள்ளுங்கள், வார்த்தைகளால் அல்ல என்று ஒரு முழு சப்த போரை துவக்கி வைத்திருக்கிறார்.

விநோத சப்தங்களும், சிரிப்பலையுமாய் கதி கலங்கிக் கொண்டிருக்கிறது ஆதியோகி ஆலயம்.

8 Sep - 10.12am

மதியதன் மயக்கத்தில் இருள் இருக்கும்
விதியதன் விளையாட்டில் பொருள் இருக்கும்

இயற்கையின் பிடியில் எழில் இருக்கும்
இறைவனின் அருகில் இதம் இருக்கும்

அன்னையின் மடியில் அன்பிருக்கும்
குருவின் மடியில் அருளிருக்கும்!

சத்குருவின் வரவிற்காக காத்திருக்கிறார்கள்…

8 Sep - 9.23am

சப்பாத்தியில் சொதப்புவது எப்படி?

AnandaAlai-Lapofthemaster-Day2-dining11
AnandaAlai-Lapofthemaster-Day2-dining12 AnandaAlai-Lapofthemaster-Day2-dining13
AnandaAlai-Lapofthemaster-Day2-dining9 AnandaAlai-Lapofthemaster-Day2-dining8
AnandaAlai-Lapofthemaster-Day2-dining2

9000 சப்பாத்திகள் செய்ய திட்டமிட்டபடி களத்தில் இறங்கியது கிச்சன் டீம்! ஆனால் திடீரென மாவு பிசையும் இயந்திரம் பழுதுபட்டது.

பெரும்பாலும் வடஇந்தியர்கள் வந்திருப்பதாலும் இந்த மெனு சத்குருவால் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது என்பதாலும் சப்பாத்தியிலிருந்து இட்லிக்கு மாறவும் முடியாது. எப்படியோ சரி செய்ய முயன்ற போது மாவை கட் செய்யும் பகுதியும் சப்பாத்தியை திரட்டும் பகுதியும் வேலை செய்யாமல் நின்று போய் பெரிய அளவில் சொதப்பியது.
தன்னார்வத் தொண்டர்களும் இல்லை. வேறு என்ன?

ஆசிரமவாசிகளும் பிரம்மச்சாரிகளும் என சுமார் 30 பேர் கை கொடுக்க, காலை 4 மணியிலிருந்து 9 மணி வரை தொடர்ந்து நின்று கொண்டே சப்பாத்தி திரட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சோர்வோ சோகமோ இல்லை.

ஒரு பக்கம் சிரிப்பும் ஆரவாரமும் இருக்க, இன்னொரு பக்கம் “சீக்கிரம்! சீக்கிரம்!” என்ற குரலோடு கிச்சன் அமர்க்களப்பட “இன்னும் அரை மணி நேரத்தில முடிச்சிடுவோம்” என்று நம்பிக்கை தெரிவித்தது கிச்சன் டீம்!

காலையில் வெறும் கஞ்சி கடலை மட்டுமே உணவாய் கொண்ட இவர்களுக்கு மதியம் சூடான சப்பாத்தி தயாராகிக் கொண்டிருக்கிறது. பங்கேற்பாளர்களிடம் சொல்லி விடாதீர்கள்.

8 Sep - 6.15am

அதிகாலை 5.30 மணிக்கு குருபூஜா

AnandaAlai-Lapofthemaster-Day2-gurupooja1
AnandaAlai-Lapofthemaster-Day2-morning-11 AnandaAlai-Lapofthemaster-Day2-morning-12
AnandaAlai-Lapofthemaster-Day2-morning-3 AnandaAlai-Lapofthemaster-Day2-morning-4
AnandaAlai-Lapofthemaster-Day2-morning-14 AnandaAlai-Lapofthemaster-Day2-morning-1
AnandaAlai-Lapofthemaster-Day2-morning-2 AnandaAlai-Lapofthemaster-Day2-morning-5
AnandaAlai-Lapofthemaster-Day2-morning-6 AnandaAlai-Lapofthemaster-Day2-morning-7
AnandaAlai-Lapofthemaster-Day2-gurupooja2
AnandaAlai-Lapofthemaster-Day2-morning-13 AnandaAlai-Lapofthemaster-Day2-morning-8

வானம் கூரையானால் வண்ணம் கருமையானால் விளக்கு ஒளி தந்தால் திறக்காத கதவுகளும் திறந்திடுமே!
ஆம்! விடியாத வானத்தின் கீழ் மரங்கள் சுற்றிலும் சூழ்ந்திருக்க சூரியகுண்டம் முன்பே அதிகாலை பயிற்சி துவங்கியது.

குரு பூஜாவைத் தொடர்ந்து யோக நமஸ்காரம் பயிற்சி செய்தனர். சூரியகுண்டத்தை நோக்கி நின்று யோக நமஸ்காரம் செய்ய மெல்ல சூரியன் வானில் தலைகாட்ட மிதமான சூட்டில் தொடர்ந்து ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சியும் சேர்ந்தே செய்தனர்.

7 Sep - 9.53pm

உயிர்வரை இனித்திட

பூக்கள் மலர்வதும் உயிர்நோக்கம் தான்
மரங்கள் வளர்வதும் உயிர்நோக்கம் தான்
ஆசை பிறப்பதும் உயிர்நோக்கம் தான்.
ஆழ்மனதில் இருப்பதுவும் உயிர்நோக்கம் தான்
உயிர் குருவை நாடுவதில்தான் என்ன அதிசயம் இருக்கிறது?

சுமார் ஐந்தரை மணி நேரம் குருவுடன்! இந்நாள் இனித்திடும் அனுபவமே! நேரம் போனது தெரியவில்லை. உணவும் தூக்கமும் மறந்து உயிர்கள் ஆனந்த அதிர்வில்.

சத்குருவின் இருப்பில் உயிர் வரை இனித்திட செல்ல மனமில்லாமல் மெல்ல நகர்ந்தனர். நாளை காலை சூரியோதயத்தில் சூரியகுண்டம் முன் சந்திக்க காத்திருக்கிறார்கள் இவர்கள். நாமும் சந்திப்போம் சூரியகுண்டத்திலிருந்து… வணக்கம்.

7 Sep - 9.29pm

ஆவிகள் உலகம்…

இறப்பிற்கு பின் உடலை இழந்த உயிர் தனது பிராரப்த கர்மாவை முடிக்காமல் இருந்திருந்தால் அந்த உயிர் தனது உடலைத் தேடிச் செல்லும், அதனால் உடலை எரிப்பது நல்லது. அந்த உயிர் உடலைவிட்ட பின் நிர்ணயிக்கும் திறனை இழந்துவிடுகிறது. அதனால் அந்த உயிர் அலைந்து திரியலாம்.

புளிய மரத்தில் ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைவாக இருக்கும். அதனால் எந்த பறவையும் எந்த விலங்கும் இரவில் உறங்கச் செல்லாது. இறந்த உயிர் அங்கே ஒரு இறப்பைப் போன்ற சூழ்நிலை இருப்பதால், அந்த மரத்தை நோக்கி ஈர்க்கப்படுகிறது.

மிகவும் உயர்ந்த நிலையில் இருக்கும் யோகியின் சுவாசமும் மிகவும் குறைவாகவே இருக்கிறது. அந்த உயிர் யோகியை நோக்கியும் ஈர்க்கப்படலாம். நாகப்பாம்பின் சுவாசமும் நீண்டிருப்பதால், அந்த உயிர் நாகங்களை நோக்கியும் ஈர்க்கப்படலாம்.

இதுபோன்ற உயிர்களுக்கு நாம் “ஆவி” என்று சொல்லும் வார்த்தை மிகச் சரியான வார்த்தை. அது வெறும் காற்றைப் போலத்தான். அதற்கு உடலோ மனமோ இல்லை. அது உங்களுக்கு தீங்கு விளைவிக்க முடியாது. தன் வாசனைகள் ஈர்க்கும் பக்கத்திற்கு செல்கின்றன.

7 Sep - 9.14pm

மரணத்தின் புதிர்கள் அவிழ்கின்றன…

AnandaAlai-Lapofthemaster-Day1-Sathsang-1

AnandaAlai-Lapofthemaster-Day1-Sathsang-2

வெவ்வேறு விதமான மரணங்கள் சம்பவிக்கின்றன. உடல் உடைந்தாலோ அல்லது நேரம் முடிந்துவிட்டாலோ மரணம் நிகழ்கிறது. உடல் உடையும்போது உயிர் வெளியேறுகிறது.

விபத்து, நோய்… இவையெல்லாம் இயற்கையற்ற மரணங்கள்.

சஞ்சிதா கர்மா – இது ஒருவரின் கர்மக் கிடங்கு. எங்கு உயிர் தொடங்கியதோ அங்கிருந்து இதில் சேர்க்கப்பட்டு, குவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலே உங்கள் உடல் உற்பத்தியாவதற்கு தேவையான தகவல்களை வழங்குகிறது.
இந்த குறிப்பிட்ட ஜென்மத்திற்கு வழங்கப்படும் கர்மத்தை பிராராப்த கர்மா என்று அழைக்கிறோம்.

பல பாலயோகிகளை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மிக இளைய வயதில் இவர்கள் இயற்கையான மரணம் தழுவியிருப்பார்கள். பிற மனிதர்களைப் போல் அல்லாமல் படுவேகமான ஒரு வாழ்க்கை வாழ்ந்து, மக்கள் வியந்துபோகும்படி வாழ்ந்து, சீக்கிரமே கரைந்து விடுகின்றனர். அவர்களுடைய கர்மம் சீக்கிரம் கறைந்துவிடுகிறது.

