என் கையைப் பற்றிக்கொள்

என் கையைப் பற்றிக்கொள், En kaiyai patrikkol

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், “என் கையைப் பற்றிக்கொள்” எனும் கவிதையின் மூலம், வெளிசூழ்நிலைகளின் தாக்கங்கள் நம்மைத் தொடாதவாறு அவர் கைப்பற்றிக் கரைந்திட அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் சத்குரு.

என் கையைப் பற்றிக்கொள்

நெருப்பின் ஜுவாலைகள் உன்னைப் புசிக்காது
குளிர்ப் பிரதேசங்கள் உன்னை விறைக்கச் செய்யாது
ஆழ்கடலும் உன்னை மூழ்கடிக்காது
பூமியின் பிளவுகள் உன்னை புதைத்திடாது

என் கையைப் பற்றிக்கொண்டு
நித்தியத்தை ருசித்திடு.

நான் அறிஞனுமில்லை தத்துவவாதியும் இல்லை
நான் ஞானத்தின் குவியலும் இல்லை
நான் வெறும் வெற்றிடம்
இதனோடு உரசிடு
கரைந்திடு

அன்பும் அருளும்,

Sadhguruஇதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert