எதற்காக இவற்றை அணிகிறான் சிவன்?

பாம்பு

பாம்பு, சிவனின் சக்தி உச்சநிலையை
அடைந்துவிட்டதைக் குறிக்கிறது.
பாம்பை ‘குண்டலினி’ சக்திக்கு, அதாவது,
வெளிப்படாமல் உங்களுக்குள்ளேயே
அமிழ்ந்திருக்கும் சக்திக்கு அடையாளமாக
சொல்வார்கள். சுருண்டிருக்கும் பாம்பை
கண்டுகொள்வது கடினம். குண்டலினி சக்தியும்
அதைப்போலத்தான்.
அது நகர ஆரம்பித்தால்தான், இத்தனை
சக்தியும் உங்களுக்குள் இருப்பதே
உங்களுக்குப் புரியும்.

நிலா

நிலவை ‘சோமா’ என்றழைப்பார்கள்,
அதாவது போதை உண்டாக்குவது. சிவன்,
போதையேறிய நிலையில், முழு விழிப்பில்
இருக்கும் மாபெரும் யோகி. இதனால்தான் அவர்
நிலவை அலங்காரப் பொருளாக தன் தலையில்
வீற்றிருக்கிறார். போதையில் திளைக்க
வேண்டுமானால், நீங்கள் விழிப்புடன் இருப்பது
அவசியம். யோகிகளும் அப்படித்தான் இருப்பார்கள்,
முழு போதையில், ஆனால் முழு விழிப்புடன் இருப்பார்கள்.

மூன்றாவது கண்

சிவனின் மிக முக்கியமான தன்மை,
அவர் தனது மூன்றாவது கண்ணை
திறந்து கொண்டது தான். நம் இரண்டு
கண்களால் பொருள் நிலையிலானவற்றை
மட்டுமே பார்க்க முடியும்.
ஆனால் வேறொரு பரிமாணத்திலான
உணர்தலை நாம் அடைந்துவிட்டால்,
பொருள் நிலையிலான உணர்தலை தாண்டி
நம்மால் கிரகிக்க முடிந்துவிட்டால்,
இதையே மூன்றாவது கண் திறந்து
கொண்டது என்று சொல்வர்

நந்தி

நந்தி என்பது, எல்லையில்லாமல்
காத்திருப்பதைக் குறிக்கும். சும்மா
உட்கார்ந்து, காத்திருக்கத் தெரிந்தவருக்கு,
தியானம் செய்வது புதிதாகவோ
கடினமாகவோ இராது. நந்தி சும்மா
உட்கார்ந்திருப்பார், ஆனால் முழு விழிப்பாய்,
முழுத் தீவிரத்துடன் உட்கார்ந்து இருப்பார்.
இது தான் தியானம்.

திரிசூலம்

திரிசூலம், வாழ்வின் அடிப்படையான
மூன்று நிலைகளை குறிக்கிறது.
இதை பிங்களா, ஈடா, சுஷும்னா என்றும்
அழைக்கலாம், அல்லது ஆண், பெண்,
தெய்வீகம் என்றும் குறிக்கலாம்.
இம்மூன்றும் நமது உடலின் சக்திநிலையில்
இருக்கும் அடிப்படையான ‘நாடி’கள் -
இடது, வலது மற்றும் நடுநிலை நாடி.

சிவன் – என்றுமே நிரந்தர Fashion!

பகுதி 12

சிவனின் கழுத்தில் பாம்பு, தலையில் பிறை நிலா, கையில் திரிசூலம் போன்றவை இருப்பதை அனைவரும் அறிவோம். இவையெல்லாம் ஏன் சிவனின் வசம் உள்ளன என்பதையும், சிவனின் இருப்பிடங்களின் மகத்துவம் பற்றியும் இக்கட்டுரையின் வாயிலாக அறிந்துகொள்வோம்…

shiva_kailash_1

shiva_kailash_2

இருளில் சிவனின் அருளில்…

ஜடாமுடி பிரபஞ்சமெங்கும் அசைந்தாட, பிறை நிலவை நெற்றியில் சூடியபடி உடம்பெல்லாம் திருநீற்றோடு உடுக்கை இசையில் இரவுமுழுக்க ஆடுகிறான் ஒரு பித்தன். அவனைக் காண்பதைவிட, அவனிடம் பேச நினைப்பதைவிட, அவனைத் தழுவ நினைப்பதைவிட, அவனுடன் ஒன்றாகி கலப்பதிலேயே பேரானந்தம் இருக்கிறது.

யார் அவன்? எங்கிருக்கிறான்? எந்த ஊர்க்காரன்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நிச்சயம் யாரிடமும் பதிலில்லை. அவன்தான் முதலும் முடிவுமானவன். ஆதியோகியாய் அமர்ந்து யோகக் கலாச்சாரத்தை சப்தரிஷிகள் மூலம் அகிலமெங்கும் பரவச் செய்த ஆதிசிவன்.

சிவா என்றால் ஒன்றுமில்லாதது என்று பொருள். ஒன்றுமில்லாததை அடைய என்ன செய்துவிட முடியும்?! அவனுடன் சும்மா இருப்பதே வழி. ஆனால், தூக்கத்தில் அல்ல; முழு விழிப்போடு போர்வைக்குள் படுத்துக் கொண்டு அல்ல; முதுகுத்தண்டு நேராக அமர்ந்தபடி!

அடுத்த பதிவில்…

சிவனைப் பற்றி சத்குருவின் அனுபவம் என்ன என்பதை தெரிந்துகொல்ளலாம்!

சிவன் – என்றுமே நிரந்தர Fashion! தொடரின் பிற பதிவுகள்

மது சித்ரன்இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert