முகம் காண ஏங்கிய அனைவருக்கும் கிடைத்தது குருவின் தரிசனம், இன்றைய தரிசன நேரத்தின் தொகுப்பு தொலைவில் ஏங்கும் உங்களுக்கும் இப்போது...

inside post

6.20 திற்கு துவங்கிய தரிசனம் சத்குருவின் இருப்பில் 7.20 வரை மௌனத்தில் கரைந்தது. சத்குருவின் நிச்சலனமும் சக்தி அதிர்வுகளும் தியான அன்பர்களை பீறிட்டு எழச் செய்தது. மௌனத்தில் சுவைத்து திளைத்த பலருக்கும் ஒரு மணி நேரத்திற்கு மௌனமே விடையாய் கிடைத்ததால் எழுந்த முதல் கேள்வியே மௌத்தைப் பற்றித்தான்...

மௌன விரதம் எதற்காக? இப்படி மௌனமாக இருந்தால் நம்முடைய போட்டி போடக் கூடிய மனப்பான்மை மேன்மையடையுமா?

இந்தப் படைப்பின் மூலம் நிச்சலனம், நீங்கள் மௌனத்தை ஒன்று விழிப்புணர்வுடனோ அல்லது விழிப்புணர்வின்றியோ செய்து படைப்பைத் தொட முடியும். நீங்கள் மௌத்தைப் பயிற்சி செய்ய முயன்றால் உலகத்துடன் ஒப்பந்தம் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

நாம் உச்சரிக்கும் சத்தங்கள், நம் உடலின் மேல் ஒருவிதமான தாக்கம் ஏற்படுத்த முடியும். அதுவே நீங்கள் மௌனத்தில் இருந்தால் உங்கள் முழு அமைப்புமே தணிந்து சாந்தமடையும். நீங்கள் எழுப்பும் பல்வேறு சப்தங்களிலிருந்து ஒரேயொரு சப்தத்திற்கு நீங்கள் குறைந்தால், நீங்கள் ஒரு செயல்முறைக்கு தீட்சை அளிக்கப்பட்டிருந்தால், அதுவே இந்தப் படைத்தலை அடைவதற்கு ஒரு கருவியாக மாறும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மௌனம் நம் போட்டியிடும் திறனை அதிகரிக்கிறதா?

நீங்கள் உண்மையில் மௌனமானால், சிரத்தையெடுத்து மௌத்தை ஜோடிப்பதல்ல, உண்மையில் நீங்கள் மௌனத்தை தொட்டால்... வெறும் 21 நிமிடங்களுக்குக் கூட நீங்கள் மௌனத்தைத் தொட்டால் உங்கள் செயல் திறன் 200 லிருந்து 300 மடங்கு வரை விருத்தி அடையும். யோகக் கலாச்சாரத்தில் பல விஷயங்களை ஒரே சமயத்தில் செய்வதுபோன்ற அமைப்பு இருக்கிறது. நீங்கள் சக்தி சலன கிரியா செய்தால் அதிலுள்ள எண்ணிக்கைகள் என இந்தப் பல்முனைத் திறன் துவங்குகிறது.

இந்த உடல், உயிர் பல கோடி விஷயங்களை ஒரே சமயத்தில் செய்கிறது. உங்கள் உடல் ஒரே சமயத்தில் மூச்சு விடுகிறது, இதயத்தைத் துடிக்கச் செய்கிறது, உங்கள் சிறுநீரகம் வேலை செய்கிறது. இந்தப் பிரபஞ்சமும் அப்படித்தான். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அந்தப் புத்திசாலித்தனம் உங்களுக்குள்ளும் பொதித்து வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்துடன் ஒன்றானால், நீங்களும் பிரபஞ்சமும் இரண்டாக நின்றால் அல்ல, உண்மையில் ஒன்றானால் அதீத செயல்திறன் என்பது உங்கள் பாகமாகிவிடும். எது வேண்டுமோ அதைச் செய்வீர்கள்.

