பெங்களூர் மாரத்தான் போட்டியில் ஈஷா!

பெங்களூர் மாரத்தான் போட்டியில் ஈஷா!, Bangalore marathon pottiyil isha

பெங்களூர் மாரத்தானில் ஈஷா, புத்த பூர்ணிமா கொண்டாட்டங்கள் உட்பட இன்னும் சில ஈஷா நிகழ்வுகளின் சில துளிகள் இங்கே!

பெங்களூர் மாரத்தான் போட்டியில் ஈஷா!

பெங்களூருவில் மே 15ம் தேதியன்று நடந்த TCS மாரத்தான் போட்டியில் ஈஷா வித்யா பள்ளிகளுக்கு நிதி திரட்டுவதற்காக ஈஷா பிரம்மச்சாரிகளும், தன்னார்வத்தொண்டர்களும் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டியில் போட்டிதூரம் 10கி.மீ.

ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய ஈஷா அன்பர்கள்!

தேர்தல் திருவிழாவில் ஈஷா!

தேர்தல் திருவிழாவில் ஈஷா!

ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய ஈஷா அன்பர்கள்!

கடந்த மே 16ல் நிகழ்ந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், ஓட்டுரிமையுள்ள அனைத்து ஈஷா ஆசிரமவாசிகள் மற்றும் பிரம்மச்சாரிகளும் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை அளித்தனர். தொண்டாமுத்தூர் தொகுதியைச் சார்ந்த முட்டத்துவயல் வாக்குச்சாவடியில் ஈஷா அன்பர்களோடு சத்குருவும் தனது வாக்கினை பதிவுசெய்தார்.

ஈஷாவில் சத்குரு தரிசனம்!

சத்குருவின் தொடர்ச்சியான பயணத் திட்டத்தால் பல நாட்களாக கிடைக்கபெறாத ‘சத்குரு தரிசனம்’ கடந்த மே 17ஆம் தேதியன்று சந்திரகுண்டத்தின் முன் கிடைத்தது. இதனால் பெரும் மகிழ்ச்சியில் திரண்டிருந்த ஈஷா அன்பர்கள், சத்குருவின் அருள்மழையில் நனைந்து தரிசனம் பெற்றுச் சென்றனர்.

ஈஷாவில் புத்த பூர்ணிமா கொண்டாட்டம்!

புத்தர் ஞானோதயம் பெற்ற நாளான புத்த பூர்ணிமாவை (மே 21) ஈஷா யோகா மையத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடினர். புத்த மந்திர உட்சாடனைகள் இவ்விழாவின் முக்கிய அம்சமாக அமைந்தது. பௌர்ணமி என்பதால் புத்த பூர்ணிமா கொண்டாட்டங்களைத் தொடர்ந்து மிகவும் சக்திவாய்ந்த லிங்கபைரவி உற்சவ மூர்த்தி ஊர்வலமும் நடைபெற்றது.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press ConvertLeave a Reply