தகவல் தீர்ந்து போனால், மரணம் சம்பவிக்கும். இயற்கை மரணத்தை தழுபவர்கள் தங்கள் மரணத்தின் கடைசி தருணங்களில் முற்றிலும் புதிய வகையான ஒரு சமநிலை அவர்களுக்குள் எழுவதை நாம் பார்க்க முடியும் என்று மரணத்தைப் பற்றி கடந்த ஒரு மணி நேரமாக பேசிக் கொண்டிருக்கிறார் சத்குரு.

மரணத்தைப் பற்றி பேச என்ன இருக்கிறது என்கிறீர்களா? இங்கு சத்குரு பேசிக் கொண்டிருப்பது மர்மக் கதைகளுக்கெல்லாம் மர்மமாக இருக்கிறது. நமக்கு புரியாத உலகின் கதவுகளை மென்மையாக திறந்து கொண்டிருக்கிறார்.

7 Sep - 8.36pm

ஞானோதயம் உங்களுக்கும் சாத்தியமே!

இது நிகழ்வது சாத்தியம்தான்! இந்த பிறவியிலேயே சாத்தியம்தான்!

இப்போது இருக்கும் மருத்துவ வசதிகளைக் கொண்டு, உங்களது ரத்தத்தில் இருக்கும் வேதியல் பொருட்களை எடுத்துக் காட்ட முடியும், ‘5 நிமிட கோபம் எவ்வளவு விஷத்தை உற்பத்தி செய்கிறது என்பதை இப்போது நிரூபிக்க முடியும்.

உங்கள் உடல், மனம், உங்களது இடைவிடாத சாதனா மற்றும் எதுபோன்ற வார்த்தைகளை பேசுகிறீர்கள் எது போன்ற சப்தங்களை கேட்கிறீர்கள், உங்கள் நரம்பு மண்டலத்தை எப்படி வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்கு வாழ்வை கிரகித்துக் கொள்ளும் சூட்சுமம் ஏற்படும். இவ்வாறு நிகழ்ந்தால் நீங்கள் எது போன்ற குப்பைகளை சுமந்து வந்திருந்தாலும் பரவாயில்லை .அனைவருக்குமே இது இந்த பிறவியிலேயே சாத்தியம்தான்!

7 Sep - 8.09pm

மௌனத்தின் விஞ்ஞானத்தை விளக்கிக் கொண்டிருக்கிறார்…

எப்படி வெளிசூழ்நிலையிலிருந்து ஏற்படும் சப்தம் நம் மீது தாக்கம் ஏற்படுத்துகிறது என்று விளக்கிய சத்குரு. தன்னை எப்படி வைத்துக் கொள்வது என்றும் பேசிக் கொண்டிருக்கிறார். வெவ்வேறு வகையான சப்தங்கள் நம் புரிதலுக்கு எப்படி உறுதுணையாக இருக்கின்றன, எப்படி இடைஞ்சலாக இருக்கின்றன என்பதையும் விளக்கினார்.

மௌனத்தில் 4 மணி நேரம் கழித்த இவர்களுக்கு சத்குரு பேசுவது அனுபவத்தில் புரிந்திருக்கும்.

மெதுவாக, மொழி நம் மீது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி பேசத் துவங்கியிருக்கிறார்.

7 Sep - 7.49pm

மந்த, மத்தியம உத்தம

“யோகிகளில் மூன்று வகை. மந்த, மத்திம, உத்தம.

மந்த – உச்சபட்ச சுவையை உணர்ந்தவர், ஆனால் நாள் முழுவதும் அந்த விழிப்புணர்வில் வாழாதவர். இது அமைதியாக இருப்பதைப் பற்றியல்ல, இது பெயரில்லா பரவசத்தில் ஆழ்வதைப் பற்றியது. இது முதல் வகை. இவருக்கு விழிப்புணர்வைப் பற்றி நினைவூட்டல்கள் வழங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

மத்தியம – இவர் சதா சர்வகாலமும் புரிதல் நிலையில் இருக்கிறார். பரவசத்தில் இருக்கிறார். ஆனால் அவரால் வெளிசூழ்நிலையை கையாள முடியாது. இந்தியாவில் பூஜை செய்து வழிபடப்பட்ட பல யோகிகள் இந்நிலையில் இருந்தனர். தன்னை முற்றிலும் மறந்த நிலை. வெளிசூழ்நிலையிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலை. இராமகிருஷ்ணரும் நீம் கரோலி பாபாவும் இதற்கு சிறந்த உதாரணங்கள். இந்நிலை எத்தனை அற்புதமாய் இருந்தாலும் நீங்கள் இந்நிலையில் வெகு காலம் இருக்க முடியாது.

உத்தம – இவர் உச்சபட்ச நிலையுடன் எப்போதும் தொடர்பில் இருப்பவர். அதே சமயம் இவரால் வெளியுலக சூழ்நிலையை சுலபமாக கையாள முடியும். இவர் யோகி தானா என்று சந்தேகப்படும் அளவிற்கு இவர் இருப்பார். தத்தாத்ரேயா இவ்வகை,” என்று கூறிய சத்குரு பரம ஆழமாய் அவரைப் பற்றி கதைகள் மூலமும் அவரது பாதையைப் பற்றியும், அவர் வாழ்ந்த காலத்தில் அவரை மக்கள் எப்படி சிவனாய் வணங்கினர் என்பதையும் விளக்கினார்.

