தியானலிங்கம் – தடைகளை வென்ற வெற்றிச் சரித்திரம்!

dl-background
தியானலிங்கம் - தடைகளை வென்ற வெற்றிச் சரித்திரம்
தியானலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. இந்நேரத்தில், நம் முன்னே பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கும் தியானலிங்க பிரதிஷ்டை நிகழ்ந்த அந்த தருணங்களை திரும்பிப் பார்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். புகைப்படங்களும் எழுத்துக்களும் சேர்ந்து நம்மை காலத்தால் பின்னோக்கி அழைத்துச் செல்கின்றன. வாருங்கள் சற்றே லயித்திருப்போம், தெய்வீக அருளில்!
dl-background
ஆன்ம விடுதலைக்கான ஒரு விதை
ஒருமுறை நீங்கள் தியானலிங்கத்தின் சக்தி எல்லைக்குள் இருந்தால், ஆன்ம விடுதலைக்கான விதை உங்களுக்குள் விதைக்கப்படுகிறது.
dl-background
இது மூன்று ஜென்மக் கனவு!
ஞானி ஸ்ரீபழனி சுவாமிகள் சிவயோகிக்கு தீட்சை தந்தருளி, தியானலிங்கம் நிறுவிட அன்புக்கட்டளை இட்டார்! சிவயோகி மூன்று பிறவிகள் பயணித்து சத்குருவாக தியானலிங்கத்தை பூர்த்தி செய்துள்ளார்.
dl-background
இவன் மீண்டும் வருவான்
ஸ்ரீபழனி சுவாமிகளின் திட்டத்தை நிறைவேற்ற நினைத்த சிவயோகி, அப்பிறவியில் முயன்று தோற்றார்! அடுத்த பிறவியில் ஸ்ரீபிரம்மாவாகப் பிறந்து தன் மூலமும், பாலயோகியின் உடல் மூலமும் மீண்டும் முயன்றார், தோற்றார்! ‘இவன் மீண்டும் வருவான்’ என சொல்லி, வெள்ளியங்கிரி மலையேறி, 7 சக்கரங்களின் வழியாக உடலைவிட்டு வெளியேறினார். அதனாலேயே அவரை ‘சக்ரேஸ்வர்’ என்றும் அழைப்பதுண்டு.
dl-background
பிறப்பின் இலட்சியம் அறிந்தார்!
கடந்த 2 பிறவிகளில் குறிக்கோள் நிறைவேறாவிட்டாலும், வெற்றியின் படிக்கற்களாக ஆனது! மாடர்ன் இளைஞராக இருந்த ஜகி, தான் ஒரு ஞான மனிதர், தியானலிங்கத்திற்காகவே பிறப்பெடுத்திருக்கிறோம் என்பதை இப்பிறவியில் உணர்ந்து கொண்டது ஒரு அதிசயம் போலத் தோன்றலாம்!
dl-background
சாமுண்டி மலையில் ஒருநாள்...
அனைத்தையும் கேள்வி கேட்கும் துடிப்புமிக்க இளைஞராக வலம் வந்த சத்குரு, குறிப்பிட்ட ஒரு நாள் தனிமையில் சாமுண்டி மலையின் ஒரு பாறையின் மேல் அமர்ந்திருந்தபோது... திடீரென்று அவருக்குள் ஏதேதோ மாற்றங்கள்! வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு பூரணத்துவமான உணர்வு நிலை! கண்களிலிருந்து அருவிபோல கொட்டும் கண்ணீர். ‘நான்’ என்பது என்ன என்கிற அர்த்தம் புரிந்த தருணம். ஞான வெடி வெடித்து... உடலெல்லாம், மனசெல்லாம் பரவசப் பூக்கள் ஒரே கணத்தில் பூத்த நிலை. அதுவே, சத்குரு தன்னை உணர்ந்த சமயம்!
dl-background
3 ஜென்மங்களை சுமந்து அலைந்தபோது...
சாமுண்டி மலையில் கிடைத்த அந்த ஆன்மீக அனுபவத்திற்குப் பின் அவரது வாழ்வில் மாற்றங்கள். 3 ஜென்ம வாழ்க்கையை ஒரே சமயத்தில் வாழ்ந்து கொண்டிருந்த சத்குருவிற்கு, தியானலிங்கம் ஒன்றுதான் இத்தனை ஜென்மங்களின் லட்சியம் என்பது துல்லியமாகப் புரிந்தது.
dl-background
கோவையில் தியானலிங்கம் அமைய காரணமென்ன?
சத்குரு அவர்களுக்கு 16 வயது வரைக்கும், எதைப் பார்த்தாலும் பின்னணியில் மலை தெரியும். எதேச்சையாக, கோவை வெள்ளியங்கிரி மலைகளைக் காண நேரும்போது இதுதான் தன் கண்களுக்குள் இருக்கும் அந்த மலைகள் என்பதை உணர்ந்தார். அதுமட்டுமல்ல, தியானலிங்கம் அமைப்பதற்கான இடம் என தெளிந்தார்!
dl-background
ஹோல்னெஸ் வகுப்பு நடைபெற்ற நோக்கம்!
தியானலிங்க பிரதிஷ்டையில் சத்குருவோடு பக்கபலமாக துணை நிற்கப் போகிற நபர்களைத் தேர்வு செய்வதற்காக 90 நாட்கள் ஹோல்னெஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சுமார் 70 பேர் பங்கேற்றார்கள். அந்த 70 பேரிலிருந்து 14 பேரை மட்டும் தேர்வு செய்வதே அதன் நோக்கம். இறுதியில் 14 நபர்களுக்கு பதிலாக சத்குருவோடு இணைந்து பணியாற்ற ஒரே மன-உணர்வு-உடல் கொண்ட இரண்டே பேர் மட்டும் தயார்செய்ய முடிவு செய்யப்பட்டது.

தியானலிங்க பிரதிஷ்டைக்காக அமைக்கப்பட்ட முக்கோணச் சக்தி வியூகத்தில், ஒரு முனை, சத்குரு. மற்ற 2 முனைகளில் ஒருவர் சத்குருவின் இல்லத்தரசி விஜி. மற்றொரு முனையாக தேர்வானவர் பாரதி அவர்கள்.
dl-background
போபால் நகரில் பூர்த்தியடையாத ஒரு தியானலிங்கம்!
சத்குருவும் அவருடன் கர்மயாத்திரை மேற்கொண்டவர்களும் போபாலிலிருந்து 30கி.மீ தொலைவிலுள்ள போஜ்பூரில், கி.பி.992ல் ஏற்கனவே ஒரு யோகியால் உருவாக்கப்பட்ட நிறைவடையாத தியானலிங்கத்திற்கு சென்றனர்.
dl-background
எதிர்பாராத நிலையில் மஹாசமாதி அடைந்த விஜி!
கர்ம யாத்திரை முடிந்து திரும்பிய பிறகு, அந்த ஆன்மீகப் பயணம் இருவருக்கும் அதிகமான மனோபலத்தையும் சக்தியையும் வழங்கியிருந்தது. பிரதிஷ்டைக்கான முன்னேற்பாடுகள் கிட்டத்தட்ட 95 சதவிகிதம் முடிந்திருந்த சமயத்தில்தான் அந்த மிகப் பெரிய, எதிர்பாராத தடை நிகழ்ந்தது. சத்குருவின் மனைவி விஜி மஹாசமாதி அடைந்தார்.
dl-background
பிரதிஷ்டைக்குப் பின்னர் உயிர் பிரியும் வாய்ப்பு...
விஜி அவர்களின் மஹாசமாதிக்குப் பிறகு, பிரதிஷ்டையில் அவரது பங்கையும் தானே மேற்கொண்டார் சத்குரு. மூவருக்குப் பதிலாக இருவராகச் செயல்படும்போது எந்த நேரமும் உடலைவிட்டு உயிர் விலக நேரிடும் சாத்தியம் இருப்பதாக சத்குரு உணர்ந்தார்.
dl-background
மூலாதார சக்கரத்தைப் பூட்டும்போது நிகழ்ந்த அனர்த்தம்!
ஒவ்வொரு சக்கரமாக சக்தி நிலையைப் பூட்டிய சத்குரு, மிக முக்கியமான மூலாதார சக்கரத்தைப் பூட்டியபோது, யாரும் எதிர்பாராதவிதமாக சட்டென்று வெட்டிய வாழையாகச் சரிந்து கீழே விழுந்தார்.
dl-background
மீண்டும் உயிர்த்தெழுந்த தருணம்!
