சீனர்கள் ஆக்கிரமித்த காஷ்மீர், சீனர்கள் ஆக்கிரமித்த ஜப்பான், சீனர்கள் ஆக்கிரமித்த நேபாளம் என பலக் கதைகள் தினசரி செய்திகளில் நாம் கண்டதுண்டு. ஆனால் சீனர்கள் சரணடைந்த கதை இங்கே!


 


சீனாவை சேர்ந்த திரு. வை சௌ தனது ஆன்மீக தேடுதலை கணிப்பொறியின் முன் துவக்கினார்.

‘கடவுளின் முகவரி வேண்டுமானலும் கூட கூகுளில் (google) தேடு’ என்று சொல்லும் இந்த காலத்தில் ‘ஆன்மீகம்’ (spirituality) என்ற வார்த்தை இவருக்கு வெள்ளியங்கிரி முகவரியை தந்தது மிகவும் சுவாரசியமானதொரு நிகழ்வே!

சத்குரு TED கருத்தரங்கில் பேசிய வீடியோவை இணையதளத்தில் கண்ட இவருள் விழுந்தது அந்தத் துளி!

மொழிபெயர்பாளரின் உதவியுடன் குறிப்புகளைப் புரிந்து கொண்ட இவர்கள் சத்குருவின் இருப்பில் உயிர் நனைந்தவர்களாய் வெள்ளியங்கிரியை தேடி வந்தடைந்தனர்.

ஆங்கிலம் தெரியாத இவர் சத்குருவின் பேச்சால் ஈர்க்கப்பட்டதன் காரணம் புரியாத நிலையில் இவரிடம் அகப்பட்டது சீன மொழியில் மொழிப் பெயர்க்கப் பட்ட “மிட் நைட் வித் த மிஸ்டிக்” (Mid night with the mystic) என்ற புத்தகம்.

‘சத்குரு என்பவர் யார்?’ என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் மீண்டும் மீண்டும் இந்த புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டினார். இவரது தாகத்தை தீர்க்காத இந்த புத்தகம் தேடுதலின் தீவிரத்தையே அதிகரித்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எப்படியும் சத்குருவை பார்த்துவிட வேண்டும் என்ற உறுதியுடன் மீண்டும் இறங்கினார் களத்தில்! இணையதளத்தில்!

ஆங்கிலம் தெரியாத இவர் பல சிரமங்களைத் தாண்டி சிங்கப்பூரில் சத்குரு நடத்தும் ஈஷா யோகா வகுப்பிற்கு (Inner Engineering) தன்னைப் பதிவு செய்தார்.

திரு. வை சௌ கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் சத்குரு நிகழ்த்திய ஈஷா யோகா வகுப்பில் தனது நண்பர்கள் 10 பேருடன் கலந்து கொண்டார்.
20130123_BEL_0158-e1361769998669-300x174இந்த வகுப்பில் சத்குரு பேசிய ஒரு வார்த்தை கூட புரியாத இந்த குழுவினர் மிகுந்த ஈடுபாட்டுடனும் அன்புடனும் இதில் கலந்து கொண்டனர். மொழிபெயர்பாளரின் உதவியுடன் குறிப்புகளைப் புரிந்து கொண்ட இவர்கள் சத்குருவின் இருப்பில் உயிர் நனைந்தவர்களாய் வெள்ளியங்கிரியை தேடி வந்தடைந்தனர்.

இவர்களது ஆர்வமும் திறந்த மனநிலையும் தேடுதலில் இருக்கும் தீவிரமும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

ஈஷா யோகா மையத்தினை முதல் முறையாக கண்ட இவர்கள் “இந்த இடம் மிகவும் அழகாக இருக்கிறது. மிகவும் சக்தி வாய்ந்த இடமாக இருக்கிறது. நாங்கள் இங்கேயே தங்கி விட வேண்டும் என்று தோன்றுகிறது,” என்று கூறினார்கள்.

தனது ஈஷா யோகா அனுபவத்தை பிறரிடம் பகிர்ந்து கொள்ள விரும்பிய திரு. வை சௌ, சீனா சென்றதும் அதற்கென ஒரு இணைய பக்கத்தை துவக்கினார். அவர் உடலளவிலும் மனதளவிலும் பெற்ற அனுபவங்களை அந்த இணைய பக்கத்தில் சீன மொழியில் பதிவு செய்தார்.

அவரது இணைய பக்கங்களில் நுழைந்த பலரும் அதன் பின்னர் ஈஷா யோகா வகுப்பு செய்து ஈஷா யோகா மையம் வந்த வண்ணம் இருக்கின்றனர்.

தற்போது ஜனவரியில் நடைபெற்ற டெல்லி மெகா வகுப்பில் சீனாவிலிருந்து மேலும் ஒரு பெரிய குழு கலந்து கொண்டது.
Isha’sChineseConnection10

திரு. வை சௌ மற்றும் மொழிப்பெயர்ப்பாளர் அலைஸ் அவர்களின் உதவியுடன் ஈஷா யோகா தனது சீன மொழி இணையதளத்தினை துவங்கியுள்ளதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த வருடம் திரு. வை சௌ மற்றும் சீனாவிலிருந்து வந்த 8 தியான அன்பர்கள் ஈஷாவுடன் கைலாய யாத்திரை மேற்கொண்டனர். இதை பற்றி திரு. வை சௌ கூறும் போதும் “காலையில் நீ ஞானத்தை உணர்ந்தால் மாலையில் வருத்தமின்றி மரணத்தை வரவேற்கலாம்,“ என்ற சீன பழ மொழியின் படி கைலாயத்தை தரிசனம் செய்த பிறகு நான் ஆனந்தமாக மரணத்தை வரவேற்க தயாராகி விட்டேன்,” என்று கூறி நம்மை சிலிரிக்க வைக்கிறார்.

திரு. வை சௌ மற்றும் மொழிப்பெயர்ப்பாளர் அலைஸ் அவர்களின் உதவியுடன் ஈஷா யோகா தனது சீன மொழி இணையதளத்தினை துவங்கியுள்ளதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த இணையதளத்தில் ஈஷா கிரியா தியானம் சீன மொழியில் மொழிப் பெயர்க்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீன மொழியில் மொழிப் பெயர்க்கப்பட்டு வரும் சத்குருவின் புத்தகங்கள் விரைவில் சீன தியான அன்பர்களுக்கு அருள் பரிசாய் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்திய நாட்டின் ஆன்மீக அதிர்வுகளால் பன்னெடுங்காலமாக பல வெளிநாட்டு யாத்திரிகர்கள் ஈர்க்கப்பட்டதை நமக்கு வரலாறு கூறுகிறது.

யுவாங் சுவாங் இந்தியா வந்தார், இந்தியாவின் அறிவுப் பொக்கிஷங்களை எழுத்தாய் கொண்டு சென்றார் என்பதை கேள்விப் பட்டிருக்கிறோம்.

சத்குருவின் அருளால் இன்றும் இந்தியா ஆன்மீகப் பொக்கிஷங்களை வழங்கும் நாடாகவே இருக்கும் என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்.