புரிதலின் ஆழத்தைப் பற்றி தத்ரூபமாக விளக்கினார்.

7 Sep - 7.19pm

தீவிரமான தியானம்

AnandaAlai-lapofthemaster-day-1-meditating1

அழகுக் கடலலை எத்தனை அழகாய்ப் புரண்டாலும் மொத்தமாய்க் கரையில் மோதும். ஆனால் இங்குக் கூடும் மக்கள் அலை எத்தனை எத்தனை ஆனந்த அலையை ஏற்படுத்தி ஒழுங்குடன், தம் குருவுடன் சங்கமிக்கும் காட்சியைக் காண இரு கண் போதாது!

சத்குரு தீவிரமாக ஒரு பிராசஸ் செய்ய கிட்டதட்ட அரை மணி நேரம் அவருடன் கலந்தனர்.

7 Sep - 6.38pm

ஒரு மௌனம் சலனமில்லாமல் மேடை ஏறியது…

AnandaAlai-lapofthemaster-day-1-meditating4 AnandaAlai-lapofthemaster-day-1-meditating3
AnandaAlai-lapofthemaster-day-1-meditating6 AnandaAlai-lapofthemaster-day-1-meditating5
AnandaAlai-lapofthemaster-day-1-meditating2
AnandaAlai-lapofthemaster-day-1-meditating8 AnandaAlai-lapofthemaster-day-1-meditating7

சரியாக 6.20 மணிக்கு துவங்கியது நிகழ்ச்சி. ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சியுடன் மாலையை துவங்கியுள்ளனர். பங்கேற்பாளர்கள் கண்மூடி ஷாம்பவியில் ஆழ, சலனமில்லாமல் மௌனமாய் மேடையேறி அமர்ந்திருக்கிறார் சத்குரு…

ஆங்காங்கே கிறீச்சிடும் பங்கேற்பாளர்களும், ஆனந்த அலறல்களுமாய் அரங்கின் மௌனம் கிழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

7 Sep - 6.17pm

அதிர்ந்திடும் அரங்கம்

AnandaAlai-lapofthemaster-samskriti-day1-1

AnandaAlai-lapofthemaster-soi-day1-1

இடைவேளை என்றதும் வெளியே செல்ல மனமில்லாத பங்கேற்பாளர்கள் 6 மணி வகுப்பிற்கு 4 மணிக்கே வந்து காத்திருக்க மௌனத்தின் அமைதியும் தியானத்தின் தீவிரமும் இவர்களை குருவின் மடியில் இட்டுவிட்டதோ?!

அசைவற்ற இவர்கள் உள்நிலையை சம்ஸ்கிருதி மாணவர்களின் “நிர்வாண ஷடகம்” கொஞ்சம் அதிரச் செய்திட சத்குருவின் வருகைக்காக காத்திருக்கிறார்கள்

7 Sep - 5.33pm

நிசப்தத்தில் மூழ்கினர்

AnandaAlai-lapofthemaster-nisaptham1
AnandaAlai-lapofthemaster-nisaptham3 AnandaAlai-lapofthemaster-nisaptham4
AnandaAlai-lapofthemaster-nisaptham2

பேசிப் புரியவைக்கும் சூழ்நிலையிலேயே பல செயல்களில் பல குழப்பங்கள் நடக்கிறது.

3000 பேர் சாப்பிட்டார்கள். பல பங்கேற்பாளர்களே தன்னார்வத் தொண்டில் இணைய அத்தனை பேருக்கும் உணவு பரிமாறப்பட்டது. தியானலிங்கம் மற்றும் லிங்கபைரவியை காண வரிசையில் மக்கள், என எத்தனையோ செயல்கள் எந்த இடரும் இன்றி நடந்து கொண்டிருக்கிறது. 4 நான்கு மணி நேர இடைவேளை, ஆனால் ஒருவரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை!

எங்கெங்கும் அமைதி! ஆழமான அமைதி! ஆங்காங்கே கண்களை மூடி பங்கேற்பாளர்கள் அமர்ந்திருக்க ஆசிரமம் முழுக்க நிசப்தத்தில் மூழ்கி இருக்கிறது.

AnandaAlai-lapofthemaster-nisaptham-5
AnandaAlai-lapofthemaster-nisaptham-7 AnandaAlai-lapofthemaster-nisaptham-6
AnandaAlai-lapofthemaster-nisaptham-10 AnandaAlai-lapofthemaster-nisaptham-13
AnandaAlai-lapofthemaster-nisaptham-11
AnandaAlai-lapofthemaster-nisaptham-14 AnandaAlai-lapofthemaster-nisaptham-8
AnandaAlai-lapofthemaster-nisaptham-12

7 Sep - 5.15pm

சந்திரனின் வாழ்வு

AnandaAlai-Nilavu1

AnandaAlai-lapofthemaster-dias1

ஈஷாவில் நம் அலங்காரம் தனித்துவமாகவே இருக்கும். அதுவும் குரு அமரும் மேடை என்றால் கேட்கவா வேண்டும்?

