என்னை உருமாற்றிய யோகா!

என்னை உருமாற்றிய யோகா!, ennai urumatriya yoga

எது அவரை சத்குருவிடம் ஈர்த்துச் சென்றது என்று ஆலியாஹ்வினால் புரிந்து கொள்ள இயலவில்லை. அவர் சத்குருவை ஒருமுறை கூட கண்டதில்லை. அவர் யோகாவுடன் தொடர்பில் வந்த விதத்தையும், அதற்குத் துணையாக இருப்பவர்களைப் பற்றியும் கீழே பகிர்ந்துகொள்கிறார்.

ஆலியாஹ்,
உப-யோக ஆசிரியர், ஆந்திர மாநிலம்.

முதன்முதலாக சத்குருவைப் பற்றி நான் கேள்விப்பட்டது அக்டோபர், 2016ம் ஆண்டு. என் மகன் எனது WhatsApp எண்ணிற்கு ஒரு வீடியோ பதிவை அனுப்பி இருந்தான். அதில், பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி வளர்க்கவேண்டும் என்பது குறித்து சத்குரு விவரித்திருந்தார். என் மகன் கிண்டலுக்காக அதை அனுப்பி இருக்கக்கூடும் என்று நினைத்தேன், அந்தப்பதிவு என்னை மிகவும் கவர்ந்தது, என் கடிகாரத்தை திருப்பி நான் முதன்முதலில் தாயான நாட்களுக்கு திரும்பிச் செல்ல விரும்பினேன். பின்னர் Youtubeல் சத்குருவின் வீடியோக்களை காணத் தொடங்கினேன். இது தினமும் தொடர்ந்தது. சில தினங்கள் நாள் முழுவதும் சத்குருவின் வீடியோக்களை கண்டுகொண்டிருப்பேன்.

40 நாட்கள் இருவேளை ஷாம்பவி மஹாமுத்ரா மற்றும் ரமலான் நோன்பு இவை என்னுள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
ஏதோ ஒரு பரபரப்பு என்னுள், எதோ ஒன்று என்னை சத்குருவிடம் ஈர்த்து செல்வதுபோல் உணர்ந்தேன். சில நேரங்களில் சத்குரு கூறுவதைக் கேட்டு பிரமிப்படைந்ததுண்டு. அவை மிகவும் உணர்வு பூர்வமானதாக இருப்பதை உணர்ந்தேன். எனக்குள் ஒரு ஏக்கம் எவ்வாறேனும் சத்குருவுடன் தொடர்பில் இருக்க வேண்டுமென்று. இதனால் நான் அவரைப் பற்றி கூகுள் செய்து ஈஷா யோக மையம் மற்றும் ஈஷா யோகா வகுப்புகள் குறித்தும் அறிந்து கொண்டேன். நேரத்தை வீணடிக்காமல் அக்டோபர் 2016ல் ஈஷா யோகா வகுப்பில் சேர்ந்தேன்.

ஒவ்வொரு நாளும் வகுப்பு முடிந்து வீட்டிற்குச் செல்லும்போது என்னைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளவேண்டும் என்று எனக்குள் ஒரு ஏக்கம் இருந்தது. எவ்வாறேனும் சத்குருவை நேரில் சந்திக்கவேண்டும் என்று எண்ணினேன், அதற்கொரு வாய்ப்பு கிடைத்தது. அதுவே மஹாசிவராத்திரி 2017.

எனக்குத் தெரியும் இவ்வாறான நிகழ்சிகளில் கலந்து கொள்வது சாத்தியமற்ற செயல் என்று, ஏனென்றால் நான் ஒரு இஸ்லாமியப்பெண். என் கணவர் மிகவும் திறந்த மனதுடையவர், இல்லையென்றால் கண்டிப்பாக அனுமதித்திருக்க மாட்டார். நான் என்னுள் ஏங்கினேன், அதே நேரத்தில் அவரிடம் இதன் சாத்தியக்கூறுகள் குறித்து கேட்கவும் தயக்கம். என்னால் என்னைக் கட்டுப்படுத்த இயலவில்லை, சில நாட்கள் கழிந்தன, பின்னர் ஒரு நாள் மெதுவாக என் கணவரிடம் சென்று ஏழு நாட்கள் நான் ஆசிரமத்திற்குச் சென்று மஹாசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாமா என்று கேட்டேன்? பின் தலை குனிந்து அவர் இல்லை என்று சொல்வார் என்று எண்ணி நின்றேன்.

