கஸ்டர்ட் பழ சாலட்

கஸ்டர்ட் பழ சாலட், Custard pazha salad

ஈஷா ருசி

கஸ்டர்ட் பழ சாலட்

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் – 1
வாழைப்பழம் – 2
மாம்பழம்- 1
மாதுளம் பழம் உரித்தது – 1 கைப்பிடி
வறுத்த முந்திரி – 20
வெள்ளை சர்க்கரை – தேவையான அளவு
பால் – 1 டம்ளர்
ஏலக்காய் பொடி – 1 ஸ்பூன்
கஸ்டர்ட் பவுடர் – 1 ஸ்பூன்

செய்முறை:

ஆப்பிள், மாம்பழம், வாழைப்பழத்தை விருப்பப்பட்ட வடிவத்தில் சிறியதாக வெட்டிக் கொள்ளவும். பாலில் கஸ்டர்ட் பவுடர், சர்க்கரை, ஏலக்காய் பொடி போட்டு கட்டியில்லாமல் கரைத்து கொதிக்க வைக்கவும்.கொதித்தவுடன் இறக்கி, ஆற வைத்து அதன் பிறகு வெட்டப்பட்ட பழங்களை போட்டால் சுவையான சாலட் ரெடி. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press ConvertLeave a Reply