சத்குருவின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள மேடை அலங்காரம் சுமார் 20 நாட்களுக்கு முன்பே துவங்கிவிட்டது. எல்லையில்லா பிரம்மாண்டத்தை எல்லை கொண்ட விழிகளுக்கு அளிக்க இயற்கை தேர்ந்தெடுக்கும் நிறம் நீலமே! எல்லையில்லா சாத்தியத்தை வழங்கிடும் தன் குருவிடம் இதயம் பறிகொடுத்த நம் தன்னார்வத் தொண்டர்கள் தேர்ந்தெடுத்த நிறமும் நீலமே!

கண்களை பெரிதாக விழுங்காத மழுங்கிய நீலத்தில் அமைந்து, திரையில் ஆங்காங்கே தாமிரத்தகடுகள் பதிக்கப்பட்டு நிலவின் பதினைந்து முகங்கள் வளர்வதும் தேய்வதுமாய் அதில் பல நாட்கள் வண்ணம் தீட்டப்பட்டு, இடையே மஞ்சள் நிறக்கயிறு அவற்றை இணைக்க, இந்த அழகு காண்பவரின் இதயத்தை விழுங்கியது உண்மைதான்.

இருப்பதும் தேய்வதும் இல்லாமல் போய் விடுவதுமாய் சந்திரனின் வாழ்வு நமக்கு வாழ்வின் நிலையின்மையை கூறுகிறதா என்ன?

7 Sep - 2.43pm

குருவின் மடி, அருளின் வழி

ஆதியோகி ஆலயத்தில், மக்களின் ஆனந்தப் பெருங்கடல் திரண்டிருக்கும் அற்புதத் தருணம் இது. குருவின் மடியில் சுரக்கும் அருளை அள்ளிப் பருகக் காத்திருக்கும் தாகம் கொண்ட உள்ளங்களின் தவக்கோலம் இது.

இவர்களின் தணியாத தாகத்திற்கு வற்றாத அருவியென வீற்றிருக்கும் சத்குருவின் தன்னலமற்ற அர்ப்பணிப்பை விளக்க வார்த்தைகளை வலைவீசித் தேடினாலும் கிடைக்காது.

என் மடியில் நடப்பதுபோல் நடங்கள். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் என் மீது வைப்பதாக இருக்கட்டும். உங்களுக்குள் அப்படியொரு உணர்ச்சி நிலை எழ வேண்டும் என்று விடை பெற்றிருக்கிறார் சத்குரு.
ஏன் இவர்கள் அமரும் விதமும், நடக்கும் விதமும், மௌனத்தில் கரையும் விதமும் என அத்தனையிலும் அவரைக் காண முடிகிறது. குருவின் மடி, அருளின் வழி.

7 Sep - 2.16pm

கேள்விக்கு பதில் மௌனமே!

AnandaAlai-Lapofthemaster-meditation7
AnandaAlai-Lapofthemaster-meditation9 AnandaAlai-Lapofthemaster-meditation8
AnandaAlai-Lapofthemaster-meditation6
கேள்வி
சத்குரு! “இந்த பொருள் உடலைத் தாண்டி நீங்கள் என்னை உணரவில்லை என்றால், நான் உங்கள் குரு அல்ல,” என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். நான் அதை எப்படி உணருவது?

சத்குரு:

உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்பதை நீங்கள் உணர்ந்தால் நீங்கள் அமைதியாகி விடுவீர்கள். உங்களுக்கு என்ன தெரியும்? தண்ணீர் தெரியுமா? “அது 100 டிகிரியில் கொதிக்கிறது என்பது எனக்கு தெரியும்” என்று சொல்கிறீர்களா? அது ஏன் 100 டிகிரியில் கொதிக்கிறது எனத் தெரியுமா?

இப்படி “ஏன்? ஏன்?” என போய்க் கொண்டிருந்தால் எதுவும் எனக்கு தெரியாது என்பது உங்களுக்கு புரியும். அப்போது மௌனம் மட்டுமே இருக்கும்!

இப்போதிலிருந்து 6 மணி வரை மௌனத்தில் இருங்கள் என்று இடைவெளிவிட்டுச் சென்றுள்ளார்.

7 Sep - 1.46pm

வாழ்க்கை குளியலறையா?

AnandaAlai-Lapofthemaster-sathsang-day1-1
AnandaAlai-Lapofthemaster-sathsang-day1-4 AnandaAlai-Lapofthemaster-sathsang-day1-5
AnandaAlai-Lapofthemaster-sathsang-day1-3 AnandaAlai-Lapofthemaster-sathsang-day1-6
AnandaAlai-Lapofthemaster-sathsang-day1-2
கேள்வி
6 வயது பெண் குழந்தை கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிகழ்வை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது அந்த குழந்தையின் கர்மாவா?

சத்குரு:

சில நூற்றாண்டுகளுக்கு முன் நம் நாட்டில் போலீஸ் இல்லை. நம் நாடு அது போல நிர்வகிக்கப் படவில்லை. நம் நாட்டிற்கு வந்திருந்த பல வரலாற்று ஆசிரியர்கள், “இந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வழிப்பறியோ எந்த பயமோ இன்றி சென்று வரலாம்,” என்று எழுதியிருந்தார்கள். அச்சமயம் நம்மிடம் எந்த போலீஸும் இல்லை.

இங்கே ஒவ்வொரு குழந்தையும் “நீ செய்யும் செயல் உனக்கு திரும்பி வரும்,” என்று சொல்லிக் கொடுக்காமல் வளர்க்கப்படவில்லை.

சுயமாக தன் வாழ்க்கையை நிர்வகிக்க கற்றுக் கொடுத்ததால் வெளியிலிருந்து நாம் அதை கட்டுப்படுத்த தேவையில்லை. தற்போது இளைஞர்கள்தான் செய்தது தனக்கு திரும்பி வரும் எனத் தெரியாமல் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைமையில் போலீஸையாவது நாம் அதிகரிக்க வேண்டும்.

தற்போது கூட நம் நாட்டில் இந்தக் கலாச்சாரம் இருக்கிறது. நீங்கள் இந்த கிராமத்திற்குள் நடந்து சென்றால் உங்களை யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள். அவர்கள் பணத்திற்கு பாலுணர்வுக்கும் அப்பாற்பட்டவர்கள் அல்ல. நாம் செய்யும் செயல் நமக்கு திரும்பிவரும் என்பது இந்த நாட்டையே நிர்வகித்தது.

இப்படி நம்மை நாமே நிர்வகித்தால் வாழ்க்கை இலகுவானதுதான். நீங்கள் கவனித்திருக்க முடியும், குளியலறையில் மட்டுமே பாட்டு பாடுபவர்கள் இருக்கிறார்கள். நாம் நாட்டை முறைப்படி நிர்வகித்தால் எங்கு சென்றாலும் பாட்டு பாடலாம்.

7 Sep - 12.44pm

தவறவிடுவது தவறா?

வாழ்வை தவறவிடுவது தவறா? எதுவும் தவறில்லை. எதுவும் சரியில்லை. ஆனால் உங்கள் தாயின் பிரசவ வலிதான் வீணாகிப் போய்விடும். நீங்கள் வாழ்க்கையை வாழ முடியாது. நீங்கள் வாழ்க்கையில் எதுவும் செய்ய முடியாது. எல்லாம் தானாகவே நிகழ்கிறது. நீங்கள் வெறும் உயிராக இருக்கத்தான் முடியும்.

7 Sep - 12.34pm

இதுதான் குருவின் மடியோ?

AnandaAlai-LapOfTheMaster-meditation3
AnandaAlai-LapOfTheMaster-meditation5 AnandaAlai-LapOfTheMaster-meditation2
AnandaAlai-LapOfTheMaster-meditation1

பூதேஷ மந்திரம் உச்சத்தை அடைய கண்களை மூடி சும்மா உட்காருங்கள் என்றார். சில நொடிக்குள் அங்கே என்ன நடந்த்து? கண்களை மூடிய நிலையில் தாங்கள் எங்கே சென்றோம் என பலருக்கும் புரியவில்லை.

அணைத்திடும் சுகம்!
இன்மையின் முகம்!
அருள் தரும் திருவடி!
இதுதான் குருவின் மடியோ!

7 Sep - 12.27pm

தயார் அடைகிறார்கள்…

உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள் என்று சொன்ன சத்குரு, “பூதேஷ…” மந்திரத்தை உச்சரிக்க, அவருடன் அத்தனை பங்கேற்பாளர்களும் ஒரே குரலில் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். எதற்கு? எப்படி? நமக்கு பிடிபடவில்லை…

7 Sep - 12.24pm

குருவின் மடியில் இருப்பது என்றால்?

AnandaAlai-lapofthemaster-samskriti-1
AnandaAlai-lapofthemaster-samskriti-2 AnandaAlai-lapofthemaster-samskriti-4
AnandaAlai-lapofthemaster-samskriti-3

குருவின் மடியில் இருப்பது என்றால் உங்களுக்குள்ளே ஒரு இலகுவான (ease) நிலையில் இருப்பது. உங்கள் இதயம் தானாக நடக்கிறது. அதோ அந்த சூரியனும் தானாக உதிக்கிறது. நீங்கள் செய்வதெல்லாம் உங்களை இலகுவாக (ease) வைத்துக் கொள்வது மட்டுமே.

இங்கு பல நிலைகளில் தன்னை தயார் செய்துள்ள மக்கள் இருக்கிறார்கள். நாம் வெகு தீவிரமான சாதனாவில் இறங்க முடியாது. ஆனால் நிச்சயமாக அத்தனை பேருக்கும் இங்கு என்ன நடக்கவிருக்கிறதோ அது கிடைக்கும் வகையில் நாம் பார்த்துக் கொள்வோம்.

7 Sep - 11.43am

தமிழில் துவங்கியது ஆங்கில சத்சங்கம்

AnandaAlai-LapOfTheMaster-Day-1-N-1
AnandaAlai-LapOfTheMaster-Day-1-N-2 AnandaAlai-LapOfTheMaster-Day-1-N-3
AnandaAlai-LapOfTheMaster-Day-1-N-4

தமிழில் துவங்கியது, ஆங்கில சத்சங்கம்! மேடையேறிய சத்குரு தமிழ் பாடலுடன் துவங்கினார்.

உயிர் நோக்கம்! உயிர் நோக்கம்!

தமிழ் புரியாத மக்களின் உயிர் நோக்கம் தொடப்பட இவர்களின் கண்ணீரில் துவங்கியது இன்றைய சத்சங்கம்!

7 Sep - 11.28am

அருள் முகம் காண காத்திருக்கிறார்கள்

AnandaAlai-LapoftheMaster-Participants1
AnandaAlai-LapoftheMaster-Participants2 AnandaAlai-LapoftheMaster-Participants3
AnandaAlai-lapofthemaster-participantscoming

மக்கள் கூட்டம் நிரம்பிய ஆதியோகி ஆலயம்! குருவின் வருகைக்காக காத்திருக்கும் அழகிய மேடை!

இங்கு ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடக்கிறதா என்றே தெரியாத வண்ணம் எந்த பரபரப்புமின்றி நிகழ்ச்சி துவங்கவுள்ளது. பலரும் இப்போதுதான் முதல்முறையாக சத்குருவை பார்க்க போகிறார்கள்.

புகைப்படத்தில் பார்த்த அந்த முகம் தேடி, தீட்சையின்போது பெற்ற அந்த அதிர்வுகள் ஏந்தி வந்த இவர்கள் இன்று அருள் முகம் காண காத்திருக்கிறார்கள்.

7 Sep - 11.02am

மேடையில் சவுன்ட்ஸ் ஆப் ஈஷா

AnandaAlai-Lapofthemaster-soi-1

சுகமான சாம்பிராணி வாசம், இதமான இசை, மனதை வருடும் புல்லாங்குழல் என சத்குருவை வரவேற்று காத்திருக்கிறது அரங்கம். 11.30 மணிக்கு மேடையேறவிருக்கிறார் சத்குரு

7 Sep - 8.15am

பன்முகம் கொண்ட கலாச்சாரம்

AnandaAlai-LapOfTheMaster-Day-1-participants1
AnandaAlai-LapOfTheMaster-Day-1-participants3 AnandaAlai-LapOfTheMaster-Day-1-participants5
AnandaAlai-LapOfTheMaster-Day-1-participants4 AnandaAlai-LapOfTheMaster-Day-1-participants6
AnandaAlai-LapOfTheMaster-Day-1-participants2

கொட்டித்தீர்த்த மழை கொஞ்சம் நின்று வானம் திறக்க அதிகாலையில், இளம் வெயில் சூட்டில் பயிற்சி முடித்துவிட்ட பங்கேற்பாளர்கள் தியானலிங்கம், லிங்கபைரவி, தீர்த்தகுண்டம் என ஆசிரமத்தை வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

“ஏவண்டி எக்கட உண்ணாரு?” என்று ஒரு பக்கம், “கைசா ஹே” என இன்னொரு பக்கம். இதற்கிடையே வெளிநாட்டவர்கள் இந்திய பாணியில் “நமஸ்காரம்” சொல்வது மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.

பலவிதமான உடைகள், பல வண்ணங்கள், பல கலாச்சாரங்கள், பல மதங்கள், பல மொழிகள், ஏன்?! பல நாட்டவரும் ஒன்றாக கூடியிருக்கும் இன்றைய ஆசிரம சூழ்நிலையை பார்க்கும்போது “ஈஷா யோகா” மதம் மொழி நாடு என்ற எல்லையையும் தாண்டி மனிதர்களை மலரச் செய்திருப்பது புரிகிறது.

AnandaAlai-Lapofthemaster-preparation1
AnandaAlai-Lapofthemaster-preparation5 AnandaAlai-Lapofthemaster-preparation4
AnandaAlai-Lapofthemaster-preparation3 AnandaAlai-Lapofthemaster-preparation6
AnandaAlai-Lapofthemaster-preparation2

7 Sep - 7.15am

குருவின் மடியில்…

“சத்குருவை பார்க்க வேண்டும். அவருடன் இருக்க வேண்டும். மகானுடன் சத்சங்கத்தில் சங்கமிக்க வேண்டும். அவர் அருகில் அமர வேண்டும்,” இப்படி ஏங்கும் 3000 இதயங்கள் இங்கே உலகின் பல பகுதிகளிலிருந்து கூடியுள்ளன.

இது என்ன உணர்வு! அன்பா?

சில சமயங்களில் அன்பு என்பது ஒருவித எதிர்ப்பார்ப்பையும் பிணைப்பையும் ஏற்படுத்தலாம். ஆனால் ஒருவர் தன் குருவை எவ்வளவு வேண்டுமானாலும் நேசிக்கலாம். அது பிணைப்பை ஏற்படுத்தாது.

குரு மீதான அன்பு வெறும் உணர்ச்சியல்ல. உங்கள் சக்திநிலை அவருடன் சேரத்துடிக்கிறது. இந்த உணர்ச்சியை சக்தி நிலையின் தொடர்பாக மாற்றிக் கொண்டால் அது மிகவும் அற்புதமானது. அந்த நிலையில் உங்களுக்கு எதுவும் செய்யும் சுதந்திரம் குருவுக்கு வந்துவிடுகிறது.

குருவின் மடியில் – இது மிகவும் நெருக்கமான நிலை! இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் குருவின் மடியில் தலை சாய காத்திருப்போம். தொடர்பில் இருங்கள்!

AnandaAlai-Lap-of-the-Master-main2

நினைத்தாலும் போதும் ஆனந்தக் கண்ணீர் நம் கண்களைக் குளமாக்கும். நேரில் கண்டாலோ மனம் நெகிழும். அத்தனை நெகிழ்ச்சியுடன் அன்றலர்ந்த மலராய்த் தம்மை அர்ப்பணிக்கும் உள்ளங்களின் ஆனந்தச் சங்கமம் இது. தொடர்பில் இருங்கள் உங்களையும் இந்த சங்கமத்தில் இணைத்துக் கொள்கிறோம். குருவின் மடியில் நிகழ்ச்சியின் நேரடி வர்ணனை இந்தப் பக்கத்தில் உங்களுக்காக!
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert6 Comments

 • Saravanan Sathappan says:

  Aum Namashivaya .. காத்திருக்கிறேன் என் சத்குருவிற்காக …

 • Ramesh says:

  நானும் கூட இரூந்தது போலவே ஒரு உணர்வு! பகிர்வுக்கு நன்றி…

 • Saravanan Sathappan says:

  இத்தனை பேரை குழந்தைகளாக மாற்றியிருக்கிறார் என் சத்குரு .. இந்த போட்டோக்களை பாருங்கள் .. என்ன சந்தோசம் .. கைகளால் காற்றில் நடனமிடும் ஒருவர் .. மாடுகளின் அருகில் , மாட்டின் முகத்தில் முட்டியவாறு ஒருவர் , தண்ணிரில் தன் முகத்தை பார்த்தவாரு அமைதியில் ஒரு பெண் , தன்னை மறந்த தியான நிலையில் ஒருவர் என அத்துணையும் அழகு அழகு .. போட்டோகிராபருக்கு என் வாழ்த்துக்கள் .. ஈஷாவில் அத்தனையும் அழகு … AUM NAMASHIVAYA

 • Saravanan Sathappan says:

  இத்தனை பேரை குழந்தைகளாக மாற்றியிருக்கிறார் என் சத்குரு .. இந்த போட்டோக்களை பாருங்கள் .. என்ன சந்தோசம் .. கைகளால் காற்றில் நடனமிடும் ஒருவர் .. மாடுகளின் அருகில் , மாட்டின் முகத்தில் முட்டியவாறு ஒருவர் , தண்ணிரில் தன் முகத்தை பார்த்தவாரு அமைதியில் ஒரு பெண் , தன்னை மறந்த தியான நிலையில் ஒருவர் என அத்துணையும் அழகு அழகு .. போட்டோகிராபருக்கு என் வாழ்த்துக்கள் .. ஈஷாவில் அத்தனையும் அழகு … AUM NAMASHIVAYA !!!

 • Senthilkumaran Dharmarajan says:

  உங்களது வர்ணனைகளை படிக்க படிக்க எல்லாவற்றையும் படித்து முடிப்பதற்குள் கண்ணை நீர் நிரப்பி தடை செய்ய….. யார் சொன்னது….சத்குருவின் இருப்பை அருகில் இருந்தால் மட்டுமே உணர முடியும் என்று இந்த லைவ் ப்ளாக் ன் மூலம் நாங்களும் சத்குருவின் மடியில் தான் இருக்கிறோம்

 • Senthilkumaran Dharmarajan says:

  பங்கேற்பாளர்கள் அனைவரும் பேறு பெற்றோர்கள்……. இயந்திரம் மூலம் தயார் செய்யும் சப்பாத்தியை விட ..பிரம்மச்சாரிகளும் தன்னaர்வதொண்டர்களும் சேர்ந்து செய்யும் சப்பாத்தியின் சுவையை இன்று அவர்கள் நிச்சயம் உணரப்போகிறார்கள்

Leave a Reply