'நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்' இயக்கத்திற்காக ஈஷா வித்யா மாணவர்கள் மேற்கொண்ட அழகியல் தன்மைகொண்ட ஒரு பிரச்சார உத்தி, மக்களின் கவனம் ஈர்ப்பதாக அமைந்தது! இங்கே அந்த நிகழ்வு குறித்து சில வரிகள்!

ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள், "நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்" என்னும் தலைப்பில், 6 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரங்கோலி வரைந்து, சாதனை படைத்தனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கோவை ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள், "நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்" என்னும் தலைப்பில், சந்தேகவுண்டம்பாளையம் முதல் தேவராயபுரம் கிராமம் வரை, இடையே உள்ள 6 கிலோ மீட்டர் நீளத்திற்கு, சாலையின் இருபுறமும், ரங்கோலி கோலம் வரைந்தனர்.

நம் தேசத்தின் உயிர் நாடியான நதிகளைக் காக்கும் விதமாக, "நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்" என்னும் விழிப்புணர்வு பேரணியை சத்குரு அவர்கள் செப்டம்பர் மாதம் நாடெங்கும் நடத்துகிறார்.

இதனை முன்னிட்டு, சந்தேகவுண்டம்பாளையம் ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள், இப்பேரணி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆகஸ்ட் 1 அன்று சந்தேகவுண்டம்பாளையம் ஈஷா வித்யா பள்ளியில் துவங்கி, தேவராயபுரம் கிராமம் வரை, இடையே உள்ள 6 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலையின் இருபுறமும், ரங்கோலி கோலம் வரைந்தனர்.

இதில், 8 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு. ரங்கோலி கோலத்துடன், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, 80009 80009 என்ற அலைபேசி எண்ணையும் வரைந்தனர்.

நதிகளைக் காக்கும் இம்முயற்சியில், ஆர்வமுள்ள இப்பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் வீடு வீடாகச் சென்று பொது மக்களைச் சந்தித்து, அழிந்து வரும் நம் நதிகளைப் பற்றியும், அவற்றை மீட்கும் இப்பேரணி பற்றியும், எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.