கோல்ப்: இதற்கு விழிப்புணர்வுள்ள செயல் தேவை

Sadhguru points the driver
[twocol_one] click on photo to zoom
click on photo to zoom
[/twocol_one] [twocol_one_last] [translate lang=english]

If I had more time, the one thing I would do is play more golf. I’m not very good by professional standards, but I usually finish in the lower 80s. And I hear that in the golfing community, most people do not finish below 100. A few times I finished less than five over par, and twice just three over par. So when I finished three over I thought, ‘This is it. I have arrived!’ But the next day, I’ll go and finish 18 over!

People keep saying golf is the most difficult game, but I do not think so because if you play any other game, the ball will come at you at different velocities and spins, different angles and curvatures, but with golf, the damn thing is just sitting there; you just have to hit it! That’s why it is so frustrating because if you play cricket and get beat, you can say the bowling was too good. Or you can say it bounced on me. But with golf, it’s just you and you, that’s all.

That is the beauty of the game. There is nobody else, just you. You may play with somebody else, but in reality, the game is structured in such a way that you are only playing with yourself. Most of the game, about 70% of it, is just mind. That part I do well. But the subtleties of the game I do not know much of and the problem is I don’t have enough practice. You need to build muscle memory for golf; the body has to learn it. And for that, you need to be swinging the club everyday, whereas for months on end, I won’t get a moment to play. Then suddenly, one day I will just go to the course and play a round.

Usually, if someone has not played in some time, he will start out on the driving range and swing it out, and then hit the course. But I’m not like that, I just go and tee off. I will never even take a practice swing. I may goof up a few holes because I’m hungry to hit the ball. I’m not so concerned about the score, I just want to whack the ball because I haven’t whacked enough balls in my life.

I see people getting overly tense and agitated at times when they are required to be calm and stable. If they’re about to par or a birdie is coming, I see the way they stretch and breathe and get all worked up. Not me. I can birdie with ease and I can goof up with equal ease.

The reason golf is breaking a lot of people is, instinctive ways of action will not do. It takes conscious action to play golf; in that sense it is really a wonderful game.
[/translate] [translate lang=tamil]

எனக்கு அதிக ஓய்வு நேரம் இருந்தால் இன்னமும் அதிகம் கால்ஃப் விளையாடுவேன். இந்த விளையாட்டை ஒரு தொழிலாக எடுத்து விளையாடுபவர்களோடு ஒப்பிடும்போது என் விளையாட்டு அவ்வளவு சிறந்த தரத்தில் இருக்காது. ஆனால் இந்த விளையாட்டில் எனது ஸ்கோர் வழக்கமாக 80களில் இருக்கும். சாதாரண முறையில் கால்ஃப் விளையாடுபவர்களில் பெரும்பான்மையோர் 100க்குக் கீழ் ஸ்கோர் எடுப்பதில்லை எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
(குறிப்பு: இந்த விளையாட்டில் ஸ்கோர் அதிகம் ஆகஆக திறமை குறைவு என்று பொருள். ஒரு பந்தை குழிக்குள் தள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாய்ப்புகள் கிடைக்கும். அந்த அனுமதிக்கப்பட்ட வாய்ப்புகளை விட எவ்வளவு கூடுதல் வாய்ப்புகள் எடுக்கிறார்களோ அதுதான் அவர்கள் ஸ்கோர்)

வெகு சில நேரங்களில் அனுமதிக்கப்பட்டதை விட வெறும் 5 வாய்ப்புகள் மட்டுமே அதிகமாக எடுத்திருக்கிறேன். இரண்டு முறைகள் 3 வாய்ப்புகள் மட்டுமே எடுத்திருக்கிறேன். அப்படி முடித்தபோது, “இதுதான் நான் விரும்பியது, நான் சாதித்துவிட்டேன்” என்று நினைத்தேன். ஆனால் அடுத்த நாள், அனுமதிக்கப் பட்டதைவிட 18 வாய்ப்புகள் அதிகம் எடுப்பது சகஜமாக இருந்திருக்கிறது!

கால்ஃப் கடினமான விளையாட்டு என்று மக்கள் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. ஏனெனில் மற்ற விளையாட்டுகளில் பந்து வெவ்வேறு வேகங்களில் வெவ்வேறு சுழற்சிகளில், வெவ்வேறு கோணங்களில் உங்களை நோக்கி வரும். ஆனால் கால்ஃப் விளையாட்டில் அந்த பிரச்சனைகள் எதுவும் கிடையாது. வைக்கப்பட்டிருக்கும் பந்தை உங்கள் திறமை கொண்டு அடிக்க வேண்டும். அவ்வளவுதான். அதனால்தான் அந்த விளையாட்டில் சீக்கிரம் ஏமாற்றம் அடைந்து விடுகிறார்கள். கிரிக்கெட் விளையாடும்போது உங்கள் பேட் பந்தில் படவில்லை என்றால் பந்துவீச்சு மிகவும் நன்றாக இருந்தது என்று சொல்லி தப்பித்துக் கொள்ள முடியும். ஆனால் கால்ஃபில் அப்படிச் சொல்லி தப்பிக்க வழியில்லை. அங்கு எதிராளி யாரும் இல்லை. அனைத்தும் உங்கள் திறமையை மட்டுமே பொறுத்திருக்கிறது.

அந்த விளையாட்டின் அழகே அதுதான். போட்டியின் போது பலர் விளையாடலாம். ஆனால் நீங்கள் விளையாடும்போது வேறு யாரும் உங்கள் குறுக்கே இல்லை. நீங்கள் மட்டுமே பந்தை வைத்து விளையாடுகிறீர்கள். விளையாட்டில் சுமார் 70% மனம் சம்பந்தப்பட்டதுதான். அந்த 70% எனக்கு பிரச்சனையில்லை. அதை நான் நன்றாக செய்து விடுவேன். ஆனால் அந்த விளையாட்டின் நுணுக்கங்கள் எனக்கு அதிகமாகத் தெரியாது. விளையாட்டை நன்றாக பயிற்சி செய்யும் அளவிற்கு எனக்கு நேரமும் இல்லை. தொடர்ந்து விளையாடி வரும்போதுதான் நமது தசைகள் நன்றாக பழக்கத்திற்கு வரும். ஆனால் நேரப் பிரச்சனை காரணமாக மாதக்கணக்கில் விளையாடாமல் இருந்துவிட்டு, திடீரென ஒரு நாள் போய் ஒரு சுற்று விளையாடுவேன்.

வழக்கமாக, யாராவது, சிறிது காலம் தொடர்ந்து விளையாடாமல் இருந்துவிட்டு திடீரென விளையாட வந்தால் முதலில் பந்தை வைத்து சிறிது விளையாட்டுப் பயிற்சி செய்துவிட்டு பிறகுதான் பிரதான மைதானத்தில் வந்து விளையாடுவார்கள். ஆனால் நான் அப்படியில்லை. நிறைய நாட்கள் விளையாடாமல் இருந்தாலும் பயிற்சியே செய்து பார்க்காமல் நேரே பிரதான மைதானத்திற்கே சென்று விளையாடிக் கொள்வேன். அப்படி விளையாடும்போது, முதல் சில குழிகளில் பந்து சரியாக விழாமல் போகும். ஆனால் நான் ஸ்கோர் பற்றி அதிகம் அக்கறைப் படுவதில்லை. பந்தை ஓங்கி அடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். ஏனெனில் என் வாழ்வில் நான் போதுமான அளவிற்கு பந்துகளை ஓங்கி அடித்து விளையாடியதில்லை.

மக்கள் அமைதியாகவும் உறுதியாகவும் இருக்கவேண்டிய தருணங்களில், மிகவும் இறுக்கமாகவும் பதற்றத்துடனும் இருப்பதை நான் பார்க்கிறேன். அனுமதிக்கப்பட்ட வாய்ப்புகளிலோ அல்லது முதல் முயற்சியிலேயோ குழிக்குள் பந்தை விரட்டிவிட்டால் மற்றவர்கள் பெருமூச்சு விடுவதை நான் பார்க்கிறேன். ஆனால் நான் அப்படி கிடையாது. முதல் வாய்ப்பிலேயே என்னால் குழிக்குள் பந்தை எளிதாக தள்ள முடியும். அதே நேரத்தில் மிக எளிதில் முட்டாள்தனமாகவும் விளையாடி விடுவேன்.

கால்ஃப் விளையாட்டு, பெரும்பாலான மக்களை செயலிழக்கச் செய்வதற்கான காரணம் என்னவென்றால், உள்ளுணர்வின் மூலம் செயல்படுவது இதில் வேலைசெய்யாது. கவனமாக செயல்படுவது இந்த விளையாட்டில் மிகவும் முக்கியமாக இருக்கிறது. அப்படிப் பார்க்கும்போது இது உண்மையிலேயே ஒரு அற்புதமான விளையாட்டாக இருக்கிறது.
[/translate]

அன்பும் அருளும்,

Sadhguru
[/twocol_one_last]இதையும் வாசியுங்கள்

Tags

Type in below box in English and press Convert