கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் நடந்த ஈஷா நிகழ்வுகளின் தொகுப்பு...

சென்னையில் ஈஷா சம்ஸ்கிருதி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மீண்டும் நம் தமிழ்நாட்டில் எட்டுத்திக்கும் ஒலிக்கிறது தேவாமிர்தமான தேவாரம்!!! தேவாரத்தை முறைப்படி, அதன் 'பண்'ணோடு கற்று நம் சம்ஸ்கிருதி குழந்தைகள் பாடுவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. பழங்காலத்தில் கோவில்களில் தெய்வத்திற்கு அர்ப்பணமாக நிகழும் கலைநிகழ்ச்சிகள் போல் சென்னையில் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், வடபழநி முருகன் கோவில், மயிலை கபாலீஸ்வரர் கோவில்களில் சம்ஸ்கிருதி குழந்தைகளின் நிகழ்ச்சி அர்ப்பணிப்பாய் நிகழ்ந்துள்ளது. இக்குழந்தைகள் பாடிய தேவாரமும், ஆடிய பரதமும் பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்துவிட்டது. இதில் கர்நாடக சங்கீதம் மற்றும் பரதத்திற்கு மடியாய்த் திகழும் மயிலையில், இவர்கள் வழங்கிய நிகழ்ச்சியைக் காணவந்த 500 க்கும் மேற்பட்டோரை இக்குழந்தைகள், தங்களின் பக்தியாலும், அர்ப்பணிப்பாலும் திகைப்பில் ஆழ்த்தினர்.

அண்ணாநகரில் பெரிய தியான மண்டபம் திறக்கப்பட்டது

அண்ணாநகரில் பெரிய தியான மண்டபம் திறக்கப்பட்டது

அண்ணாநகரில் பெரிய தியான மண்டபம் திறக்கப்பட்டது

Isha center at Anna nagar

அண்ணாநகரில் சிவா-விஷ்ணு கோவில் எதிரே நம் தியான மண்டபம் கடந்த மூன்று வருடங்களாக செயல்பட்டு வருகிறது. அவ்விடத்திலேயே அதை மேலும் பெரிதாக விஸ்தரித்து, புதிய ஹால் திறக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் 400 க்கும் மேற்பட்ட தியான அன்பர்கள் பங்கேற்றனர்.

ஈஷாவின் மீது சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகள்

ஈஷாவின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பிரபலமாக்கப்பட்ட அளவிற்கு, ஈஷாவின் மீது குற்றமில்லை என்று வெளிவந்த சென்னை உச்சநீதிமன்றத் தீர்ப்போ, ஈஷாவின் சுயவிளக்கங்களோ அதேஅளவிற்கு பிரபலமாக்கப் படவில்லை. 'அதனால் என்ன? அவர்களிடம் பணம் இருந்தால், எங்களிடம் மனம் இருக்கிறது. ஈஷாவின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய் என்று மக்களுக்குப் புரியும் வண்ணம் நாங்கள் எடுத்துரைக்கிறோம்' என்று சொல்லி, சென்னையில் பல இடங்களில் அவிநயக்கூத்து, தெரு நாடகங்கள் நடத்தி, நம் தன்னார்வத் தொண்டர்கள் இக்குற்றச்சாட்டுகள் பொய் என்பதை விளக்கினார்கள். இது மக்களின் மனதில் இருந்த சந்தேகங்களை அகற்றுவதற்கும், நம் தன்னார்வத் தொண்டர்களிடையே புத்துணர்வு பரவுவதற்கும் பெரியளவில் உதவியிருக்கிறது. தன்னார்வத்தால் செயல்படும் உற்சாகம் நிறைந்த மனிதர்களுக்கு ஈடிணையும் உண்டோ?