இந்த மாதிரியான பின்னடைவை சத்குரு எதிர்நோக்கி இருந்ததால், இப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக குறிப்புகள் தந்திருந்தார். ஆகையால் தொண்டர்கள், தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் அவரை ஏற்றி ஈஷா யோக மையத்திலுள்ள தியான அறைக்கு அவரை கொண்டு சென்றார்கள்.
dl-background
பிரதிஷ்டை நிறைவடைந்தை சத்குரு அறிவித்தார்!
சத்குரு அவர்கள், 1999ம் வருடம் ஜூன் மாதம் 24ம் தேதி ஆயிரக்கணக்கான ஆன்மீக அன்பர்களின் முன்னிலையில் தியானலிங்க பிரதிஷ்டையை நிறைவு செய்தார். “பிராணப் பிரதிஷ்டை வெற்றிகரமாக நிகழ்ந்து முடிந்துவிட்டது. நான் நலமாக இருக்கிறேன். எல்லோருக்கும் நன்றி,” என்கிற பொருளில் சத்குருவின் செய்தி வாசிக்கப்பட்டது.
dl-background
குருவாக அமர்ந்திருக்கும் தியானலிங்கம்!
தியானலிங்கம் அபூர்வமானது, தெய்வீகத்தின் மிக உயர்ந்த வெளிப்பாடு. ஒரு மிகச் சிறந்த குருவுக்கும், தியானலிங்கத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. குரு மனித உடலில், மனித வடிவில் ஏழு சக்கரங்களுடன் இயங்குகிறார். தியானலிங்கமும் மிக உச்சமாக தூண்டப்பட்ட ஏழு சக்கரங்களுடன் இயங்குகிறது.
dl-background
தியானலிங்க கருவறையின் சிறப்பு!
உலக உருண்டையை பாதியாக வெட்டிவைத்தது போல அரைவட்ட குவிந்த கூரையின் உயரம் 33 அடி. விட்டம் 76 அடி. கூரையில் சிமென்ட், இரும்பு எதுவும் பயன்படுத்தாதது இதன் சிறப்பம்சம். முழுக்க முழுக்க செம்மண், செங்கல், சுண்ணாம்பு மற்றும் மூலிகைக் கலவைகளால் உருவாக்கப்பட்ட கூரை இது.
dl-background
சர்வ மதங்களையும் வரவேற்கும் சர்வதர்ம ஸ்தம்பம்
தியானலிங்கத்திற்குள் நம்மை வரவேற்பது சர்வதர்ம ஸ்தம்பம். 17 அடி உயரமுள்ள இந்தத் தூணின் 3 பக்கங்களில், தியானலிங்கம் எல்லா மதத்தினருக்கும் பொதுவானது என்பதைக் குறிக்கும் விதமாக பல சமய சின்னங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. நான்காவது பக்கத்தில் மனித உடலிலுள்ள ஏழு சக்கரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
dl-background
தியானலிங்க பிரகாரத்தில் வீற்றிருக்கும் யோகிகள்!
பிரகாரத்தின் இடப்புறத்தில் முதலாவதாக யோகக் கலையின் தந்தையாகப் போற்றப்படும் பதஞ்சலி முனிவரின் 11 அடி உயரச் சிலை. வலதுபுறத்தில், பெண்தன்மையை வெளிப்படுத்தும் வனஸ்ரீ திருவுருவம். தொடர்ந்து, பிரகாரத்தின் இருபுறத்திலும் சிவனடியார்கள் மற்றும் உன்னத யோகியரின் வரலாற்றை விளக்கும் கற்சிலைகள்!
dl-background
வணங்கிய நிலையில் ஓரு யோகி!
தியானலிங்கத்தின் நேரெதிரே தரையில் விழுந்து வணங்கும் ஒரு யோகியின், வசீகரிக்கும் சிற்பம்.
dl-background
வெம்மையைத் தணிக்கும் ஜலசீமா!
தியானலிங்கத்தின் சக்தியால் உண்டாகும் வெம்மையைத் தணித்து குளுமை சேர்ப்பதற்காக ஜலசீமா என்கிற நீர் அகழி அமைக்கப்பட்டுள்ளது. தியானலிங்கத்தைச் சுற்றிலும் அமைதியாக அமர்ந்து தியானம் செய்வதற்காக 28 தவக்குகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
dl-background
நாத ஆராதனை
சந்தியா காலங்களில் தியானலிங்கத்தின் வீரியம் மிக்க சக்தி அதிர்வுகளை தெய்வீக இசைக்கருவிகளின் மெல்லிசையால் சற்று சலனப்படுத்தும் விதமாக அமைகிறது, நாத ஆராதனை. தினமும் காலை 11:40 - 12:10 மற்றும் மாலையில் 5:40 - 6:10 வரை நாத ஆராதனை நிகழ்கிறது.
dl-background
தியானலிங்கம் வழங்கும் 7 விதமான பலன்கள்!
