குரு தந்த குரு

குரு தந்த குரு

தேனி அருகில் எம்.சுப்பலாபுரம் கிராமம். அந்த கிராமத்தின் விநாயகர் கோவில் அருகில் குழி வெட்டப்பட்டது. உள்ளே இறங்கியதும், மேலே பலகை போட்டு மூடி, பின்னர் பலகையின் மேல் மண்ணை பரப்பிவிடுமாறும், மண்ணில் தானியங்களைத் தூவிவிடுமாறும், சரியாக பதினோறாவது நாள் தன்னை குழியிலிருந்து வெளியே எடுக்குமாறும் குறிப்பு தந்த காளியப்பர், வெளியே வந்ததும் ஒரு குறிப்பிட்ட பச்சிலையின் சாற்றை தன் மீது தடவி, 300 குடம் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்றும் சொன்னார்.

குறிப்பிட்ட நாளும் வந்தது. குழி வெட்டப்பட்டது. காளியப்பர் உள்ளே இறக்கப்பட்டார். உள்ளே சென்ற காளியப்பர் பத்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டார். கண்களில் நீர் தளும்ப கிராமத்துப் பெரியர்வர்கள் சாமி சொன்னபடி மூடினார்கள். காளியப்பர் சொன்ன மற்றொரு விஷயம், அவர் குழிக்குள் இருக்கும்போது, எந்த சப்தமும் – நாய் குரைக்கும் சப்தம் உட்பட – கேட்கக்கூடாது என்பது. சிஷ்யர்கள் குரு சொன்ன அறிவுரைகளைக் கடைப்பிடித்து, இரவு பகலாக குழிக்கு அருகிலேயே கண் விழித்து காவல் காத்தார்கள்.

பதினோறாவது நாள் வந்தது. மண்ணை அகற்றி, பலகையை எடுத்தார்கள். பார்த்தால் ‘சாமி’ காளியப்பர்…

 


‘தியானலிங்கம் – குரு தந்த குரு’ புத்தகத்திலிருந்து… பக்கம் 50

அந்த காளியப்பர்தான் பின்னாளில் ‘சத்குரு ஸ்ரீபிரம்மா’ ஆனார்.

அந்த ‘சத்குரு ஸ்ரீபிரம்மா’தான் இப்பிறவியில் சத்குருவாய் தோன்றியிருக்கிறார்.

இப்புத்தகத்தைப் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள: 0422-2515415
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert