ஈஷா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்னர் சயின்சஸ்(III), ஜிழி இல் அமைதி ததும்பும் சூழலில் தங்கியிருந்த சில நாட்களுக்குப் பிறகு , டியூக் பல்கலைக்கழகம், வெடரன்ஸ் மேலாண்மை, சிகாகோ அறிவியல் மற்றும் தொழில் அருங்காட்சியகம், டொராண்டோ மற்றும் தமிழ் வர்த்தக சங்கம், சான் ஜோஸில் உள்ள ஜிவீணி கூட்டங்களில் உரையாடல்களில் தொடங்கி சான் ஜூவான் பாடிஸ்டாவில் கட்டப்பட்டு வரும் மேற்குக் கடற்கரை மையத்தில் மரம் நடுவது என நிற்காமல் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

டியூக் மருத்துவப் பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்த மருத்துவம் பற்றி மிகவும் தீவிரமாக இருப்பதும், உயர்மட்ட கல்விக்குழு மனித உடல்நலத்தை அணுகும் விதத்தில் ஒரு அடிப்படை மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு ஆவலாக உள்ளதும் பார்க்க சுவாரசியமாகவும் ஊக்கமளிப்பதாகவும் உள்ளது.

குழந்தைகள் நேரடியாக அணுகி செய்து பார்க்கவும் அனைத்திற்கும் மேலாக படைப்பின் தன்மை மற்றும் வெளிப்பாடுகளைப் பார்த்து வியப்பதற்காகவும் ஒரு அறிவியல் அருங்காட்சியகத்தை கட்டும் கனவு எனக்கு இருந்து வருகிறது. இந்தியாவில், அறிவியல் குறித்த அணுகுமுறையில் நிலவும் ஒரு குறிப்பிட்ட பற்றாக்குறை அனைவருக்கும் கவலை தருவதாக இருக்கவேண்டும்.

அறிவியல் பற்றிய பெரும்பாலான மக்களின் எண்ணம் புதிய ஐ-ஃபோன் என்பதாகவே உள்ளது. அடிப்படை அறிவியலில் முதலீடு செய்வது மிக அவசர தேவையாக உள்ளது. சிகாகோ அறிவியல் அருங்காட்சியகத்தின் பணியாளர்கள் ஒரு அற்புதமான குழுவாக இருந்தனர். அவர்கள் நமது தேவைகளைப் புரிந்துகொண்டு பாராட்டுகிறார்கள். அடுத்த இரண்டு மாதங்களில் ஆரம்ப அறிக்கை நம்மிடம் கிடைக்கும் போது, இந்த மிக அவசியமான முயற்சியை நோக்கி அதற்கான நிதிகளை திரட்டவதும் திட்டமிடுவதுமான சில தீவிரமான, வேலையைத் தொடங்க வேண்டும். தேவைப்படும் பொருள் உள்ளவர்கள் முன் வந்து உதவுவார்களென்று நம்புகிறேன்.

மேலும், சாம் பிட்ரோடாவுடன் சில நாட்கள் செலவழித்ததும், தேசத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையும் ஆர்வமும் மனதிற்கு மிகவும் இதமாக இருக்கிறது. இந்தியாவில் அவரைப் போன்ற செயல்திறனும், தொலைநோக்கும் பேரார்வமும் கொண்ட மக்கள் தேவை. நாட்டில் இறுதி வரை பின்தொடரப்படாமலும் முடிவடையாமலும் இருக்கும் மாபெரும் சிந்தனைகளை நிறைய உள்ளன.

ஒரு வளரும் நாடு எனும் அடையாளம் அட்டை, நீளமான அல்பட்ரோஸ் பழமொழிபோல் இந்திய தாயின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருக்கிறது..

வட அமெரிக்காவில் முதல் முறையாக, டொராண்டோவில் ஒரு பெரிய குழுவில் நான் தமிழில் உரையாற்றினேன்.