வாரத்தின் 7 நாட்களில், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தனித்துவமான பலன்களை தியானலிங்கம் வழங்குகிறது!
dl-background
தியானலிங்கத்தில் நள்ளிரவு தியானம்!
அமாவாசை நாளில் தியானலிங்கத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் ஆண்களுக்கு நலம்பயக்கும் வகையில் இருப்பதால் அன்றிரவு ஒரு மணி வரை தியானலிங்க வளாகத்தில் ஆண்கள் தியானம் செய்யலாம். அதே போல பௌர்ணமி தினங்களின் அதிர்வுகள் பெண்களுக்கு அதிக நலம் தருமென்பதால், அந்த நாட்களில் இரவு ஒரு மணி வரை பெண்கள் தியானம் செய்யலாம்.
dl-background
நம் கைகளால் தியானலிங்கத்திற்கு அபிஷேகம்
அமாவாசை, பௌர்ணமி தினங்களில் நம் கைகளாலேயே தியானலிங்கத்திற்கு பால் மற்றும் நீரினால் அபிஷேகம் செய்யும் வாய்ப்பு அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
dl-background
பஞ்சபூத ஆராதனை
தியானலிங்கத்தில் ஒவ்வொரு சிவராத்திரியன்றும் பஞ்சபூத ஆராதனை நடைபெறுகிறது. பஞ்சபூதங்களுக்கு அர்ப்பணிப்பாக நிகழும் இதில் கலந்துகொள்வதால் உடல், மன நலம் கிட்டுவதோடு, பயம், சந்தேகம் ஆகியவற்றைக் கடந்து வெற்றியை அடைய துணைநிற்கிறது.
dl-background
தியானலிங்கம் - நீல நிறத்தில்!
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14 அன்று உலக நீரிழிவு தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச நீரிழிவுக் கூட்டமைப்பு மக்களுக்கு நீரிழிவு நோய் பற்றிய விழிப்பு உணர்வை உண்டாக்குவதற்காக, உலகெங்கும் முக்கியக் கட்டிடங்களில் நீல நிற விளக்குகளை ஏற்றும்படி வேண்டுகோள் விடுத்திருந்தது. அதன்படி, அன்றைய தினம் தியானலிங்க வளாகத்தில் பல நீல விளக்குகள் ஏற்றப்பட்டு, அன்று வளாகம் மற்றும் கருவறை இரண்டுமே நீல நிறமாகக் காட்சியளித்தது.
dl-background
கார்த்திகை தீபக் கொண்டாட்டங்கள்!
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத் திருநாளில் 1008 விளக்குள் ஏற்றப்பட்டு, தியானலிங்கத்தில் வெகு சிறப்பாக கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.
dl-background
தியானலிங்கத்தில் அர்ப்பணங்கள்
ஒருவர் அர்ப்பணிப்பு உணர்வோடு ஆலயத்திற்குள் நுழையும்போது, அவரது உள்வாங்கிக் கொள்ளும் திறன் மேம்படுகிறது. அதனால், தியானலிங்கத்திலும் பூ, தூபம், விளக்கு அர்ப்பணிப்புகள் உள்ளன.
dl-background
தியானலிங்கம் 1999ம் வருடம் ஜுன் மாதம் 24ம் தேதி அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு உலகுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அதை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 24ம் தேதி தியானலிங்க வளாகத்தில் சர்வ மத உச்சாடனம் நிகழ்ந்து வருகிறது.
வாருங்கள்

தியானலிங்கத்தின் அருள் மழையில்
நனைந்திடுங்கள்.

இன்று தியானலிங்கம் உலகிற்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள். நம் முன்னே பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கும் தியானலிங்க பிரதிஷ்டை நிகழ்ந்த அந்த தருணங்களை திரும்பிப் பார்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். புகைப்படங்களும் எழுத்துக்களும் சேர்ந்து நம்மை காலத்தால் பின்னோக்கி அழைத்துச் செல்கின்றன. வாருங்கள் சற்றே லயித்திருப்போம், தெய்வீக அருளில்!
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert