ஞான நிலா

ஞான நிலா, gnaana nila

நவம்பர் 14ம் தேதி ஏற்பட்ட சூப்பர் நிலவினை தரிசித்தபடியே ஞானநிலா எனும் இந்த கவிதையை வடித்துள்ள சத்குரு அவர்கள் அதன் வசீகரத்தை நம் மனங்களில் ஆழமாய் பதிக்கிறார். 1948ம் ஆண்டிற்கு பிறகு நவம்பர் 14ம் தேதி தோன்றிய நிலவே உலகிற்கு மிக நெருக்கமாய் வந்தது என்பது இதன் தனிச்சிறப்பு. முழு மதியின் மயக்கம் உங்களையும் கிரங்கச் செய்யட்டும்…

ஞான நிலா

பிள்ளைப் பருவத்துக் கதைகள் கூறின
வெண்ணெய் உருண்டை நீதான் என்று.
பின்னர் எங்களை நம்பச் செய்தனர்,
உன்னில் ஒருவர் கால் பதித்தார் என்றும்-அது
மனித குலத்தின் பிரம்மாண்ட பாய்ச்சல் என்றும்!!
பின்னர் எத்தனை தனிமை இரவுகள்…
உன்னை உற்றுப் பார்ப்பதிலும்
உந்தன் வடிவை ஆராய்வதிலும்..
என் உருவாக்கத்தில் பங்கு உனக்குண்டு;
என் உடலின் வடிவம் உருவாவதிலும்
என் எண்ண சுழற்சி வடிவாவதிலும்
உனக்குள்ள பங்கை நான் உணரும் முன்னமே
ஒளியின் வெள்ளத்தில் குழம்பிய கண்களின்
புரிதலுக்குப் புலப்படா வண்ணம்
வடிவை மாற்றிக் கொண்டாய் நீ;
என்னுள் இருக்கும் ஒளியின் வலிவால்
இருளை என் கண்கள் காணத் தொடங்கியபின்தான்
மாறும் உன் வடிவங்களின் ரகசியங்களை
கண்டறியத் தொடங்கினேன் நான்.
பிம்பமாய் மட்டுமே இருந்த போதும்
என் பிறப்பை நிர்வகிக்கும் விதமாய்
தாய்மைத் திரவப் பெருக்கை இயக்க
உன்னால் முடிந்திருக்கிறது.
என் இறப்பிலேயும் உன் பங்கிருக்கும்.
என் புரிதலின் சுழல் கதவாய்
இருந்து கொண்டிருக்கிறாய் நீ

அன்பும் அருளும்,

Sadhguruஇதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert