Ivvaruda Galatta

20150823_SUN_0375-e-edited
20150823_SUN_0545-e-edited
20150823_SUN_0514-e-edited
20150823_SUN_0478-e-edited
20150823_SUN_0465-e-edited
20150823_SUN_0380-e-edited
20150823_SUN_0309-e-edited
20150823_SUN_0285-e-edited
20150823_SUN_0281-e-edited
20150823_SUN_0179-e-edited
20150823_SUN_0121-e-edited
20150823_SUN_0068-e-edited
 

ஈஷா கிராமோத்சவம்

ஈஷா கிராமோத்சவம்

ஈஷா கிராமோத்சவம்

ஈஷா கிராமோத்சவம்

வெற்றி பெறவேண்டும் எனும் வேட்கை, தேவைப்பட்டால் தோல்வியையும் தழுவுவது; வெற்றியை நேர்த்தியாய் கையாள்வது, தோல்வியையும் நேர்த்தியாய் கையாள்வது – இவை யாவும் விளையாட்டு ஒருவருக்குள் தோற்றுவிக்கும் விஷயங்கள்.
– சத்குரு

ஈஷா புத்துணர்வு கோப்பை

கடந்த ஒரு மாத காலமாக நம் கிராமப்புறங்களில் மையம் கொண்டிருந்த விளையாட்டுச் சூறாவளி, ஒருவழியாக கோயம்புத்தூரில் நடக்கவிருக்கும் இறுதிபோட்டியோடு கரைகடக்க உள்ளது. வயது வரம்பின்றி, ஜாதிமத பேதமின்றி, ஆண்-பெண் என்ற வித்தியாசமின்றி நம் கிராமங்களில் எல்லோரும் ஆனந்தக் களிப்போடு, ஒன்றிணைந்து பங்கேற்ற போட்டாபோட்டி இது. ஆண்களுக்கு வாலிபால், பெண்களுக்கு த்ரோபால் என பல கிராமங்களிலும் அணிகளை உருவாக்கி, இதற்கென தினமும் தங்களை தயார்செய்து கொண்டு முழு உத்வேகத்துடன் நம் கிராம மக்கள் களமிறங்க உள்ளனர். வெற்றிப் பரிசாக கோப்பையும், முதல் அணிக்கு 1 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும் ஈஷா அறக்கட்டளை வழங்கி, கிராம மக்களை ஊக்கப்படுத்துகிறது. செப்டம்பர் 4, 2016 அன்று இக்கோப்பையை பெறப்போவது யார்?

ஈஷா கிராமோத்சவம் (செப்டம்பர் 4) நிகழ்ச்சி நிரல்

2003ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த இயக்கம், யோகா மற்றும் விளையாட்டின் மூலமாக இதுவரை 4600 கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்களின் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றிற்காக பல்வேறு செயல்களை மேற்கொண்டு, அவர்களது வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இதுவரை பல லட்சம் மக்கள் கிராமப் புத்துணர்வு இயக்கத்தால் பயன்பெற்றுள்ளனர்.

காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் கொடிசியா மைதானத்தில் அரங்கேறுகின்றன.

காலை 10 மணியளவில் கபடிப் போட்டிகள்!

காலை 10 மணிமுதல் 2 மணிவரை கேளிக்கை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஸ்டால் கேம்ஸ்

மாலை 4:30 மணிக்கு ஆண்களுக்கு வாலிபால் மற்றும் பெண்களுக்கு த்ரோபால் இறுதிப்போட்டிகள்!

மாலை 5:30 மணியளவில் பரிசளிப்பு விழா

நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்!

  • கோவையின் முக்கிய நகர சந்திப்புகளில் வாகனங்களில் சென்றபடியே 7 கிராமிய குழுக்கள் வழங்கும் கலைநிகழ்ச்சிகள்
  • கொடிசியாவில் கிராமிய உணவுத் திருவிழா
  • 70 பறை இசைக் கலைஞர்கள் பறைமுழங்க, சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்களை சுமார் 300 கிராமிய கலைக்குழுவினர் வரவேற்கின்றனர்
  • சத்குரு அவர்களின் அருளுரை

அரங்கேறவிருக்கும் நாட்டுப்புற கலைகள்!

பறையாட்டம், கைச்சிலம்பாட்டம், கட்டைக்குழல், ராஜா-ராணி ஆட்டம், ஜிம்லா மேளம், ஒயிலாட்டம், கணியன்கூத்து, சேவையாட்டம், மாடு மயிலாட்டம், கிழவன் கிழவியாட்டம், தோடர்கள் ஆட்டம், வில்லுப்பாட்டு, துடும்பாட்டம், பம்பை ஆட்டம், களியாட்டம், ஜமாப்பு, தோல்பாவைக்கூத்து, கொக்கிலிக்கட்டை ஆட்டம், காவடியாட்டம் மற்றும் பல கிராமிய கலைகள்!

அனைவரும் வருக! அனுமதி இலவசம்!
தொடர்புக்கு 83000 83000

Isha Gramotsavam

Leave a Reply