சென்னையில் பிறந்த தியான மண்டபம்!

சென்னையில் பிறந்த தியான மண்டபம்

சென்னையில் புதிய கட்டிடம் உருவாவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அன்றாடம் நடக்கும் நிகழ்வுதான்! ஆனால், சென்னையில் புதிதாக ஈஷா தியான மண்டபம் ஒன்று உருவாகியிருப்பது ஈஷா அன்பர்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு என்பதை மறுக்க முடியாது. ஆம்! சென்னை வளசரவாக்கத்தில் உருவாகியுள்ள தியானமண்டபம் பற்றி இங்கே சில வரிகள்!

சென்னை வளசரவாக்கத்தில் அமாவாசை நாளான ஜூன் 26ஆம் தேதியன்று ‘சத்குரு சந்நிதி’ புதிய தியான மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 250க்கும் மேற்பட்ட தியான அன்பர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

சக்திவாய்ந்த இந்த இடத்தில் தங்கள் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடலளவிலும் மனதளவிலும் சிறப்பான பலன்களைப் பெற முடியும். மேலும், தங்கள் வீடுகளில் பயிற்சி செய்வதற்கான சரியான சூழல் இல்லாதவர்கள் இந்த மண்டபங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த தியானமண்டபங்கள் ஈஷா தியான அன்பர்கள் அன்றாட யோகப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கும், உயிர் நோக்கம், ஷாம்பவி மற்றும் பிற ஈஷா வகுப்புகள் நிகழ்வதற்கும் ஒரு வாய்ப்பாய் அமைகிறது. மாதா மாதம் இங்கு நடைபெறும் மாத சத்சங்களில் கலந்துகொள்வதன் மூலம், யோகப் பயிற்சிகளில் தங்களுக்குள்ள சந்தேகங்களை தியான அன்பர்கள் தீர்த்துக்கொள்ள முடியும். வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையிலும் மாலையில் 5.00 மணி முதல் 9.00 மணிவரை தியான மண்டபங்கள் திறந்திருக்கும். ஈஷா தயாரிப்புகளும், ஈஷா ருச்சி பொருட்களும் இங்கு கிடைக்கும்.

தியானமண்டபம் குறித்து மேலும் விபரங்களைத் தெரிந்துகொள்ள 83000 42000 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

எதிர்வரும் வகுப்புகளின் கால அட்டவணைகள்: (முன்பதிவு அவசியம்)

7 நாள் ஷாம்பவி மஹாமுத்ரா வகுப்பு: ஜூலை 16 – 22
சூர்யா கிரியா: ஜூலை 28 – 30
அங்கமர்த்தனா: ஆகஸ்ட் 6 – 10

தியான மண்டபத்தின் முகவரி:

ஈஷா யோகா மையம்,
50/36 ராமசாமி சாலை,
ஆற்காடு சாலை அருகில் எஸ்.ஜே. மஹால்,
வளசரவாக்கம்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert1 Comment

Leave a Reply