சென்னையில் நிகழ்ந்த உலக யோகா தினக் கொண்டாட்ட நிகழ்வுகளின் துளிகள் மற்றும் சத்குரு வழங்கிய உரையின் சாரத்தை இங்கே படித்தறியலாம்!

பத்து மணிக்கே சாரை சாரையாக மக்கள் கூட்டம் வரத்துவங்கியது சென்னை ராயப்பேட்டை மைதானத்தை நோக்கி! சென்னையின் முக்கிய பகுதி என்பதால் போக்குவரத்து காவல்துறையினர் சாலையில் வாகனங்களை சீர்படுத்தும் பணியில் இருந்தனர். “சீக்கிரம் கிளம்பி வாடா, சத்குரு வர்றாராம். ஃப்ரீயா யோகா சொல்லிக் கொடுக்குறாங்களாம்!” என்று மைதானத்தின் வாயிலில் இருந்தபடி தனது நண்பர்களை அழைத்துக் கொண்டிருந்தார் ஒரு இளைஞர். நுழைவாயிலின் இருபுறமும் கைகூப்பி வணங்கியபடி நின்றிருந்த ஈஷா தன்னார்வத் தொண்டர்களைப் பார்த்ததும் ‘ஹாய்’ சொல்லியே பழகிய பெரும்பாலான சென்னை மக்கள் பலர் நமஸ்காரம் செய்தது ஆச்சரியமான காட்சியாக இருந்தது.

குழந்தைகள் மற்றும் மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயத்தை உணர்ந்து, இந்த ஆண்டு உலக யோகா தினக் கொண்டாட்டத்தில் குழந்தைகளை மையப்படுத்தி உப-யோகா வகுப்புகளை நிகழ்த்த திட்டமிட்டுள்ளதை அறிவித்தார் சத்குரு.

சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இதமான மெல்லிசையுடன் துவங்கிய நிகழ்ச்சியில், முதல் பகுதியாக வீடியோ திரையிடல் மூலம் உப-யோகா பயிற்சி கற்றுத்தரப்பட்டது. பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் உப-யோகா குறிப்புகள் அடங்கிய DVDயும், தகவல் கையேடும் வழங்கப்பட்டது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

1 மணியளவில் சத்குரு சிறப்பு விருந்தினர்களுடன் மேடையேறினார். MGR மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருமதி. Dr.கீதா லட்சுமி அவர்கள், இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவர் திரு. பிரம்மானந்தம் அவர்கள், பல்கலைக்கழக மானியக் குழு துணைத் தலைவர் பேராசிரியர் தேவராஜ் அவர்கள் ஆகியோரோடு சத்குருவும் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவங்கி வைத்தார். முன்னதாக சம்ஸ்கிருதி மாணவர்கள் யோகாசன நிலைகளை நடனவடிவில் செய்து காண்பித்து மக்களின் அபிமானங்களைப் பெற்றனர்.

பின்னர் நிகழ்ந்த சத்சங்கத்தில் சத்குரு பேசும்போது, சொர்க்கம் என்பதை வெளியில் நாம் தேடினால் அந்த கற்பனை எளிதில் உடைந்துபோகும் என நகைச்சுவை மூலம் விளக்கி, சொர்க்கத்தை நமக்குள்தான் உருவாக்க வேண்டும் என தெளிவுபடுத்தினார். அடுத்த சில வருடங்களில் நாம் ஆன்மீகத்தின் தன்மையை மக்களிடத்தில் கொண்டு சேர்க்காவிட்டால், மக்களில் பெரும்பாலானோர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகிவிடுவார்கள் என்பதை சுட்டிக்காட்டியதோடு, "யோகா" எனும் கருவி இந்நிலை வராமல் தடுக்க உறுதுணை புரியும் என்பதை பதிவுசெய்தார்.

ஐநா சபையின் வரலாற்றில் 172 நாடுகள் ஒருமித்த கருத்தோடு வாக்களித்த நிகழ்வு உலக யோகா தினத்திற்காக மட்டுமே நிகழ்ந்துள்ளதை கூறியபோது, பங்கேற்பாளர்கள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதற்கு காரணமாக இருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது மனமார்ந்த நன்றியை சத்குரு தெரிவித்தார்.

அடுத்த சில வருடங்களில் நாம் ஆன்மீகத்தின் தன்மையை மக்களிடத்தில் கொண்டு சேர்க்காவிட்டால், மக்களில் பெரும்பாலானோர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகிவிடுவார்கள் என்பதை சுட்டிக்காட்டியதோடு, "யோகா" எனும் கருவி இந்நிலை வராமல் தடுக்க உறுதுணை புரியும் என்பதை பதிவுசெய்தார்.

குழந்தைகள் மற்றும் மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயத்தை உணர்ந்து, இந்த ஆண்டு உலக யோகா தினக் கொண்டாட்டத்தில் குழந்தைகளை மையப்படுத்தி உப-யோகா வகுப்புகளை நிகழ்த்த திட்டமிட்டுள்ளதை அறிவித்தார் சத்குரு. விவசாயிகள், பெண்கள் என சமூகத்தில் பலர் தற்கொலை முடிவினை மேற்கொள்வது வருந்தத்தக்கது என்றாலும், குழந்தைகளும் மாணவர்களும் அதிக அளவில் தற்கொலை முடிவை மேற்கொள்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை சத்குருவின் பேச்சு வெளிப்படுத்தியது. அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற அழுத்தத்தை மாணவர்கள் மீது வைப்பது இதற்கு முக்கிய காரணம் என்று கூறி, நமது கல்விமுறையின் குறைபாட்டினை சாடினார் சத்குரு.

உலக யோகா தினத்தை முன்னிட்டு 10,000 பள்ளிகளில் யோகா வகுப்புகள் வழங்குவதற்காக திட்டமிட்டு இருந்ததையும், ஆனால் தற்போது பல்வேறு மாநிலங்களில் தான் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தினாலும் தன்னார்வத் தொண்டர்களின் சீரிய முயற்சிகளாலும் 30,000 பள்ளிகளில் இதனை நிகழ்த்தி உள்ளதாகவும் சத்குரு தெரிவித்தார்.

மருத்துவர்கள் மருந்து மாத்திரைகளை மட்டுமே வழங்கமுடியும், ஆரோக்கியத்தை மக்களுக்கு வழங்கமுடியாது. மருத்துவர்கள் உற்சாகத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பது மிக அவசியமானது என்ற கருத்தை முன்வைத்த சத்குரு, மருத்துவர்கள் உள்நிலையில் சிறந்து விளங்க வேண்டிய அவசியத்தையும் விளக்கினார். தற்போது, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலும் உப-யோகா வகுப்புகளுக்கு அனுமதி தந்துள்ளது நமக்கு நல்ல வாய்ப்பு என்று தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் கற்றுக்கொண்ட யோகாவை மற்றவர்களுக்கும் கற்றுத்தந்து யோகாவை பெரும்பான்மையான மக்களிடத்தில் கொண்டுசேர்க்க அனைவரும் துணை நிற்க வேண்டுமெனக் கூறி விடைபெற்றார் சத்குரு.

உப-யோகா பயிற்சிகளை இலவசமாக ஆன்லைனில் கற்றுக்கொள்ள: AnandaAlai.com/YogaDay