ஈஷா ருசி

காலையில் எழுந்ததும் ஒரு ருசியான ரெசிபியை வீட்டில் உள்ளோருக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு செய்து கொடுக்க ஆசையா? அப்படியானால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள சாக்கோ சப்பாத்தியை ட்ரை செய்து பாருங்கள்...

தேவையானவை:

பால் பவுடர் - ¼ கப்
சாக்கோ பவுடர் - ஒரு டீஸ்பூன்
வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கோதுமை மாவு - ஒரு கப்
பால் - ஒரு டேபிள் ஸ்பூன்
நெய் - தேவையான அளவு
முந்திரி, பாதாம், பிஸ்தா துண்டுகள் - சிறிதளவு.

செய்முறை:

  • கோதுமை மாவுடன் சாக்கோ பவுடர், பால் பவுடர், வெண்ணெய், பால் சேர்த்து கெட்டியாகக் கலந்துகொள்ளவும்.
  • இதனுடன் முந்திரி, பாதாம், பிஸ்தா துண்டுகளை சேர்த்து, தண்ணீர் தெளித்து பிசையவும்.
  • இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு சுட்டெடுக்கவும்.
  • சாக்லேட் சுவைக்கு கட்டுண்டு கிடக்கும் பலருக்கும் நாவூரும் உணவிது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.