பாரதம் – மறைக்கப்பட்ட உன்னத வரலாறு!

bharatham-maraikkappatta-unnatha-varalaru

ஈஷாவின் புதிய வெளியீடான “பாரதம்” ஒளிப்பேழையைப் பற்றி சில வரிகள் இங்கே…

பாரத கலாச்சாரம் பற்றி பேசினால், பழம் பெருமையை பேசுகிறோம் என்பது சிலரின் எண்ணம். உண்மையில், உலகக் கலாச்சாரங்களில் பெருமைக்குரியது பாரதம் என்பது இந்த ஒளிப்பேழையின் மூலம் தெளிவாகிறது.

பாரத கலாச்சாரத்தில் எப்படி வாழ வேண்டுமென்பது மட்டுமல்ல எப்படி சாக வேண்டும் என்பதும் நன்கு உணரப்பட்டிருக்கிறது. பாரதம் என்ற பெயரில் மறைந்துள்ள அழகிய தத்துவத்தை விளக்கும் சத்குரு, அகத்திய முனி ஆற்றிய ஆன்மீகப் பணி இன்றளவும் வேலை செய்யும் அழகை சுட்டிக்காட்டுகிறார்.

‘பூம்புகார்’ எனும் வாணிபத்தளம், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே துறைமுக நகரமாக செயல்பட்டு வந்துள்ள உன்னத வரலாற்றை மறந்துவிட்ட நம்மை, மேற்கத்திய மோகம் எப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது என்பதை நையாண்டி செய்து உண்மை உணர்த்துகிறார் சத்குரு! தமிழர்கள் பெருமைப்படக் கூடிய அங்கோர் தாம் பற்றிய செய்திகளும் இதில் உண்டு.

  • 12,000 வருடங்களுக்கு முன்னமே உழவு செய்தவர்கள் யாரென்று தெரியுமா?
  • பல ஆயிரம் வருடங்களாக உலகமெங்கும் பயணித்து வணிகம் செய்தவர்கள் யார்?
  • உலகிலேயே பெரிய கோவில் இந்தியாவில் இல்லை, ஆனாலும் அதைக் கட்டியது தமிழர்கள் என்பதை அறிவீர்களா?
  • இங்கு பிறந்த அகத்திய முனி, தேசாந்திரமாக சென்று யோகத்தை வழங்கிய வரலாறு தெரியுமா?
  • பல ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த துறைமுகம் தமிழகத்தில் உண்டென்று அறிவீர்களா?

இந்தியர்கள் மறந்தது சில, நம்மிடமிருந்து மறைக்கப்பட்டது பல. இந்த மண்ணில் பிறந்ததற்காக பெருமைப்படும் பல அம்சங்களை சத்குரு அவர்கள் இந்தக் குறும்படத்தில் அழுத்தம் திருத்தமாக பதிந்திருக்கிறார். ஒவ்வொரு பள்ளியிலும் கல்லூரியிலும் இருக்க வேண்டிய, உத்வேகமளிக்கும் குறும்படம் இது. ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய அற்புத தொகுப்பு இது.

இந்த டிவிடியை ஆன்லைனில் பெற இங்கே க்ளிக் செய்யவும்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press ConvertLeave a Reply