சத்குரு:

7பேர்... 84 வருடங்கள்... ஒரு மனிதரின் கடைக் கண் பார்வைக்காகக் காத்திருந்தனர். ஒரு நாள், அவரின் பார்வை அந்த எழுவரின் மேல் விழுந்தது. அதுவரை அவர்களை ஏறெடுத்தும் பார்க்காத அந்த மனிதர், அதன்பிறகு அவர்களின் மேலிருந்து தனது பார்வையை அகற்ற முடியவில்லை. அந்த அளவிற்கு, தாங்கள் செய்து வந்த சாதனாக்களால் தங்கம்போல் ஜொலித்தனர், அந்த எழுவரும்.

அதுவரை ஆதி யோகியாக இருந்தவர் அன்றுமுதல் ஆதிகுருவாக மாறினார். தெற்கு நோக்கி அமர்ந்ததால் தட்சிணாமூர்த்தி (தட்சின்-தெற்கு) என்றும் அழைக்கப்படுகிறார். ஆதிகுரு உருவாகிய நாளான இந்த ஜூலை மாதப் பௌர்ணமி, “குரு பௌர்ணமி” என்று கொண்டாடப்படுகிறது.

அவர்தான் ஆதியோகி. ஜூலை மாதப் பௌர்ணமி அன்று, யாருக்கும் பெறத் தகுதியில்லை என நினைத்திருந்த தனது ஞானத்தையும் சக்தியையும் தென்திசை நோக்கி அமர்ந்து முதன்முதலாக எழுவருக்கும் வழங்கினார். அதுவரை ஆதி யோகியாக இருந்தவர் அன்றுமுதல் ஆதிகுருவாக மாறினார். தெற்கு நோக்கி அமர்ந்ததால் தட்சிணாமூர்த்தி (தட்சின்-தெற்கு) என்றும் அழைக்கப்படுகிறார். ஆதிகுரு உருவாகிய நாளான இந்த ஜூலை மாதப் பௌர்ணமி, “குரு பௌர்ணமி” என்று கொண்டாடப்படுகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆதிகுருவின் சீடர்களான அந்த எழுவரும் சப்த ரிஷிகளாக, தாங்கள் பெற்ற சக்தியையும் ஞானத்தையும் உலக மக்கள் அனைவருக்கும் வழங்கும் நோக்கில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசை நோக்கிச் சென்றனர். அவர்களில் ஒருவரே நம் தென்னகம் வந்து, ஆன்மீக விதை விதைத்து, அதை ஒரு கலாச்சாரமாகவே மாற்றிய ‘அகஸ்திய முனி’.

ஆன்மீக சாதகர்களுக்கு, குரு பௌர்ணமி நாள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. குருவின் அருளைப் பெறுவதற்கு, குரு பௌர்ணமியான இந்நாள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த வருடம், ஜூலை 19ம் தேதி குரு பௌர்ணமியாக அமைகிறது. தங்கள் ஆன்மீகப் பயிற்சிகளைத் துவங்கவும் ஏற்கனவே செய்து வருபவர்கள் அதனைத் தீவிரப்படுத்தவும் இது மிக உகந்த நாள். மேலும் தங்கள் ஊர்களில் சத்குரு சந்நிதி உள்ள வீடுகளில் அல்லது மையங்களில் தன்னார்வத் தொண்டர்கள் கூடி, குரு பூஜை செய்தும் பிரசாதம் வழங்கியும் இந்நாளைக் கொண்டாடலாம்.

குரு பௌர்ணமி பற்றி மேலும் தெரிந்துகொள்ள மற்றும் 'குரு பௌர்ணமி' இலவச மின் புத்தகம் டவுன்லோட் செய்ய: AnandaAlai.com/guru-purnima

ஓவியர் பிரியேந்த்ர சுக்லா அவர்களுக்கு நன்றிகள்