எல்லையற்றதைக் கொண்ட குமிழி

ellaiyatrathai-konda-kumizhi

தனக்கு உள்ளேயும் வெளியேயும் நிறைந்திருக்கும் எல்லையற்ற தன்மைக்கு நன்றி தெரிவித்து சத்குரு வடித்துள்ள கவிதை, இந்த வார சத்குரு ஸ்பாட்டில்…

எல்லையற்றதைக் கொண்ட குமிழி

என் செயல்கள்
மற்றும் பலரின் செயல்கள் நிறைந்த
அர்த்தம் பொதிந்த சில நாட்கள்,
அர்த்தம், உபயோகம் என
அற்பமான நோக்கங்களற்ற
சில நாட்கள்,
அர்த்தமும் இல்லாத, பயனும் இல்லாத
அழகும் இல்லாத வெறுமையில்
சில நாட்கள்.
நன்றியில் நனைகிறேன்…
என்னைக் கடந்தும்,
எனக்குள்ளேயும் நிறைந்திருக்கும்
எல்லையற்றதின் அரவணைப்பில்.
எல்லையற்றதை உள்ளடக்கிய குமிழியாய் நான்!

அன்பும் அருளும்,

Sadhguruஇதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert