புத்தர் முதல் நம் ஊர் சித்தர்கள் வரை பிச்சை எடுத்தே தங்கள் ஜீவனைக் காத்து வந்துள்ளனர். பிறைநிலவைச் சூடி உடுக்கை ஒலியில் நடனமாடும் சிவனும் கூட பிச்சைப் பாத்திரமே ஏந்தியுள்ளார். ஏன் இவர்கள் பிச்சை எடுக்க வேண்டும்? அது ஒரு ஆன்மீக செயல்முறையா? இதோ இங்கே, சிவாங்கா சாதனாவில் தான் பெற்ற அனுபவத்தை இவர் விவரிக்கும்போது நமக்கு நன்கு புரிகிறது!

பூபாலன் - பெரம்பூர், சென்னை

என் பெயர் பூபாலன். சென்னை பெரம்பூரைச் சேர்ந்த நான் சத்குரு வழங்கியுள்ள 42 நாள் சாதனாவான 'சிவாங்கா' விரதமிருந்து மஹாசிவராத்திரியன்று வெள்ளியங்கிரி புனிதப் பயணம் மேற்கொண்டேன். அந்த அற்புத சாதனாவில் நான் பெற்ற அனுபவங்களை உங்களிடம் இங்கே பகிர்வதில் மகிழ்ச்சி!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
முஸ்லிம் இளைஞர் என்னைப்பார்த்து 'அண்ணே, என்னிடம் காசு வாங்க மாட்டீங்களா, என்னைப் பார்க்காமல் ஏன் போறீங்க?!' என்று கேட்டார்.

ஈஷா தன்னார்வத் தொண்டரான நான் சிவாங்கா விரதம் பற்றி கேள்விப்பட்டு மஹாசிவராத்திரி காலத்தில் சாதனாவை மேற்கொள்வது என எண்ணியிருந்தேன். எண்ணியது போலவே சூழ்நிலையும் அமைய சிவாங்கா தீட்சை பெற்றேன்.

இதற்கிடையில், சென்னையில் நடந்த 'ஞானியின் பார்வையில்' நிகழ்ச்சியில் சத்குருவைக் காணும் வாய்ப்பும் கிடைத்தது. அன்றைக்கு மறுதினம் அதிகாலையில் 15 சிவாங்காக்கள் சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு பாதயாத்திரையாகச் செல்வதைக் கேள்விப்பட்டு, அவர்களை வழியனுப்பும் வைபவத்திலும் கலந்துகொண்டேன். பாதயாத்திரை மேற்கொண்டோரிடம் இருந்த தீவிரம் என்னையும் ஆட்கொண்டது என்றே சொல்ல வேண்டும். அவர்களைப் பார்த்தபோது, என் கன்னங்களை கண்ணீர்த் துளிகள் கழுவின!

சிவாங்கா சாதனாவின் ஒர் அம்சமாக சத்குரு வழங்கியுள்ள பிச்சை எடுக்கும் சாதனாவை மேற்கொண்டபோதுதான் எனக்குள் பலவிஷயங்கள் சுக்குநூறாக உடைந்துப் போனது. 21 பேரிடம் பிச்சை எடுக்க வேண்டும் என்று சத்குரு சொல்லியிருந்ததால், அதற்கென்று ஒரு நாளை ஒதுக்கி, மேல்சட்டை அணியாமல் உண்டியலோடு வீட்டிலிருந்து புறப்பட்டேன். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், தெருவில் செல்வோர், சிறுவர்கள், பெரியவர்கள் என்று அனைவரும் ஓடி ஓடி வந்து பிச்சை போட்டனர்.

ஒருசமயம், பிச்சை எடுக்க ஓரிடத்திற்கு சென்றேன். அந்தப்பகுதியில் கோழி, ஆடு வெட்டிக் கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர் என்னைப்பார்த்து 'அண்ணே, என்னிடம் காசு வாங்க மாட்டீங்களா, என்னைப் பார்க்காமல் ஏன் போறீங்க?!' என்று கேட்டார். என்னால் எதுவும் பேச முடியவில்லை. இவர் வேறுமதம் என்று எண்ணி பிட்சை கேட்காமல் ஒதுங்கியது தவறு என்பதை உணர்ந்தபோது, உடல் சிலிர்த்தது.

'எந்த மதம் என்பது முக்கியமல்ல, மனிதர்கள்தான் முக்கியம்' என்று சத்குரு சொன்னது உறைத்தது. அவர்முன் உண்டியலை நீட்டினேன், கறி வெட்டிய கையை கழுவிவிட்டு உண்டியலில் காசு போட்டார். பின்னர், அங்கிருந்து நகர்ந்தேன். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒருவர், ருத்ராட்சம் தரித்து மேல்சட்டை அணியாமல் உண்டியல் ஏந்தி செல்பவரைக் கூப்பிட்டு காசு போடுகிறாரே என்று எண்ணியபோது, இறைவன் மதங்களில் இல்லை மனங்களில்தான் இருக்கிறான் என்பது புரிந்தது.

கடைசியாக ஒரு மளிகைக் கடையில் பிச்சை எடுத்தபோது, அந்தக் கடைக்காரரிடம், வெள்ளியங்கிரி யாத்திரைப் பற்றியும், மஹாசிவராத்திரி சென்னையில் நடைபெறுவது பற்றியும் சொல்லிக் கொண்டிருக்கும் போது பர்தா அணிந்திருந்த பெண்மணி ஒருவர் எங்களின் உரையாடலில் குறுக்கிடும் விதமாக கடைக்காரரிடம் தொடர்ந்து ஏதோ கேட்டவாறே இருந்தார். எனினும், நாங்கள் இருவரும் அந்தப் பெண்மணியைப் பார்க்காமல் தொடர்ந்து பேசினோம். குறுக்கீடு அதிகமாகவே, ஒருகட்டத்தில் அந்தப் பெண்ணைப் பார்த்து "என்னம்மா வேணும்" என்று கடைக்காரர் கேட்டார், அதற்கு அந்தப் பெண்மணி, "இந்த 10 ரூபாயை உண்டியலில் போடுங்கள்" என்று சொன்னார்.

என்னைக் கரைத்த பிச்சைப் பாத்திரம்! ennai karaitha pichai paathiramஎனக்கு கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் உடல் நடுங்கியது. பெண்மணியை நோக்கி இருகைகளையும் உயரே தூக்கி நன்றி செலுத்தினேன். அதை ஆமோதிக்கும் விதமாக அந்தப் பெண்மணி பர்தாவின் வழியே ஊறுவிய அந்த இரண்டு கண்களால் என்னை உற்று நோக்கிய போது 'நான்' என்ற தன்மை அடியோடு ஒழிந்தது.

"நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நீங்கள் சிவாங்காதான்; அதனை உணராமல் இருக்கிறீர்கள். சிவனை முழுவதுமாக உணர்வதற்கான வழிதான் சிவாங்கா" என்று சத்குரு அவர்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை இச்சம்பவம் எனக்கு உணர்த்தியது. சத்குருவிற்கு மிக்க நன்றி!