6.25 pm

புல்லாங்­­­குழலின் மெல்லிசையும் மென்மையான கீதமும் சேர்ந்து ஒலிக்க கீதத்தின் மென்மையுடனேயே துவங்கியிருக்கிறது இன்றைய தரிசன நேரம்...

சத்குரு கண்மூடி அமர்ந்திருக்கிறார்....

6.36 pm

யோக யோக யோகீஷ்வராய... மந்திரத்தை சத்குருவுடன் சேர்ந்து உச்சரித்து தியானத்தில் அமர்ந்திருக்கின்றனர் அன்பர்கள்.

6.42 pm

"யோக யோக யோகீஷ்வராய
பூத பூத பூதேஷ்வராய
கால கால காலேஷ்வராய
ஷிவ ஷிவ சர்வேஷ்வராய
ஷம்போ ஷம்போ மஹாதேவாய"

தியான அன்பர்கள் தன்னுடன் இணைந்து உச்சரித்த மந்திரத்தைப் பற்றி தன் உரையை துவக்கினார் சத்குரு...

6. 55 pm
எதற்கு மந்திரம்?

நாம் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரிக்கும்போது அதன் அர்த்தத்தைப் பார்ப்பதில்லை. மனிதனுக்கு தன் இயல்பில், தனக்கு பரிச்சயம் இல்லாத, புரியாத ஒன்றன் மேல் ஈடுபாடு ஏற்படுவதில்லை. எத்தனை பேருக்கு மலர் மலர்வதை உற்று நோக்க விருப்பமிருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? இங்கு பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் பிரபஞ்சத்தைப் பார்க்க பலருக்கு கண்கள் இல்லை, தான் காணும் அத்தனையிலும் ஏதாவது பொருள் இருக்கிறதா, அர்த்தம் இருக்கிறதா என்றே பார்க்கின்றனர்.

சப்தம் என்பது படைத்தலின் சாராம்சமே. இந்தப் படைத்தலில் உள்ள அத்தனையும் ஒரு சப்தமே. இந்தப் பாறை ஒருவிதமான சப்தம், உங்கள் உடல் ஒருவிதமான சப்தம், உங்கள் மூச்சோ வேறுவிதமான சப்தம். இங்குள்ள பாறை ஒருவிதமான அதிர்வில் இருக்கும்போது தியானலிங்கமோ உச்சகட்ட அதிர்வுநிலையில் இருக்கிறது. இன்று நவீன அறிவியல் இந்தத் திசை நோக்கி நகரத் துவங்கியிருக்கிறது. நிச்சலனித்திற்கும் ஒருவித அதிர்வு இருக்கிறது. ஆனால், சப்தத்தை கடந்த பரிமாணத்தை ஷிவா என்கிறோம்.

என்று பேசிக் கொண்டிருந்த சத்குரு, மீண்டும் தன்னுடன் அதே மந்திரத்தை சேர்ந்து உச்சரிக்கும்படி கூற அத்தனை பேரும் மந்திரப் பிரவாகத்தில் சத்குருவுடன்...

7.14 pm

கேள்வி நேரம்

கேள்வி

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆசிரமத்தில் இருக்கும் போது உங்களுடன் எளிமையாக தொடர்பில் இருக்க முடிகிறது, ஆனால் வெளியே சென்றால் அது சற்றே சிரமமாக இருக்கிறது? எப்படி இந்த உணர்வை தக்க வைத்துக் கொள்வது?

சத்குரு பதில் சொல்லத் துவங்கியிருக்கிறார்...

7.19 pm

சத்குரு

தன் அருகிலிருந்த பூவினை எடுத்த சத்குரு, இந்த பூவின் மணத்தைப் பற்றி பேசச் சொல்கிறீர்கள். மூக்கடைத்தவருக்கு பூவின் மணம் புரிய போகிறதா என்ன? இதனை உணர உங்களுக்கு நுண்ணுணர்வு தேவை.