“ஆம்” நீ விரும்பினால் போகலாம், என்று அவர் கூறியபோது என்னால் நான் கேட்பதை நம்ப முடியவில்லை! நான் மேகத்தின் மேல் பறப்பதுபோல் உணர்ந்தேன், உடனடியாக ஒரு மாதத்திற்குப் பின் செல்ல வேண்டிய பயணத்திட்டத்தை வரையறுத்தேன். ஈஷா யோக மையத்தில் தொடர்ந்து ஏழு நாட்கள் அதுவும் மஹாசிவராத்திரி கொண்டாட்டங்களின் சமயத்தில், இது ஒரு எண்ணிலடங்கா ஆனந்தம், இருந்தும் நான் திருப்தியடையவில்லை, எனக்குள் மேலும் தேடல் அதிகரித்தது, எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பின்னர் நல்லவேளையாக நிலைமை சீரானது.

நான் எனது முதல் உலக யோகா தின வகுப்பை எங்கள் காலனியில் இன்று தொடங்கினேன். சில குறைபாடுகள் இருந்தும் வகுப்பு வெற்றிகரமாக நடந்தது. இது மேலும் என்னை உள்நிலையில் வளரச்செய்கிறது. மேலும் பங்கேற்றவர்களின் குதூகலம் என்னை ஆனந்தத்தில் ஆழ்த்தியது, மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் தனிப்பட்ட முறையில் எனக்கு நன்றி தெரிவித்தனர்.
என்னால் பயிற்சியை சரிவர செய்ய இயலாது இருந்தது. என் வேலைக்காக நிறைய பயணம் செய்யவேண்டியிருந்தது. அதனால் தினமும் இருவேளை பயிற்சி செய்ய இயலாமலிருந்தேன். நான் என்னைக் குற்ற உணர்ச்சியுடன் காண நேரிட்டது. பின் ரமலான் மாதம் வந்தது இதுவே சரியான தருணமாக உணர்ந்தேன். நான் 30 நாட்கள் விரதம் இருந்தேன். இதனால் பெரும்பாலான நேரங்களில் வெறும் வயிற்றோடுதான் இருந்தேன். நான் ரமலான் மாதத்தில் பயணம் செய்வதில்லை. 40 நாட்கள் இருவேளை ஷாம்பவி மஹாமுத்ரா மற்றும் ரமலான் நோன்பு இவை என்னுள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இப்பொழுது நான் சமாதானமாக காணப்படுகிறேன். “நான் தேடுவது என்னுள் என்னையே” என்று பின்னர் உணர்ந்தேன்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டும் என் அனுபவத்தை பகிர்ந்துகொள்ளும் விதமாகவும் இந்த வருடம் நான் உப-யோகா பயின்றேன். நான் எனது முதல் உலக யோகா தின வகுப்பை எங்கள் காலனியில் இன்று தொடங்கினேன். சில குறைபாடுகள் இருந்தும் வகுப்பு வெற்றிகரமாக நடந்தது. இது மேலும் என்னை உள்நிலையில் வளரச்செய்கிறது. மேலும் பங்கேற்றவர்களின் குதூகலம் என்னை ஆனந்தத்தில் ஆழ்த்தியது, மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் தனிப்பட்ட முறையில் எனக்கு நன்றி தெரிவித்தனர்.

சத்குருவை நான் கண்டறிந்து, உண்மையான யோகப்பாதையைப் பெற்ற அனுபவத்தை வார்த்தைகளில் பகிர்வது சாத்தியமற்றது. அதை உணரமட்டுமே இயலும்.

குறிப்பு:

உப-யோகா பயிற்சிகளை ஆன்லைனில் கற்க: AnandaAlai.com/YogaDay
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press ConvertLeave a Reply