வட அமெரிக்காவில் ஒரு தமிழ் நிகழ்ச்சி நடப்பது ஒரு வகையில் நல்ல அனுபவமாக உணர்கிறேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

டொரண்டோ தமிழர்கள் ஒரு அற்புதமான குழு! மேலும் தற்போது, கனடாவில் ஒரு ஆதியோகி இடத்தை உருவாக்கி யோகாவின் பல பரிமாணங்களை கிடைக்கச்செய்ய உறுதியாக உள்ளனர்.

கனடா, ''கன்னடா'வின்' ஒரு மாற்றுசொல். ஹூரான் தேசத்தின் இந்தியர்களும் அலாஸ்கா அமெரிக்கர்களும் உடனே அவர்கள் பெங்களூருவை சேர்ந்தவர்களென்று நினைக்க வேண்டாம்!

டொராண்டோவில், இலங்கை தமிழர்கள் ஒரு வலுவான இருப்பை கொண்டுள்ளனர். அவர்கள் சமீப காலங்களில் அனுபவித்த கொடுமைகள் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் அவமானகரமானது . மேலும் இது போன்ற ஒரு தலைமுறையில் வாழ்ந்துகொண்டிருப்பதால். நாம் அவமானத்தால் தலைகுனிய வேண்டும். நம் காலங்களில் இப்படி நடக்கிறது, நமது பின் வரும் காலங்களில்கூட இந்த அளவிற்கு அட்டூழியங்கள் நடக்கலாம், ஆனால் நாம் செய்வதற்கு எதுவும் இல்லை என்பதுதான் நம்பமுடியாததாகவும் கவலையாகயளிப்பதாகவும் இருக்கிறது. ஆனால் தற்போது இலங்கை மக்கள் எதிர்காலத்தை இருளாக்க கடந்த காலத்தின் நிழல் அனுமதிக்காதிருப்பது முக்கியமானது.

கடந்த காலத்தின் மிருகத்தனமான நடவடிக்கைகள். அவர்களை கசப்பானவர்களாக விட்டு விடக்கூடாது. நம் தந்தையர்களுக்கு ஏற்பட்ட அந்த அநீதி. நம் குழந்தைகளின் எதிர்காலத்தை காயப்படுத்தி விடக்கூடாது. இவர்கள் காயமுற்றவர்களாகிவிடக் கூடாது மாறாக புத்திசாலியாக ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கு போராட வேண்டும்.அதே நேரத்தில், மறக்க முடியாத கடந்தகாலத்தில் நிகழ்ந்த இத்தகைய விஷயங்கள், இந்த உலகத்தில் நாளை யாருக்கும் நடக்க கூடாது என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

டோரன்டோவிலிருந்து, கலிபோர்னியா விரிகுடா பகுதிக்கு வட அமெரிக்காவைக் குறுக்கே கடந்து சென்றேன். பெங்களூருவைச் சேர்ந்த மிகவும் வெற்றிகரமான தொழிலதிபரான ஒரு கன்னடருன் மாலையில் கலந்துரையாடல் நடைபெற்றது. .சிலிக்கான் பள்ளத்தாக்கு, கடந்த மூன்று தசாப்தங்களாக மகத்தான வெற்றிக் கதைகள் பலவற்றை உருவாக்கியுள்ளது. பல இந்திய வம்சாவளி மக்கள் தங்கள் கல்வியை இங்கு பயின்று உலகளவில் தொழில் ஹீரோக்களாக வலம்வருகின்றனர். அறிவு ஜீவிகளை அதிகமாக உருவாக்க நாம் செய்ய வேண்டியதெல்லாம், எந்தவிதத்திலும் தடைசெய்யாத ஒரு சூழ்நிலையை உருவாக்குவதுதான்.

கடந்த ஞாயிறு மே 10ம் தேதியன்று, சான் ஜுவான் பாடிஸ்டாவில் ஒரு வெஸ்ட் கோஸ்ட் மையம் உருவாக்குவதில் முதற்கட்டமாக சுமார் 300 தன்னார்வத் தொண்டர்களுடன் 1008 ஆலிவ் மரங்கள் நட்டது நல்ல அனுபவமாக இருந்தது. இருபது வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் ஈஷா யோகா மையத்தின், ஆசீர்வதிக்கப்பட்ட ஆரம்ப நாட்களை நினைவு படுத்திய மிகவும் அழகான நிகழ்வாக இருந்தது. வெள்ளியங்கிரி அடிவாரத்தில், அந்த ஆரம்ப காலத்தில், கனவு மிகுந்த கண்களுடனும் உற்சாகத்துடனும் அற்புதமான சொல்லப்படாத சாத்தியங்களைச் சுமந்தவர்களாகவும் இருந்த மக்கள் அனைவரும் அரிதானவர்கள். ஈஷா யோகா மையம் என்பது நிச்சயமாக, அன்பான உழைப்பின் ஒரு மகத்தான அறுவடையே. ஈஷா யோகா மையம் உருவாக்கத்தில் செயலாற்றிய அனைவருக்கும் பெருமைப்படுத்துவதாக , இந்த மையத்தின் சூழல், கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் , உலகிலேயே தனித்துவமிக்கதாக அமைந்துள்ளதென பெருமையுடன் கூற முடியும். ஒரு அமெரிக்க அதிகாரி கூறினார் - உண்மையாக இருப்பது மிகவும் நல்லது. சான் ஜுவான் பாடிஸ்டா மலை மீது, நாங்கள் இதுபோன்ற அற்புதத்தை மீண்டும் நகழச்செய்தோம். பெரும் உற்சாகத்துடன் மக்கள் ஒரு அற்புதமான குழுவாக கூடியிருந்தனர். ஒரு கணத்தில், புதிதான மற்றும் பழமையான நினைவுகளுடன் ஒரே சம்யத்தில் இருப்பது மிக உயர்ந்த அனுபவமாக உள்ளது.

செவ்வாய்க்கிழமை மாலை, நாங்கள் பால் ஹாக்கென்னுடன் சான் பிரான்சிஸ்கோ காமன்வெல்த் கிளப்பில் கலந்துரையாடினோம்.

பால், பல ஆண்டுகளாக ஒரு சுற்றுச்சூழல் போராளியாக இருக்கிறார். மேலும் அவர், சுற்றுச்சூழல் மாசுபடாமல் நுட்பமாகவும் விவேகமாகவும் செயலாற்ற முடியும் எனும் சிந்தனையை பரப்புவதற்கு, அவரை அற்பணித்துக் கொண்டுள்ளார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, பால் நான் பெரிய மனிதராக மதிக்கும் ஒரு அன்பிற்குரிய நண்பர். மனித வரலாற்றில், முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த வாரம் வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயு, நாம் தாங்கிக்கொள்ள முடியாத அளவினைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது என்பது துரதிருஷ்டவசமான உண்மை. இதனால் இந்த உரையாடல் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. நாம் நமது இருப்பின் ஆதாரமாக விளங்கும் பூமியை கொண்டு என்ன செய்கிறோம் என்பதற்கு ஒரு கொடிய நினைவூட்டலாக இது இருக்கிறது,.

நாம் விழிப்புணர்வுடன் நிலைமையை சரிசெய்வது மட்டுமே ஒரே வழி, இல்லாவிடில் இயற்கை ஒரு மிக கொடுமையான முறையில். அதைச் செய்யும்.

நாம் அடுத்த 20-25 ஆண்டுகளில் செய்யக்கூடிய எளிய விஷயம் நான்கு பில்லியன் அளவாக இருக்கும் மக்கள் தொகையை கீழே கொண்டு வருவது..

இப்போது, மனித ஆசைகளைக் குறைக்கும் முயற்சிகள் பெருமளவில் நடக்கிறது, ஆனால் நாம் இதில் வெற்றிபெறப் போவதில்லை.

இதில் அனைவரையும் ஒன்று திரட்டி தீவிர முயற்சி செய்தால், நம்மால் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த முடியும்.

20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், நாம் 7 பில்லியனாக இருந்தோம். தற்போது நம் 10 பில்லியன் எனும் எண்ணிக்கை ஐம்பது ஆண்டுகளில் 1.6 பில்லியனாக இருக்கலாம் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

நாம் நன்றாக இருக்கிறோம் ஆனால் நாம் மிக அதிகமாக இருக்கிறோம். நம்முடைய ஆனந்தமே எல்லா கட்டாயங்களுக்கும் விடையாக அமையும்.

Love & Grace