தீபாவளி ஸ்பெஷல் – இனிப்பான இரண்டு ரெசிபிகள்

தீபாவளி ஸ்பெஷல் - இனிப்பான இரண்டு ரெசிபிகள், deepavali special - inippana irandu recipegal

ஈஷா ருசி

சுவையான, சத்தான தீபாவளி இனிப்பு வகைகள் இரண்டு உங்களுக்காக!

இனிப்பு நெய் அவல்

தேவையான பொருட்கள்:

சிகப்பு அவல் – 250 கிராம்
சர்க்கரை – 100 கிராம்
நெய் – 6 மேஜைக் கரண்டி
ஏலக்காய் – 4 (பொடித்தது)
தேங்காய் – அரை மூடி (துருவியது)

செய்முறை:

சிகப்பு அவலை சுத்தம் செய்து, நீரில் அலசிப் பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் ஊறியதும் அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து, நான்கு ஸ்பூன் நெய் விடவும். மிதமாக சூடானதும் துருவிய தேங்காயை வாணலியில் இட்டு லேசாக வறுக்க வேண்டும். பின்னர் அவலை சேர்த்து நன்றாக வறுக்கவும் சிறிது சிறிதாக சர்க்கரையை சேர்த்து கிளற வேண்டும். சர்க்கரை கரைந்ததும் ஏலப்பொடி தூவி மீதியுள்ள நெய்யை விட்டு கிளறி இறக்கவும். சுவையான, குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சிற்றுண்டி தயார். இதே முறையில் மற்ற அவல் வகைகளிலும் தயாரிக்கலாம்.

பழ அவல் உருண்டை

தேவையான பொருட்கள்:

லேஸ் அவல் (தண்ணீரில் 2 நிமிடம் ஊற வைத்து எடுத்தது) – 70 கிராம்
பேரீச்சம்பழம் (சிறிய துண்டுகளாக வெட்டியது) – 5
ஆப்பிள் (சிறிய துண்டுகளாக வெட்டியது) – 50 கிராம்
நெய் – 2 தேக்கரண்டி
தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி, உருண்டை வெல்லம் துருவியது – தேவைக்கேற்ப

செய்முறை:

அவல், பேரீட்சை, ஆப்பிள், தேங்காய் துருவல், நெய், ஏலக்காய் பொடி, உருண்டை வெல்லம் இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து உருண்டை பிடித்து உண்ணலாம்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert