இங்கே கோவை ஈஷா யோகா மையத்தில், சில நூறு பேர் சத்குருவின் தரிசனத்தில், அவர் அருளில் திளைக்க காத்திருக்கிறோம். உங்களுக்கும் அந்தப் பட்டியலில் சேர விருப்பமா? இதோ இந்த நேரலை வர்ணனையில் எங்களுடன் இணைந்திருங்கள். மாலை 6.20 மணிக்கு துவங்கும் தரிசன நேரம் முழுமையாக உங்கள் கணினித் திரையில் விரிகிறது...

 

6:20

சத்குரு வந்து அமர்ந்து யோக யோக யோகீஷ்வராய மந்திரம் உச்சரிக்க, அனைவரும் அவரைப் பின்தொடர்ந்து உச்சரித்தனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

6:40

"பெண்களுக்கு கடவுள் முக்கியமா கணவன் முக்கியமா?" என்று ஒருவர் கேட்க, "அது கணவனின் சாமர்த்தியம் பற்றியது. மனைவி தன் தேவைகளுக்கெல்லாம் தன்னை நாடும்படி கணவன் வைத்திருந்தால் அவளுக்கு கணவன் முக்கியமானவனாக இருப்பான். அவள் தேவைகளுக்கெல்லாம் அவள் மேலே பார்க்க வேண்டிய நிலை இருந்தால் கடவுள் முக்கியமானவராக இருப்பார்" என்று சொல்லி சிரிக்கவைத்து சிந்திக்கவும் வைத்தார்.

6:48

ஞானோதயத்திற்கான வயது பற்றி ஒருவர் கேட்க, எந்த வயதாக இருந்தாலும் சரியான வயதுதான். அறிந்துகொள்வது என்பது உங்களுக்கு அதிமுக்கியமானதாக இருந்தால், எந்த வயதானாலும் ஞானோதயம் சாத்தியமே என்றார் சத்குரு.

7:03

"மறுபிறவி என்ற கோட்பாடு இருக்கிறதா? இருந்தால் அதை தவிர்ப்பது எப்படி?" என்று ஒருவர் கேட்க, "பிறப்பு என்பது ஒரு கோட்பாடு கிடையாது. அதைப்போலவே மறுபிறவி என்பதும் ஒரு கோட்பாடு அல்ல" என்று நம் அறியாமையை சுட்டிக்காட்டினார்.

7:10

ஏகாதசி விரதம் மேற்கொண்டு பசியுடன் இருக்கும் ஆசிரமவாசிகளை அதற்கு மேலும் காக்கவைக்க மனமில்லாமல் விடைபெற்றுச்சென்றார்.