“முழுமதி வானில் தவழும் நாளான குரு பௌர்ணமி நாள், ஆதியோகி ஆதிகுருவாக அமர்ந்து முதன்முதலில் சப்தரிஷிகளுக்கு ஞானத்தைப் பரிமாறிய நாளாக கொண்டாடப்படுகிறது. வாருங்கள்... நாம் இந்நாளை சேர்ந்து கொண்டாடுவோம்!”
சத்குரு:
குரு என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு இருளை அகற்றுபவர் என்று பொருள். ஒரு குரு என்பவர் ஆன்மீக சாதகரின் அறியாமை எனும் இருளை அகற்றி, அவருக்குள் இருக்கும் படைத்தலின் மூலத்தை உணரச் செய்கிறார். பாரம்பரியமாக குரு பௌர்ணமி நாளானது ஆன்மீக சாதகர்கள் குருவிற்கு தங்கள் நன்றியை வெளிப்படுத்தி, குருவருளையும் ஆசியையும் பெரும் ஒரு நாளாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், குரு பௌர்ணமி ஆன்மீக சாதகர்கள் தங்கள் யோகப் பயிற்சிகளை துவங்குவதற்கு உகந்த நாளாக உள்ளது.
‘அஷதா’ எனப்படும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் வரும் ஒரு பௌர்ணமி நாள் குரு பௌர்ணமி என வழங்கப்படுகிறது. இந்த புனிதமான நாளில்தான் ஆதியோகி என்று அழைக்கப்படும் முதல் யோகியான சிவன், யோக அறிவியலை சப்தரிஷிகளாகக் கொண்டாடப்படும் தனது ஏழு சீடர்களுக்கு முதன்முதலாக வழங்கி அருளினார். இந்த வரலாற்று சிறப்புமிக்க அற்புத நிகழ்ச்சியானது இமாலயத்திலுள்ள கேதார்நாத் கோயிலுக்கு சில கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள காந்திசரோவர் ஏரிக்கரையில்தான் நிகழ்ந்தேறியது. இப்படித்தான் ஆதியோகி முதல் குருவாக, ஆதிகுருவாக இந்நாளில் உருவெடுத்தார். சப்தரிஷிகள் ஏழுபேரும் ஆதியோகி வழங்கிய ஞானத்தை உலகெங்கும் பலதிசைகளிலும் கொண்டுசென்று சேர்த்தனர். இன்றளவும் கூட இவ்வுலகில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு ஆன்மீக செயல்முறையும் ஆதியோகி வழங்கிய ஞானத்தின் மூலத்திலிருந்து பெறப்பட்டதேயாகும்!
“நாங்கள் நடனமாட அழைக்கப்பட்டபோது எனது இதயத்தில் என் குரு நிறைந்திருந்தார். எனது உணர்வில், நான் நடனத்தில் என்னை இழந்தேன், அது அழகாய் நிகழ்ந்தேறியது. எனது குருவுடன் இருப்பதற்கும் குரு பௌர்ணமி நாளில் எனது நடனத்தை அர்ப்பணிக்கவும் ஒரு அரிய வாய்ப்பாக அது அமைந்தது!”
ஈஷா ஆசிரமவாசி

குரு பௌர்ணமி 2015 Live Blog (Archives)



Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.