கொல்லைப்புற இரகசியம் - பகுதி 38

அரிசிப் பொரி என்றவுடன் அது மீன்களுக்கான உணவு எனவும், பண்டிகை காலங்களில் சாமிக்கு படையலாக வைக்கப்படுவது எனவும்தான் பலரது எண்ணமும் இருக்கிறது. அரிசிப் பொரி கஞ்சி மற்றும் பொரி உருண்டையிலுள்ள ஆரோக்கிய நன்மைகளையும் மேலும் சில கஞ்சி வகைகள் பற்றியும் உமையாள் பாட்டி கூறும்போது அதன் மகத்துவங்கள் நன்கு புரிகிறது!

“உங்களுக்கு காய்ச்சல் விட்டு விட்டு வருதா... அப்டின்னா இப்போ இஞ்சக்ஷன் வேண்டாம். நாளைக்கு வாங்க, இரத்த பரிசோதனை பண்ணிட்டு, பாத்துக்கலாம்! ஏன்னா டெங்குவா இருந்தாலும் இருக்கும்” என்று என்னிடம் டாக்டர் சொன்னதும் சற்று மெர்சல் ஆனேன். என்னடா இது நம் ஆரோக்கியத்துக்கு வந்த சோதனை?! என்று கலங்கிய எனக்கு பரிசோதனை முடிவு நிம்மதியை தந்தது.

பொரியோட சக்கரைப் பாகு சேர்த்து பிடிக்குற இந்த பொரி உருண்டைக்கு நல்ல மருத்துவ குணம் இருக்கு. இத தினமும் சாப்பிட்டு வந்தா வாதம், கபம் சம்பந்தமான நோய்கள், வாந்தி வருவது போன்ற பிரச்சனைகள் காணாம போயிடும். எந்த நோயாக இருந்தாலும் உடல் சோர்வு ஏற்படும்போது குடிக்கறதுக்கு சிறந்த கஞ்சி நெற்பொரி (அரிசிப் பொரி) கஞ்சிதாம்ப்பா!

அது சாதாரண காய்ச்சல்தான்! ஆனால், மூன்று நாட்கள் காய்ச்சலால் உடல் சோர்வு அதிகமானது. நாக்கில் ருசி அற்றுப்போனது. டாக்டரிடம் கேட்டபோது, “காய்ச்சல் வந்தா அப்படித்தான் இருக்கும். இரண்டு நாள்ல சரியாயிடும்!” என்று சொல்லிவிட்டு அடுத்த பேஷண்ட்டை பார்ப்பதற்கு மணியை அழுத்திவிட்டார். சரி நமக்காக சாவகாசமாக ஆலோசனை வழங்கி கரிசனையாய் பக்குவம் சொல்ல என் உமையாள் பாட்டி இருக்கிறாளே, நான் ஏன் கவலைப்பட வேண்டும்?!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உமையாள் பாட்டியிடம் கேட்பதற்காக வீட்டிற்குள் நுழைந்தபோது, பாட்டி அங்கு வெண்கல குண்டானில் எதையோ உருண்டை பிடிப்பதில் மும்முரமாய் ஈடுபட்டிருந்தாள்.

“என்ன பாட்டி, எனக்கு பிடிச்ச குலோப்ஜாமூன் உருண்டை பிடிக்குறீங்கன்னு பாத்தா, இது எதோ பொரி உருண்டை மாதிரி தெரியுதே?” கேள்வி கேட்டுக்கொண்டே பாட்டியின் அருகில் அமர்ந்தபோது, பொரியுடன் கலந்துகொண்டிருக்கும் நாட்டுச் சக்கரையின் வாசம் என் சுவாசம் வழியாகக் கலந்து உள்ளே சென்று “ஆகா அற்புதம்” என செல்ல வைத்தது.

“ஏம்ப்பா பொரி உருண்டை உனக்கு பிடிக்காதா? ஜாமூனெல்லாம் இனிப்பு பலகாரம் மட்டும்தான்! இதுலதாம்ப்பா உண்மையான ஆரோக்கியம் இருக்கு.” பாட்டி சொன்னதும் பொரி உருண்டை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் வர, அதுபற்றி கேட்டேன். அப்போது அரிசிப் பொரியிலுள்ள ஆரோக்கிய நன்மைகளை விரிவாகப் பேசினார் உமையாள் பாட்டி.

பொரியோட சக்கரைப் பாகு சேர்த்து பிடிக்குற இந்த பொரி உருண்டைக்கு நல்ல மருத்துவ குணம் இருக்கு. இத தினமும் சாப்பிட்டு வந்தா வாதம், கபம் சம்பந்தமான நோய்கள், வாந்தி வருவது போன்ற பிரச்சனைகள் காணாம போயிடும். எந்த நோயாக இருந்தாலும் உடல் சோர்வு ஏற்படும்போது குடிக்கறதுக்கு சிறந்த கஞ்சி நெற்பொரி (அரிசிப் பொரி) கஞ்சிதாம்ப்பா! நோயினால உண்டாகுற உடற்சோர்வு இந்தக் கஞ்சிய குடிச்சா மாறும். உடல் வன்மை பெருகும். அதிக தாகம் எடுக்குறது, வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிறு மந்தம், நாக்கு ருசியில்லாம போகுறது போன்ற பிரச்சனைக்கு நெற்பொரி கஞ்சி நல்ல தீர்வு.”

“அட அரிசிப் பொரியெல்லாம் போகுற போக்குல கொறிச்சுகிட்டே போறதுக்குதான்னு நினைச்சேன் பாட்டி, இப்படி ஆரோக்கியத்த அள்ளித்தரும்னு நினைக்கல. சரி அந்த பொரி உருண்டை ரெண்டு தாங்க, அப்படியே கொறிச்சுகிட்டே வீட்டுக்கு போறேன். இருப்பா... இப்பதான் புடிச்சிருக்கு, இத காய வைக்கணும். அப்பதான் நல்ல பதமா கொறிக்க முடியும்” என்று சொன்ன பாட்டி, ஏற்கனவே உலர்ந்திருந்த பொரி உருண்டைகள் சிலவற்றை எனக்கு அன்பாய் கொடுக்க, நானும் ஆசையாய் கொறித்துக்கொண்டே வீடு வந்தேன்.

பேசிக்கொண்டிருக்கும்போது கூடவே மேலும் சில அரிசிக் கஞ்சி வகைகளைப் பற்றியும் அதன் மகத்துவங்கள் பற்றியும் பாட்டி இடையிடையே சொன்னதைச் சொல்ல மறந்துவிட்டேன். இப்போது சொல்கிறேன்.

பால் கஞ்சி - பச்சரிசியும் பசும்பாலும் சேர்த்து காய்ச்சுவது, பால் கஞ்சி!
இதைக் குடித்து வரும்போது பித்தத்தால் வரும் உடல் எரிச்சல் தீரும்; ஆண்மை பெருகும்.

கொள்ளுக் கஞ்சி - கொள்ளும் அரிசியும் சேர்த்து காய்ச்சும் கஞ்சி!
இதைக் குடிப்பதால், நல்ல பசி உண்டாகும்; ஆண்மை பெருகும்.

கஞ்சி அன்னம் - அரிசியில் கஞ்சி காய்ச்சி அந்த கஞ்சியோடு வேக வைத்த அன்னத்தையும் சேர்த்து சாப்பிடுவது. இதனால் பித்தம் குறைந்து உடல் எடை அதிகரிக்கும்.

கொல்லைப்புற இரகசியம் தொடரின் பிற பதிவுகள்