அதிர்ஷ்டம் என்பது உண்மையா?

தீவிர சாதனாக்கள் செய்த புத்தருக்கு ஏதோ ஒரு கணத்தில், அந்த போதி மர நிழலில் அதிர்ஷ்டமாய் ஞானம் கிட்டியது என்போர் உண்டு. எத்தனை எத்தனை சாதகம் செய்தாலும், ஜென்ம ஜென்மமாய் முயன்றாலும் ஞானத்திற்காக பாடுபடும் பலரும் உண்டு. இப்படி வாழ்வின் தினசரி விஷயங்களுக்கு மட்டுமல்லாமல், “அதிர்ஷ்டம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் ஞானமா?” என எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் கேட்ட கேள்விக்கு “அதிர்ஷ்டம்” என்பதன் செயல்பாட்டை இந்த வீடியோவில் ஆணித்தரமாக விளக்குகிறார் சத்குரு.

வாழ்க்கையைப் பற்றி வந்த அடிப்படை கேள்வி…

“மொட்டை மாடியில் நின்றுகொண்டு மேலே பார்த்தால் வாழ்க்கையைப் பற்றி பல விதமான கேள்விகள் வருகிறதே” என்று திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் கேட்க, கேள்விகளால் வரும் பிரச்சனைகளை சுவாரஸ்யமாக விளக்குகிறார் சத்குரு.

பாஸிடிவ் எனர்ஜியால் என்ன பலன்?

யோகா செய்வதனால் ஏற்படும் பாஸிடிவ் வைப்ரேஷன் என்ன? இதுபோன்ற நேர்மறையான விஷயங்களைச் செய்வதன் மூலம் எத்தனை தொலைவிலுள்ள விஷயங்களின் மீது நாம் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்? என எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் சத்குருவிடம் கேட்க… நாம் உருவாக்கிக் கொண்ட வளையங்களை தகர்க்கவே யோகா என யோகா செய்யக்கூடிய விந்தைகளைப் பற்றி இந்த வீடியோவில் பேசுகிறார்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert