குருவின் அருளைப் பெற அன்புடன் அழைக்கிறோம்

குருவின் அருளைப் பெற அன்புடன் அழைக்கிறோம், Guruvin arulai pera anbudan azhaikkirom

சத்குரு:

மனித வாழ்வின் மகத்தான தருணங்களில் ஒன்று குரு பௌர்ணமி. இந்நாளில் தான், ஆதியோகி தன்னை வெளிப்படுத்தி, மனிதர்கள் தங்கள் எல்லைகளைக் கடந்து உச்சத்தை எட்ட முடியும் என்பதை உணர்த்தினார்.

தட்சிணாயணத்திற்குப் பிறகு வரும் இந்தப் பௌர்ணமி நாளில்தான், உலகிலுள்ள எல்லா உயிர்களும் பிரபஞ்சத்தின் சக்தியையும் அதன் வாய்ப்புகளையும் பெருமளவு ஏற்கும் தன்மையில் இருக்கின்றன. உத்தராயணம் வரையிலான அடுத்த 6 மாதங்கள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் தெய்வீகத் தன்மையை மேம்படுத்துவதற்கும் வளர்த்தெடுப்பதற்கும் உகந்த காலமாகும்.

வாழ்வின் உண்மையான நோக்கத்தையும் அதன் ஆற்றலையும் நீங்கள் உணர்வீர்களாக. இந்த குரு பௌர்ணமி தினத்தில் என்னுடைய அருள் உங்களுடன் நிறைந்திருக்கும்.

நமது நன்றியை குருவிற்கு சமர்ப்பிக்கும் ஒரு வாய்ப்பாக, வருகின்ற ஜுலை 19, 2016 அன்று கோவை, ஈஷா யோகா மையத்தில் நிகழவிருக்கும் குரு பௌர்ணமி கொண்டாட்டங்களுக்குத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

குருபௌர்ணமி பற்றி மேலும் தெரிந்துகொள்ள: AnandaAlai.com/guru-purnima
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert