சில்லி சப்பாத்தி – சுவையான சிம்ப்பிள் ரெசிபி

சில்லி சப்பாத்தி - சுவையான சிம்ப்பிள் ரெசிபி, chilli chapati - suvaiyana simple recipe

ஈஷா ருசி

சப்பாத்தி தனியாக கிரேவி தனியாக வைத்து, தொட்டு சாப்பிடுவதுதான் பெரும்பாலானவர்களின் வழக்கம். இங்கே சற்று மாறுபட்ட சுவையில் சப்பாத்தியை சாப்பிட ஒரு ரெசிபி உங்களுக்காக!

சில்லி சப்பாத்தி

தேவையான பொருட்கள்:

சப்பாத்தி – 5
தக்காளி – 2 அல்லது 3
கரம் மசாலா – சிறிதளவு
மிளகாய் பொடி – சிறிதளவு
சீரகத் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் கோதுமை மாவுடன் தேவையான அளவு உப்பு போட்டு தண்ணீர் விட்டு பிசைந்து சப்பாத்தியாக சுட்டு(அல்லது மீதியான சப்பாத்தியை அடுத்தநாள்) அதனைப் பொடிப்பொடியாக வெட்டிக் கொள்ளவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தப் பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளித்து தக்காளியை போட்டு வதக்கிய பின் கர மசாலா, மிளகாய் பொடி, மஞ்சள் தூள், சீரகத்தூள், உப்பு போட்டு நன்றாக வதக்கிய பிறகு வெட்டி வைத்த சப்பாத்தியை போட்டு கிளறி இறக்கவும்.
இதையும் வாசியுங்கள்

Tags

Type in below box in English and press Convert