சத்குரு:

இந்த கலாச்சாரத்தில், மனித இனத்திற்கு புதிய சாத்தியங்கள் திறக்கும் நாளாய் நாம் குருபௌர்ணமியை அடையாளம் கண்டிருக்கிறோம். கடந்த 300 வருடமாய் நாட்டை ஆண்டவர்கள் வேறு திட்டம் வைத்திருந்தனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
குறைந்தபட்சம், குருபௌர்ணமியாவது விடுமுறை தினமாக இருக்க வேண்டும். ஆதியோகியாம் சிவனைப் போன்ற ஒரு அற்புத சாத்தியம் மனிதனுடன் ஈடுபட்ட நாளல்லவா இது, இந்நாள் வீணாய்ப் போகலாமா?

மக்கள் ஆன்மீகத்தில் வேர்விட்டு, உறுதியாய் இருக்கும் வரையில் இந்த மனிதர்களை ஆள முடியாது என்று தெளிவாய் உணர்ந்திருந்தனர். குருபௌர்ணமியை விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கி, ஞாயிற்றுக்கிழமையை விடுமுறையாய் கொண்டு வந்தனர். ஞாயிற்றுக்கிழமையில், உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டு விட்டு உறங்குவதைத் தவிர நமக்கு வேறென்ன செய்யத் தெரியும்? அதுவே பௌர்ணமி, அமாவாசை போன்ற தினங்கள் என்றால் செய்வதற்கு ஏதோ ஒன்று இருக்குமல்லவா? இனியாவது, நம் விடுமுறை நாட்கள் நமக்கு முக்கியமான நாட்களாய் இருக்க வேண்டும். குறைந்தபட்சம், குருபௌர்ணமியாவது விடுமுறை தினமாக இருக்க வேண்டும். ஆதியோகியாம் சிவனைப் போன்ற ஒரு அற்புத சாத்தியம் மனிதனுடன் ஈடுபட்ட நாளல்லவா இது, இந்நாள் வீணாய்ப் போகலாமா?

நீங்கள் உங்கள் எல்லைகளை தகர்த்து வளர முடியும் என்று, ஆதியோகி வழங்கிய சாத்தியத்தை உலகிற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதே இன்று என் மனதில் குடிகொண்டிருக்கும் தலையாய விஷயமாக இருக்கிறது. என் வாழ்நாளில் எஞ்சியுள்ள நாட்களை நான் இதற்காகவே செலவு செய்ய விரும்புகிறேன். 15,000 வருட பழமையான இந்த ஒரு செய்தியை, இந்த உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். எல்லோரும் அந்த நிலையை எட்டுகிறார்களோ இல்லையோ, ஆனால் அவர்களுக்கு இப்படியொரு சாத்தியம் இருக்கிறது என்பதை உணர்த்த வேண்டும் என்பதே என் விருப்பம். இதனை நோக்கி பல செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

உங்கள் வாழ்க்கை போராட்டங்கள் நிகழ்ந்ததாய், விரக்தியுற்றதாய், குழப்பம் நிறைந்ததாய் என எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால், நீங்கள் முயன்று வளர விரும்பினால், இவை எல்லாவற்றையும் தாண்டி நீங்கள் வளர்ச்சியுற முடியும்.

அதன் முதல்படியாக, கடந்த வருடம் கோவை ஈஷா யோக மையத்தில், குரு பௌர்ணமி தினத்தில் 21 அடி உயர ஆதியோகி சிலை உலகிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இங்கிருந்து இச்சிலை அமெரிக்காவில் உள்ள ஈஷா யோக மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.. அதுமட்டுமல்லாமல், 112 அடி உயரம் கொண்ட ஆதியோகி முகத்தை நாம் உருவாக்க உள்ளோம். இது உலகிலேயே மிகப் பெரிய முகமாக இருக்கும். தேசத்தின் நான்கு திசைகளில், திசைக்கு ஒன்றென ஒரு ஆதியோகி முகத்தை நிர்மாணிக்கவும் விருப்பம் இருக்கிறது. தெற்கில், ஈஷா யோக மையத்தில் ஒரு சிலை நிச்சயம் நிகழும். பிற சிலைகளை உருவாக்குவது உங்கள் பொறுப்பு.

அதனால் இந்த ஒரு செய்தியை நான் மனித குலத்திற்கு வழங்கிட விரும்புகிறேன். உங்கள் வாழ்க்கை போராட்டங்கள் நிகழ்ந்ததாய், விரக்தியுற்றதாய், குழப்பம் நிறைந்ததாய் என எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால், நீங்கள் முயன்று வளர விரும்பினால், இவை எல்லாவற்றையும் தாண்டி நீங்கள் வளர்ச்சியுற முடியும். ஒவ்வொரு மனிதனது இதயத்திலும் உள்ளத்திலும் இந்தச் செய்தியை பதியச் செய்ய நான் விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் உங்களால் முடிந்தவரை இதற்காக முயற்சிக்க வேண்டும், உங்களால் இயன்றதை செய்ய வேண்டும். நீங்கள் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், இது நிகழ்ந்திடச் செய்யுங்கள்.


குரு பௌர்ணமி பற்றி மேலும் தெரிந்துகொள்ள மற்றும் 'குரு பௌர்ணமி' இலவச மின் புத்தகம் டவுன்லோட் செய்ய: AnandaAlai.com/guru-purnima