இதோ இந்த பிரபஞ்சத்தை எந்த சக்தி பிடித்து வைத்திருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? இந்த பூமியை எந்த சக்தி பிடித்து வைத்திருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? தெரிந்திருந்தால் நீங்கள் அதனை படைத்திருப்பீர்கள் அல்லவா? ஆனால் அந்த சக்தி எதுவென்று பிடிபடவில்லை. எனவே இது நீங்கள் எப்படிப்பட்ட உணரும் தன்மையுடன் இருக்கிறீர்கள் என்பதை பொருத்ததுதான்.

நீங்கள் இங்கே சும்மா இருங்கள், அருளில் தோய்ந்திடுங்கள். ஒரே உணவை இரண்டுபேர் உண்டாலும் இருவருக்கும் ஒரேவிதமான சத்து அவர்கள் உடலில் சேர்வதில்லை தானே? அதனால் நீங்கள் எப்படி உள்வாங்கிக் கொள்கிறீர்கள் என்பது மிக முக்கியம்.

இதோ இந்த நறுமணத்தை உமிழும் பூவைப் போல நீங்களும் நீங்கள் உள்வாங்கிக் கொண்ட அருளை பரப்ப தயாரா என்பதே கேள்வி. அருள் எங்கும் நிறைந்திருக்கிறது என்று அருளைப் பற்றி பேசினார் சத்குரு.

7.27 pm

கேள்வி

சத்குரு எனக்கு அநியாங்கள் நடக்கும்போது நான் என்னை எப்படி நடத்திக் கொள்வது? என்று தன் குடும்ப உறவில் ஏற்பட்டுள்ள சிக்கலை குறிப்பிட்டு ஒரு பெண்மணி கேள்வி கேட்டபோது...

சத்குரு

உங்களுக்கு உங்களை திருத்திக் கொள்ள விருப்பமா? அல்லது கணவரை மாற்ற விருப்பமா? நமக்கு நாமே உண்மையாய் இருந்து பதிலளித்தால் நமக்கு இன்னொருவரை திருத்துவதிலேயே விருப்பம். சத்குருவிடம் கேள்வி கேட்பதால் "என்னை எப்படி திருத்திக் கொள்வது சத்குரு?" என்று கேட்கிறீர்கள்.

இன்று உலகம் மற்றவரை திருத்துவதை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. தன்னை திருத்திக் கொள்வதற்கு நாட்டமில்லாமல் இருக்கிறது, என்று சொன்ன சத்குரு.

நான் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட விரும்பவில்லை, ஆனால் உங்கள் குடும்பத்தில், உங்கள் வாழ்க்கையில் தியானத்தன்மையை எடுத்து வாருங்கள். தியானத்தன்மை ஓங்கினால் நீங்கள் பிரச்சனையாய் இருக்க மாட்டீர்கள், நீங்கள் பிரச்சனைக்கு தீர்வானவராய் இருப்பீர்கள்.

சூழ்நிலைகளுக்கு தீர்வாய் நீங்கள் இருந்தால், உங்களிடம் அத்தனை பேரும் அண்டுவர். நீங்கள் பிரச்சனையாய் இருக்கும் பட்சத்தில் உங்களிடமிருந்து விலகி இருக்கவே விரும்புவர்.

குடும்ப உறவை பொருத்தவரை நீங்கள் ஒவ்வொன்றுக்கும் பொறுப்பெடுத்துக் கொள்வது மிக மிக அவசியம். நீங்கள் உங்கள் துணையிடம் எதையாவது கரக்க முயன்றால் அவரும் உங்களிடம் கரக்க முயல்வார். பொறுப்பாய் வாழும் இந்த அடிப்படை பண்பு கூட உங்களிடம் இல்லாது போனால், நீங்கள் குடும்ப உறவில் ஈடுபட கூடாது. எல்லோரும் பள்ளிக்கு செல்கிறார்கள் என்பதற்காக நீங்கள் பள்ளிக்குச் செல்லக் கூடாது, எல்லோரும் வேலைக்கு செல்கிறார்கள் என்பதற்காக நீங்களும் வேலையில் சேரக் கூடாது, எல்லோரும் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதற்காக நீங்களும் திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

