பால்பெக் – லெபனானில் உள்ள யோகக் கோவில்

லெபனானில் உள்ள பால்பெக் நினைவுச் சின்னத்தை சென்று பார்த்ததையும், ஒரு காலத்தில் அக்கோவில் யோகிகளால் கட்டப்பட்டது உண்மை என்று தான் உணர்ந்ததையும், ஈஷா தியான அன்பர் ஒருவர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

பால்பெக் என்ற உன்னதமான நினைவு சின்னம் லெபனானில் உள்ள பேகா என்ற பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. மூன்றாயிரம் அல்லது நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், இந்த விஸ்தாரமான கோவிலின் கட்டுமானம் ஃபொனீசியர்களால் ஆரம்பிக்கப்பட்டது. பிறகு கிரேக்கர்களால் ஓரளவும், அதன் பிறகு ரோமானியர்களால் ஓரளவும், வெகுநாளைக்குப் பின்னால் அரேபியர்களாலும் அது கட்டி முடிக்கப்பட்டது. கிழக்கிலிருந்து மக்கள் வந்து இக்கோவிலைக் கட்டியதாக உள்ளூர் புராணம் குறிப்பிடுகிறது. இதைத்தாண்டி வேறு எதுவும் இதைப்பற்றி தெரியவில்லை. நான் பலமுறை அந்த இடிபாடுகளுக்கிடையில் நடந்து சென்று மகிழ்ச்சியாக இருந்திருக்கிறேன், ஆனால் யோகாவில் ஈடுபாடு வந்த பின்புதான் எப்படி வேறு நாகரீகங்களுடன் இது தொடர்பு கொண்டுள்ளது என்று புரிந்தது.

தாமரை இல்லாத இந்தியக் கோவில்களே இல்லை.
பால்பெக் கோவில் பற்றி சில அரிய உண்மைகள் என்னவென்றால் கோவில் கூரையின் உள் பக்கத்தில், கல்லில் செதுக்கிய தாமரைகள் காணப்படுகின்றன. இது மிக ஆச்சரியமான விஷயம், ஏனென்றால் லெபனானில் தாமரைகள் கிடையாது. ஆனால் பின்னர் நான் இந்தியா வந்தபொழுதுதான் அங்கு தாமரை என்பது ஒரு முக்கியமான ஆன்மீக சின்னம் என்று புரிந்தது. தாமரை இல்லாத இந்தியக் கோவில்களே இல்லை. இரண்டாவது, அடித்தளத்தில் பதித்திருக்கும் பாறைகளின் எடை, சுமாராக ஒவ்வொன்றும் எண்ணூறு டன்கள் இருக்கும். அக்காலத்தில் இந்த மாபெரும் பாறைகளைக் கொண்டுவந்ததோடு, பெரிய பெரிய தூண்கள் – பத்து அடி உயரமும் ஐம்பது அடி அகலமும் உள்ள தூண்களை நிறுவியிருக்கின்றனர். இப்பாறைகளைக் கொண்டுவர யானைகளை உபயோகப்படுத்தினர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் வட ஆசியாவில் யானைகள் இல்லாததால் மக்கள் இதை நம்ப மறுக்கின்றனர்.

நான் ஈஷா யோக மையத்தில் குருபூஜை செய்ய கற்றுக்கொள்ளும் போது, இந்த புதிர்கள் அனைத்திற்குமான விடை அதிசயமாக கிடைத்தது. அந்தக் கலாச்சாரத்தில் வழி வழியாக ஒரு குருவிற்கு மரியாதை செலுத்தும் முறையை “ஷோடஷ உபசாரம்” என்று அழைக்கின்றனர். அதாவது பதினாறு விதங்களில் குருவை உபசரிப்பது. குருபூஜை கல் என்று பதினாறு மூலைகள் உள்ள கல்லை இதற்காக உபயோகித்தனர். இதைப் பார்த்தவுடன் எனக்கு பால்பெக்கின் இடிபாடுகளுக்கிடையில் கிடந்த அந்த பெரிய கல் நினைவிற்கு வந்தது. எனக்கு இதெல்லாம் – தாமரைகள், யானைகள், பதினாறுமூலை கல் – எல்லாவற்றையும் யோசிக்கையில் ஒன்று புரிந்தது. நான் திடீரென இந்தியா வருவது ஒன்றும் புதிதோ அல்ல முதலாவதோ அல்ல. ஆயிரமாயிரம் காலமாக கலாச்சார பரிமாற்றம் நடந்து கொண்டுதான் இருந்தன.

சத்குரு:

பால்பெக் ஒரு ஈடு இணையற்ற நினைவுச்சின்னம். ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய ஒன்று. சில கற்கள் எண்ணூறு டன்கள் எடை உள்ளது. நீங்கள் ஒரு விஷயம் புரிந்துகொள்ள வேண்டும், கருவிகள் இல்லாமல், பளுதூக்கிகள் இல்லாமல், வாகனங்கள் இல்லாமல், எந்த ஒரு பெரிய கப்பல்களும் இல்லாமல், இதை உருவாக்க எந்த மாதிரியான மனித சிந்தனை இருந்திருக்க வேண்டும்? நிச்சயமாக பணத்தைப் பற்றியோ உணவைப் பற்றியோ சிந்திக்கும் மனிதர்களாக இவர்கள் இருந்திருக்க மாட்டார்கள்.

பால்பெக் - லெபனானில் உள்ள யோகக் கோவில், Baalbek lebanonil ulla yoga kovil

பால்பெக்கில் உள்ள மியூசியத்தில், 16 மூலைகள் கொண்ட குரு பூஜை கல் ஒன்று உள்ளது.
கூரை மேல் துல்லியமாக, ஆறு இதழ்களும் ஊடே பிணைந்த இரு முக்கோண சின்னங்களும் உள்ள அனாஹத குறி உள்ளது, அனைத்திற்கும் மேலாக, பால்பெக்கில் உள்ள மியூசியத்தில், 16 மூலைகள் கொண்ட குரு பூஜை கல் ஒன்று உள்ளது.

குரு பூஜை, உணர்வு பூர்வமானது மட்டுமல்ல, உங்களைச் சுற்றி ஒரு சக்தி அலையை உருவாக்கி சுற்றி இருப்பவர்களின் ஏற்புத்திறனை அதனால் அதிகரிக்க ஓர் சாத்தியகூறு. அதை ஷோடச உபச்சாரம் என்று கூறுவார்கள். அப்படியென்றால் குருவை பதினாறு விதமாக உபசரிக்கலாம். இதற்காக நமது யோகக் கலாச்சாரத்தில் பதினாறு முனைகள் உள்ள குரு பூஜை பீடத்தை உருவாக்கினார்கள். இப்பதினாறு முனைகள் கொண்ட குரு பூஜை கல், ஆதியோகி உருவாக்கிய ஞானத்தால் மட்டுமே, எல்லா பகுதிகளுக்கும் சென்றிருக்க வாய்ப்புள்ளது. உலகத்தில் பால்பெக்கைத் தவிர வேறு எங்கும் ஆயிரம் ஆண்டு புராதனமான குரு பூஜை கல் தென்படவில்லை. இதனால், இவ்விரு நாடுகளுக்கிடையில் தீவிர வர்த்தக, ஆன்மீக தொடர்பு இருந்திருக்கிறது என்று ஊர்ஜிதமாகிறது.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert