பூதங்களைத் தூய்மை செய்யும் “பூதசுத்தி” பயிற்சி

பூதங்களைத் தூய்மை செய்யும் “பூதசுத்தி” பயிற்சி

‘பூதசுத்தி’ என்பது உடலை உருவாக்கிய பஞ்சபூதங்களையும் தூய்மை செய்யும் ஓர் அற்புத வழிமுறை. நம் உடலில் பஞ்சபூதங்கள் என்னென்ன செய்கின்றன, அவற்றை தூய்மைப் படுத்துவதன் அவசியம் என்ன என்பதை சத்குரு மூலம் அறிய தொடர்ந்து படியுங்கள்!

பாரம்பரிய ஹடயோகாவின் கடந்த வாரப் பகுதியில், யோகாசனங்களைப் பற்றி பார்த்தோம், இறுதி வாரமான இந்தப் பகுதியில், பஞ்ச பூதங்களை சுத்தப்படுத்தும் “பூதசுத்தி” பயிற்சியைப் பற்றி பார்க்கலாம்.

பூதசுத்தி என்றால்…

“உடல்” என்பது, பஞ்சபூதங்களாகிய நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் பிரதிபலிப்பு. இந்தப் பஞ்சபூதங்களை உங்களுக்குள் முறையாக ஒழுங்குபடுத்தி வைத்துக்கொள்வது எப்படி என்று தெரிந்தால், இதைவிட உயர்வானது வேறு எதுவுமில்லை.

நான் தண்ணீரை, ஒரு விதமாக பார்த்துவிட்டு உங்களிடம் கொடுத்தால், அந்தத் தண்ணீர் உங்களுக்கு நன்மை உருவாக்கும். நான் அதனை வேறுவிதமாக பார்த்துக் கொடுத்தால், நீங்கள் நோய்வாய்ப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.
அதைச் செய்துவிட்டால், உங்கள் ஆரோக்கியம், புரிதல், அறிவு, ஞானம் எல்லாமே சரியாக அமைந்துவிடும். யோக வழிமுறையில், எல்லாவற்றிற்கும் அடிப்படையான பயிற்சி, “பூதசுத்தி” என்று அழைக்கப்படுகிறது. “பூத” என்றால் பஞ்சபூதங்கள். “சுத்தி” என்றால் சுத்தப்படுத்துதல். பூதசுத்தி என்றால் பஞ்சபூதங்களைச் சுத்தப்படுத்துதல் என்று பொருள்.

தண்ணீருக்கு நினைவாற்றல் உண்டு

நான் தண்ணீரை, ஒரு விதமாக பார்த்துவிட்டு உங்களிடம் கொடுத்தால், அந்தத் தண்ணீர் உங்களுக்கு நன்மை உருவாக்கும். நான் அதனை வேறுவிதமாக பார்த்துக் கொடுத்தால், நீங்கள் நோய்வாய்ப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. யோக பாரம்பரியத்தில் நாம் செய்யும் அத்தனை விஷயங்களுக்கும் பூதசுத்தியே அடிப்படையாக விளங்குகிறது. பஞ்சபூதங்களை சுத்தப்படுத்துவதன் மூலம் “பூதசித்தி” என்ற நிலையை அடைய முடியும். பூதசித்தி என்றால் பஞ்சபூதங்களின் மீது ஆளுமை ஏற்படுத்திக் கொள்ளுதல். அப்படி ஆளுமை வந்துவிட்டால், இந்த உடல், மனம் மீது மட்டுமில்லை, இந்தப் படைப்பின் மீதே உங்களுக்கு ஆளுமை ஏற்பட்டுவிடும்.

உறுதியில்லாத உடலுடையவர்கள், அதாவது, சீக்கிரம் நோய்வாய்ப்படக் கூடியவர்கள், கட்டிலை விடுத்து தரையில் தூங்குங்கள். இதனால், உங்கள் உடல் மறுசீரமைப்பு செயலில் பெரிய மாற்றம் ஏற்படும்.

அறிவியல் ஆராய்ச்சி

பஞ்சபூதங்கள் நம்மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்பதைப் பற்றி கடந்த சில வருடங்களாக பல ஆராய்ச்சிகள் நடந்து வந்துள்ளன. தண்ணீருக்கு நினைவாற்றல் உள்ளது, அதன் இரசாயன அமைப்பை மாற்றாமல், அதன் மூலக்கூறு அமைப்பை மட்டும் மாற்றுவதன் மூலம், தண்ணீரால் பல விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ளமுடியும். அதைத் தொடுவதன் மூலமாகவோ, ஒரு பார்வை, ஒரு உணர்ச்சியின் மூலமாகவோ அதன் மூலக்கூறு அமைப்பை மாற்ற முடியும்.

உங்கள் உடலில் 72% தண்ணீர்தான். இந்த 72% தண்ணீர் இனிமையானதாக மாற்றினால், நீங்கள் அற்புதமான மனிதராக இருப்பீர்கள். மற்றொரு 12% நிலம், இதை இனிமையாக்கினால் மொத்தம் 84% ஆகிவிடும். இது நல்ல சதவிகிதம் அல்லவா? மற்றொரு 6% காற்று. காற்றை சுலபமாக கட்டுப்படுத்தி உங்களுக்குள் சுமுகமான சூழ்நிலைகளை உருவாக்க முடியும். இதற்கென்றே பிரத்யேகமான யோகப் பயிற்சிகளும் உண்டு. மற்றொரு 4% நெருப்பு. இந்த நெருப்பை அப்படியே தக்க வைத்துக்கொள்ளலாம். 6% ஆகாயம் அல்லது வெளி.

ஆகாய அறிவு

“ஆகாய அறிவை” பற்றி இப்போது பேசுகிறார்கள். இந்த சூரிய மண்டலம், இந்த நட்சத்திர மண்டலம் வேகமாக பயணம் செய்கிறதென்று தெரியும். ஆனால், என்ன வேகத்தில் பயணம் செய்கிறது என்று உங்களுக்கு தெரியாது. ஏனென்றால், அதன் தன்மை நமக்கு தெரியாது. சுழன்று கொண்டிருக்கும் இந்தப் பூமியில், நீங்கள் சாதாரணமாக தரையில் உட்கார்ந்திருக்க முடியாது. இந்த வெளிதான் (ஆகாயம்) இந்த இடத்தில் உங்களைப் பிடித்து வைத்துள்ளது.

இந்தப் படைத்தலில் மிக உயர்வானது வெளிதான். உங்களால் கற்பனைச் செய்ய முடியாத செயல்களை அது செய்துகொண்டிருக்கிறது. இதை உள்ளேயும் வெளியேயும் கையாள்வதற்கு ஒரு வழிமுறை உள்ளது. இதையெல்லாம் அறிந்துதான் உங்களுக்குள் இருக்கும் இந்தப் பஞ்சபூதங்களைக் கட்டுப்படுத்த ஒரு முறையை உருவாக்கினோம். இவை உங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டால், பிறப்பிலிருந்து வாழ்வு வரை, வாழ்விலிருந்து இறப்பு வரை, எல்லாம் 100% உங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிடும். இதைத்தான் யோக வழிமுறை என்கிறோம்.

பூமியுடன் தொடர்பு

இதற்காக ஒரு எளிய சாதனா நீங்கள் செய்ய முடியும், உங்களால் முடிந்தவரையில் தரையிலேயே உட்காருங்கள். தினமும் உங்கள் தோட்டத்தில் அரை மணி நேரம் தரையில் உட்கார முடிந்தாலே போதும். உங்கள் நண்பருடன் பேசிக்கொண்டோ, செய்தித்தாளை வாசித்துக்கொன்டோ, தொலைபேசியில் பேசிக்கொண்டோ, அல்லது வெறுமனே அமைதியாக உட்கார முடிந்தால் மிக நல்லது. அது முடியாத பட்சத்தில் ஏதோவொரு செயலில் ஈடுபடலாம். அரை மணி நேரம் நிலத்தின் மேல் உட்கார முடிந்தால், உங்கள் ஆரோக்கியத்தில் பெருமளவு மாற்றம் ஏற்படும். இப்படிச் செய்வதால் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டாலும், ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றத்தை மட்டுமே பெரும்பாலானவர்களால் கவனிக்க முடிகிறது. அதனால் முடிந்தவரை தரையில் உட்காருங்கள்.

21 நாள் பாரம்பரிய ஹடயோகா

ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி ஆலயத்தில், வரும் மே மாதம் 4ஆம் தேதியிலிருந்து 21 நாட்கள் தொடர்ந்து நடைபெறவிருக்கும் ஹடயோகா நிகழ்ச்சியில் உபயோகா, அங்கமர்தனா, சூரியகிரியா, யோகாசனங்கள், பூதசுத்தி ஆகிய 5 சக்திவாய்ந்த பயிற்சிகள் ஆழமாகவும் நுட்பமாகவும் கற்றுத்தரப்பட உள்ளன..

வகுப்பைப் பற்றிய விபரங்களுக்கு
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert1 Comment

  • Muthu says:

    If we sit down in the floor in 3rd Floor in an apartment, will it be equivalent to sitting in floor (ground floor, or in a park) and will it be beneficial as mentioned by Sadhguru? Please clarify.

Leave a Reply