இந்த ஒரு குணத்தை மட்டும் நீங்கள் உங்களுக்குள் எடுத்து வராவிட்டால், திருமணம் சுவைக்காது. உங்கள் திருமண வாழ்வை எப்படி நடத்துவது என்று நான் அறிவுரை கூற விரும்பவில்லை, விழிப்புணர்வாய் வாழ்க்கை நடத்தும் ஒரு சூழ்நிலையை உங்கள் வாழ்க்கையில் எடுத்து வாருங்கள், பிறவற்றை அப்புறம் பார்ப்போம்.

வாழ்க்கையையே குறைசொல்வதில் வாழ்ந்தென்ன பிரயோஜனம்?

7.52 pm

ஊழலில்லாமல் வாழ்வது எப்படி?

கேள்வி

நான் ஆன்மீகப் பாதையில் இருக்கிறேன், நான் உங்கள் பக்தன், எனக்குள் ஊழல் இல்லாமல் வாழ்வது எப்படி?

சத்குரு

ஊழல் என்பது எனது, உனது என்று பிரித்துப் பார்ப்பதிலிருந்தே துவங்குகிறது. இதுவே ஊழலுக்கு அடிப்படை. முதலில் உங்கள் உடலுடன் அடையாளம் கொள்கிறீர்கள், ஊழல் துவங்குகிறது. பின்பு திருமணம் செய்து கொள்கிறீர்கள், இன்னொரு உடலுடன் அடையாளம் ஏற்படுகிறது, ஊழலும் வளர்கிறது.

தன் உடலுடன் மட்டும் அடையாளம் இருக்கும்போது ஊழல் சிறிய அளவில் இருக்கிறது. குடும்பம் என்று வளரும்போது ஊழல் விரிகிறது. அதன்பின் சமூகம், தேசம் என்று இது விரிவடைந்து கொண்டே செல்கிறது.

உங்கள் குடும்பத்திற்கு ஏதோவொன்று நிகழ்கையில் உங்களுக்குள் குடம் குடமாக கண்ணீர் ஊற்றெடுக்கிறது. வயிற்றில் உணவில்லாமல் தெருவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் உங்களுக்குள் பாதிப்பு இல்லை. இது ஊழலின் உச்சம். உங்களுக்கு பெரிய பதவி கிடைக்க வேண்டும், அதன்பின் ஊழலால் நான் தாக்கமுறாமல் இருக்கிறேனா என பார்க்க வேண்டாம், தற்சமயம் நீங்கள் பக்தராக இருக்கும்போதே பாருங்கள். எனக்குள் ஊழலில்லாமல் இருப்பது எப்படி என்று பாருங்கள்.

நீங்கள் தியானத் தன்மையுடையவராய் இருந்தால், நீங்கள் பக்தராய் இருந்தால் உங்களுக்குள் ஊழல் எப்படி நுழையும்?

அதனால் பதவி உங்களை ஊழலுடையவராய் ஆக்குகிறது என்பதல்ல, நீங்கள் நேர்மையில்லாதவராக இருக்கிறீர்கள் அதுதான் அடிப்படை காரணம். பதவியினால் அது இன்னும் அழுத்தமடைகிறது, உறுதிபெறுகிறது. அவ்வளவுதான்.

என்னை பக்தன் என கூறிக் கொள்ளும் நீங்கள் உண்மையிலேயே பக்தனாக வாழ்ந்தால், உலகம் முழுவதும் உங்கள் அரவணைப்பில் இணைந்துவிடும். அங்கு ஊழல் இருக்காது.