நீங்கள் மௌனத்தை நுகர்ந்து பார்த்திருந்தால் கூட, உங்கள் வாழ்க்கை வியப்பளிக்கும் வகையில் மாறிவிடும். நீங்கள் மௌனத்தில் வாழ்ந்தால் உலகம் உங்களை தெய்வீகமாய் பார்க்கும்,"

என்ற சத்குரு மௌனத்தை வார்த்தைகளில் மட்டுமல்லாமல் அனைவரது அனுபவத்திலும் கொட்டினார்.

நம் பிரார்தனைகளுக்கு யார் பதில் கொடுக்கிறார் என ஒருவர் கேள்வி எழுப்ப...

உங்கள் பிரார்த்தனை ஒர் அர்ப்பணிப்பாக இருந்தால் அதற்கு பதில் கிடைக்கிறதா இல்லையா என யார் கவலைப்படுவது. அது அர்ப்பணிப்பாக இல்லாத பட்சத்தில் அத்தனை கேள்விகளும் எழத் தொடங்கிவிடுகின்றன.

சப்தரிஷிகள் சிவனின் முன் பல ஆயிரம் வருடங்கள் அமர்ந்தனர். சிவனின் மௌத்தில் திளைத்து, அவன் அளித்ததைச் சுவைத்தனர். அவனிடமிருந்து தாங்கள் கற்றதை எல்லாம் கற்றபின், அவர்கள் விடைபெறும் தருணம் வந்தபோது, "சிவன் நீங்கள் எனக்கு தட்சணை ஏதும் வழங்காமல் செல்கிறீர்களே," என்றார்.

அத்தனை நாட்கள் சிவன் மடியில் அமர்ந்து அத்தனையையும் பருகியதால் கிறங்கிப் போயிருந்த சப்தரிஷிகளுக்கு எதை வழங்குவது எனத் தெரியவில்லை. அப்போது அகத்தியர் சிவனின் பாதத்தில் வணங்கி, "நீங்கள் வழங்கிய அத்தனையையும் உங்கள் பாதத்தில் அர்ப்பணிக்கிறேன்," என சொல்லவும். பிற ரிஷிகளும் அவரைத் தொடர்ந்து அதையே செய்தனர். அவர்கள் கற்றவை அனைத்தும் அவர் பாதத்தில் சமர்ப்பித்தனர். அப்போது சிவன், "இன்று தான் நீங்கள் முன்னம் இருந்தது போல் முழுமையாக வெறுமை அடைந்திருக்கிறீர்கள், சென்று வாருங்கள்," என்றார்.

"நீங்கள் வெறுமையாய் இருந்தால், நான் எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்," என்றார். அவர்கள் சிவனை விட்டு எத்தனை தொலைவில் இருந்தாலும் அவரை ஆக்ரஷிக்கும் திறனைக் கற்றனர், பெற்றனர். அப்போது தாங்கள் கற்றவை மட்டுமல்லாமல், சிவனிடம் என்ன இருந்ததோ அது முழுவதையும் பெற்றனர். அவர்கள் கற்றதன் மூலம் பெற்றது கொஞ்சம், அவர்கள் அர்ப்பணித்ததன் மூலம் பெற்றது அத்தனையும்.

யார் கேட்கிறாரோ அவர் வெகு தொலைவிற்கு செல்ல மாட்டார். சப்த ரிஷிகள் ஆரம்பித்த அந்த மரபுப்படி இன்றும் குரு பூஜையில் 16 வகையான உபச்சாரங்கள் செய்யப்படுகின்றன. இதனை ஷோடச உபச்சாரம் என்கிறோம். ஒருவேளை நீங்கள் வேண்டிக் கொள்ளு நிலை ஏற்பட்டால் அது அர்ப்பணமாக இருக்கட்டும், விண்ணப்பமாக இருக்க வேண்டாம்," என்று அர்ப்பணிப்பிற்கும் வேண்டுதலுக்கும் உள்ள வித்தியாசத்தை உயிர் உரையும் வகையில் எடுத்துரைத்தார்.

"சப்தங்கள் பல நிசப்தம் ஒன்றே" எனக் கூறிய சத்குரு நிசப்தத்தோடு நிசப்தமாய் விடை பெற்றார். மற்றொரு தரிசன நேரத்தில் சந்திப்போம். வணக்கம்.