தரிசனம் காண்போருக்கும் உண்டு, காணாதவர்க்கும் உண்டு. இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் உங்கள் இல்லத்திலேயே இன்று மாலை தரிசனம் தரவிருக்கிறார் சத்குரு.

மாலை 6.20 திற்கு துவங்கும் தரிசன நேரத்தில் நடைபெறும் நிகழ்வுகளை, சத்குரு உரையிலிருந்து சில துளிகளை, பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரஸ்ய பதில்களை, இங்கே உங்களுக்காக பதிவேற்றவுள்ளோம்! தொடர்பில் இருங்கள்…

20140131_BEL_0051-e
20140131_BEL_0017-e
20140131_BEL_0010-e
20140131_BEL_0009-e

ஒரு நாள் இடைவெளியில் மீண்டும் கிடைத்தது சத்குரு தரிசனம்! சூரிய கதிர்கள் சுள்ளென்று சுட்டெரிக்கவில்லை என்றாலும் குருவின் அருட்கதிர்கள் நன்றாகவே அனைவரின் உயிரையும் தொட்டன.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒரு ஹிந்தி மெல்லிசையைத் தொடர்ந்து, "பூதேஷ யோகீஷ சர்வேஷ மகேஷ்வராய" உச்சாடனையை சத்குரு செய்தபோது, பங்கேற்பாளர்களும் பின் தொடர்ந்தனர். சக்திவாய்ந்த அந்த உச்சாடனை அங்கு அருள் வெடி ஒன்றை வெடிக்கச் செய்தது என்றே சொல்ல வேண்டும். அந்த அற்புத தீட்சைக்குப் பின் சத்குருவின் உரை தொடர்ந்தது.

புத்தகத்தில் இருப்பதில்லை ஆன்மீகம்!

"என்னுடைய உரைகளை யூ ட்யூப்பில் தொடர்ந்து பார்த்து வரும் ஒருவர் இன்று, சென்னையில் ஒரு அரசியல் ஆலோசனைக் கூட்டத்தில் வைத்து, 'நீங்கள் ஏன் மற்ற குருமார்களைப் போல இல்லை' என்று கேட்டார். ஏனென்றால் நான் புத்தகத்தை படித்து அதை வைத்து எதையும் பேசுவதில்லை. எனது அனுபவத்தின் அடிப்படையிலேயே பேசுகிறேன்."

தனிமனிதனே அடிப்படை

"நாம் உருவாக்கியுள்ள சமூகமும் பிற அமைப்புகளும் தனி மனிதனின் நல்வாழ்விற்காகவே. ஒரு கட்டத்தில் இதை மறந்து, சமூகத்திற்காகவும் உருவாக்கியுள்ள அமைப்பிற்காகவுமே மனிதன் என்ற நிலைக்கு சென்று விடுகிறார்கள். ஒரு நல்ல சமூகத்தை உருவாக்க வேண்டுமானால், முதலில் நல்ல மனிதர்களை உருவாக்க வேண்டும். அதைவிட்டு விட்டு நல்ல சமூகத்தை உருவாக்க நினைப்பது என்பது முடியாத காரியம்." என்று கூறிய சத்குரு, சமுகங்களும் அமைப்புகளும் தேசமும் அரசியல் கட்சிகளும் மனிதனின் நல்வாழ்விற்காக உருவாக்கப்பட்டதே என்பதை தெளிவுபடுத்தினார்.

கேள்வி நேரம்

லிங்க பைரவியை, தியானலிங்கத்தை வணங்க ஒரு முறை உள்ளது, குருவை வணங்குவதற்கு முறை உள்ளதா?

"குருவை வணங்குவதற்கு ஒரு முறை உள்ளது. ஆனால், ஈஷாவில் நீங்கள் அதைக் கடைப்பிடிப்பதை நான் விரும்பவில்லை. குருவை வணங்குவது என்பது திட்டமிட்டு வணங்குதல் அல்ல. உங்களை விட பிரம்மாண்டமான ஒன்று உங்கள் முன் இருப்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தால், உங்கள் கரங்கள் தானாகவே கும்பிட்டுவிடும். நீங்கள் என்னைப் பார்க்கும்போது எதையும் உங்களுக்குள் உணரவில்லை என்றால், நீங்கள் உங்கள்பாட்டுக்கு நேராக நடந்து செல்லுங்கள். ஏனென்றால், பிறரின் வணங்குதல் என்பது எனக்கு அவசியமில்லை. உங்களுக்குள் ஏதோ ஒன்று உணரப்படும்போது வணங்குதல் என்பது தானாகவே நடக்கும்."

இப்படியொரு விளக்கமளித்த சத்குரு, குருவை வணங்குவதற்கு முறை முக்கியமில்லை, உள்நிலை உணர்தலே முக்கியம் என்பதை விளக்கினார்.

சுகம் ஸ்திரம் ஆசனம்

ஆசனங்கள் மற்றும் மந்திர உச்சாடனைகள் பற்றிய கேள்விக்கு,

"ஆசனங்கள் என்பது உடலை ஒரு சுகமான நிலையில் வைத்திருப்பதற்காகவே. பதஞ்சலி முனி யோக சூத்திரத்தைக் கூறும்போது, அடிப்படை அம்சமாக அவர் சொல்வது 'சுகம்-ஸ்திரம்-ஆசனம்'. அதாவது, உடலின் நிலை ஸ்திரமாக, அதே சமயம் சௌகர்யமாக உணர்வதே ஆசனமாகும். மந்திர உச்சாடனைகள் செய்வதற்கு குறிப்பிட்ட ஆசனத்தில் அமர்ந்து செய்வது முக்கியம். ஏனென்றால் அப்போதுதான் உங்களால் சுகமாக மந்திர அதிர்வுகளை உணர முடியும். இல்லையென்றால் நீங்கள் 'ஷிவா' என்று உச்சாடனை செய்தால், சில மணி நேரத்தில் உங்கள் உடல் வலியின் காரணமாக 'ஷிவா' என்று கூப்பிட ஆரம்பிக்கும்" இப்படி நகைச்சுவைச் செய்த சத்குரு, ஆசனம் மற்றும் மந்திரங்கள் பற்றி இன்னும் விரிவாகப் பேசினார்.

ஒரு அழகிய கன்னட மெல்லிசை காதுகளில் நுழைந்து இதயம் தொட, சத்குரு அனைவரின் உயிரையும் சக்தி அதிர்வுகளால் தொட்டு விடைபெற்றார்.

மீண்டும் விரைவில் தரிசிப்போம்!