கௌதம புத்தர் ஏற்படுத்திய ஆன்மீக அலை இன்னும் ஓயாமல் அடித்துக்கொண்டேதான் இருக்கிறது. மக்களின் ஆன்மீக நலனுக்காகத் தன்னையே அர்ப்பணித்த இந்த மாமனிதருக்கு நாம் எந்த விதத்தில் நன்றி செலுத்தினாலும் அது ஈடாகாது. ஈஷாவில் நடந்த புத்த பௌர்ணமி கொண்டாட்டத்தில் ஒலிக்கப்பட்ட இந்தச் சிறப்பு பாடலை இங்கு உங்களுக்காக பதிந்துள்ளோம்...


 

 

 

ஆன்மீகப் பாதையில் நடையிடும் ஒவ்வொரு சாதகருக்கும் புத்த பௌர்ணமி மிகமுக்கியமான நாள். 2500 வருடங்களுக்கு முன், உலகில் பேரெழுச்சியை ஏற்படுத்திய புத்தரின் வழிமுறைகள், இன்றும் பலவிதங்களில் வெளிப்பாடு காண்கிறது. மனித எல்லைகளைத் தகர்த்தெறிந்த அவர், "நீங்கள் என் பாதையில் நடந்தால், மறுபடியும் திரும்பிப் பார்க்கத் தேவையில்லை," என்றார். அப்படி ஞானத்தை நோக்கி அவர் காட்டிய பாதையில் இன்றும் பல சாதகர்கள் நடைபயின்று கொண்டிருக்கிறார்கள்.

மனித எல்லைகளைத் தகர்த்தெறிந்த அவர், "நீங்கள் என் பாதையில் நடந்தால், மறுபடியும் திரும்பிப் பார்க்கத் தேவையில்லை," என்றார்.

புத்தர் ஞானமடைந்த நாளைத்தான் புத்த பௌர்ணமியாக உலகின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு வருடமும் ஈஷா யோகா மையத்தில் இந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த வருடம், சவுன்ட்ஸ் ஆப் ஈஷாவின் வெளிப்பாட்டில், புத்தருக்காக ஒரு பாடல் மலர்ந்திருக்கிறது. இந்தப் பாடல், புத்தரின் வாழ்க்கை, அவர் எதிர்கொண்ட சூழ்நிலைகள், மேற்கொண்ட ஆத்ம சாதனைகள், போன்றவற்றை வெளிப்படுத்துகிறது.

புத்தனின் வாழ்க்கையை மிக எளிமையாக வெளிப்படுத்தும் பாடல் வரிகள் பொருளுடன், உங்களுக்காக...

ப்ரபுத்த ஹை, சுத்த ஹை..
உஸ்கி கதா ஜோ புத்த ஹை...

(ஞானமடைந்த... தூயவன்...
புத்தனின் வாழ்க்கைக் கதை)

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஹர் தரக் கதா விலாஸ், பர் நஹி புஜ்த்தி ப்யாஸ்,
ராஜ்-போக் ப்ரமாத் தே பர் மனஹ்-ஷாந்தி கதா ராஸ்.

(இன்பப் பெருக்கில் இருந்தபோதும் தாகம் ஏனோ தீரவில்லை
அரச போகம் நிறைந்த போதும், மனம் ஏனோ நிறையவில்லை)

இசி போகி ஜிந்தகி மே ஏக் தின் கௌதம் சலே
தீன் த்ரிஷ்டி திகே, உன் ஹே துப் இசி அம்பர் கே தலே.

(நாள் ஒன்றில் கௌதமன் வெளி நடக்க,
எதிர்கொண்டான் கண்முன்னே மூன்று காட்சிகளை...)

ஏக் ரோகி, ஏக் விரித், எக் சவ் கோ தேக் கே,
ராஜ் கௌதம் பிக்ஷூ பன், சமான் ஹோ பஸ் சல் படே.

(ரோகி ஒருவன், கிழவன் ஒருவன், சவம் ஒன்றைக் கண்டதும்
வேந்தன் கௌதமன் ஆனானே யாசகன்,
ஏந்தினான் பிச்சைப்பாத்திரம், நடந்தானே சமானாவாக...)

கோஜ்தே பிர்தே சலே உஸ் க்யான் கோ ஜோ குப்த் ஹை
ப்ரபுத்த ஹை, சுத்த ஹை..
உஸ்கி கதா ஜோ புத்த ஹை...

(தேடினானே புதைந்து கிடக்கும் ஞானத்தை எங்கும்...
ஞானமடைந்த... தூயவன்...
புத்தனின் வாழ்க்கைக் கதை)

ஏக் ஷாகா பர் லடகி ஜிந்தகி கோ தாம் கே,
கீ நிரஞ்ஜனா பர் அவுர் ஃபிர் பைத்தே மன் மேன்த்தன் கே,

(தன் உயிரையும், ஒரு கிளையையும் பற்றிக்கொண்டே
கடந்தானே நிரஞ்சன நதியை,
அமர்ந்தானே நெஞ்சில் உறுதியுடன்)

யா தோ ஷ்ரிஷ்டி சி பரே கி ஜ்யோதி முஜ்கோ திகேகி
யா இசி போதி தலே மேரி யே சேதனா மிதேகி.

(அடைந்தால் ஞானோதயம்...
இல்லையேல், போதிமரம் பார்க்கும் என் பிணம்...)

உஸி பல், இஸ் க்ஷித்ஜி மே ஏக் பூர்ன் சந்த்ர உத்தித் ஹுஆ...
உஸி பல், இஸ் ஜீவ் மே ஏக் பூர்ண் சூர்ய வித்தித் ஹுஆ...

(அந்தக் கணம் அடிவானில் நிலவு வெளிவர
அக்கணமே அவருக்கும் பிறந்தது ஞானம்)

இஸி போதி கே தலே ஏக் ராஜ் கௌதம் ம்ரித் ஹுஆ.
ஔர் இஸி போதி தலே ப்ரபுத் புத்த- அவதரித் ஹுஆ.

(போதி மரத்தின் கீழ் மடிந்தான் வேந்தன் கௌதமன்...
பிறந்தான் ஞானி புத்தன்)

உபநிஷத் கே சார் சே இன்கி கதா சந்த்ரிப்த் ஹை...
ப்ரபுத்த ஹை, சுத்த ஹை..
உஸ்கி கதா ஜோ புத்த ஹை...

(உபநிஷதங்களின் சாரமாக பொங்கி வழிகிறதே அவர் போதனைகள்...
ஞானமடைந்த... தூயவன்...
புத்தனின் வாழ்க்கைக் கதை)

இந்த பாடலை இங்கு டவுன்லோடு செய்யுங்கள்

டவுன்லோடு

Photo Courtesy: Buddha Statue Asia Stone Sculpture by viechfisch


 

Sounds of Isha வின் பிற பாடல்களை டவுன்லோடு செய்ய: http://soundsofisha.org/