ஆரோக்கிய வாழ்விற்கு அன்றாடம் வேம்பு

arogya-vazhvirku-andradam-vembu

உங்களுக்குத் தெரியுமா? நம் அனைவருக்குள்ளும் எப்போதும் கான்ஸர் செல்கள் இருக்கின்றன… ஆனால், குறைந்த அளவில். அது எப்போது ஒரு அளவு தாண்டிச் செல்கிறதோ, அப்போது நோயாக அறியப்படுகிறது. வேம்புக்கு கான்ஸர் செல்களையே அழிக்கும் சக்தி இருக்கிறது.

ஈஷா யோகா மையத்தில் தினமும் அதிகாலையில் ஒரு சிறிய கோலிக்குண்டு அளவு வேப்பிலையும் அதே அளவு மஞ்சள் உருண்டையும் வெதுவெதுப்பான நீருடன் வெறும் வயிற்றில் யோகப் பயிற்சிக்கு முன் உட்கொள்ளப்படுகிறது.

இது நாள் முழுக்க அளவான உஷ்ணத்தையும் துடிப்பையும் உடலில் தக்கவைத்திருக்க உதவுகிறது. இது நம் உடலைச் சுத்தம் செய்கிறது. உணவுப் பாதை முழுக்க சிறிய அளவிலான தொற்று நீக்கியாகச் செயல்பட்டு சுத்தம் செய்கிறது.

பச்சை நிறத்தில் வாடாத நிலையில் உள்ள வேப்பிலை போதும். மையாக அரைத்து, மஞ்சள் பொடியும் நீரும் கலந்த உருண்டையுடன் விழுங்கி விட வேண்டியதுதான். கசப்பு விரும்பாதோர், அதன் மீது தேன் தடவி விழுங்கலாம். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு எந்த உணவும் உட்கொள்ளக் கூடாது. இதை யோகாசனப் பயிற்சிக்கு முன் எடுத்துக்கொள்வது சிறந்தது.

வேப்பிலைக் கொழுந்துதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. கொழுந்தில் கசப்பு குறைவு என்பது தவிர வேறு எந்த சிறப்பம்சமும் அதில் இல்லை.

வேம்பு அதிகமாக எடுத்துக்கொள்வதால் எந்தக் கெடுதலும் கிடையாது. தோல் நோய், சர்க்கரை நோய், ஆஸ்துமா உள்ளவர்கள் தினமும் இதனை அதிக அளவில் எடுத்துக்கொள்வது நல்ல பலனை அளிக்கும். ஆஸ்துமா உள்ளவர்களுக்கு அவர்களுக்குத் தேவையான உஷ்ணத்தையும் வேம்பு கொடுக்கிறது.

எந்த வகையான அலர்ஜி இருப்பவர்களுக்கும் இது அருமருந்து. பச்சை வேப்பிலைகளை மைய அரைத்து உடல் முழுக்க அப்பிக்கொண்டு ஒரு மணி நேரம் கழித்துக் குளிப்பதும் மிகுந்த பலனளிக்கும். தோல் அலர்ஜி மட்டுமல்லாமல், எல்லா வகையான அலர்ஜிக்கும் இது பயனளிக்கும்.

வேம்பின் கசப்புடன் ஒரு நாளைத் துவங்குவது வாழ்வு முழுக்க இனிமை நிரம்ப நல்ல வழி. வேம்பின் மீது இன்று ஏராளமான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு, வேம்பு ஒரு அதிசயமான மரம் என்றே சொல்லப்படுகிறது. வேறு எந்தத் தாவரத்துக்கும் நமக்குக் கொடுக்க இத்தனை நன்மை இல்லை.

நம் முன்னோர்கள் வேப்பிலையையும் மஞ்சளையும் தெய்வீகமாகக் கருதியதற்கும் அம்மனின் வெளிப்பாடாக இதைப் போற்றியதற்கும் ஆங்காங்கே வேப்ப மரத்தைக் கோயிலாகக கும்பிட்டதற்கும் காரணம் – இதன் அற்புதமான மருத்துவக் காரணங்களினால்தான்!
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert