கொல்லைப்புற இரகசியம் - பகுதி 5

அத்தி மற்றும் ஆவாரையைத் தொடர்ந்து அரத்தையைப் பற்றி சொல்ல வந்துவிட்டாள் உமையாள் பாட்டி. இக்கால இளைஞர்கள் பலரும் என்னவென்றே அறிந்திராத இந்த அரத்தையின் மகத்துவத்தை பாட்டி சொல்லிக் கேட்கும்போது, அதன் மகத்துவம் புரிகிறது. தொடர்ந்து படித்து அரத்தையை அறியுங்கள்!

டாக்டர். பிரதீபா சுரேந்தர்,

ஈஷா ஆரோக்யா

உமையாள் பாட்டியைப் பார்த்து செத்த நேரம் பேசினா கொஞ்சம் மனசு ரிலாக்ஸாகும்போல தெரியுது. வேலை நிமித்தமாக வெளியூரெல்லாம் சுற்றி அலைந்துவிட்டு "ம்க்ரும்! ம்க்ரும்!" என லேசாக செருமியபடியே பாட்டியின் குடிலுக்குள் நுழைந்தேன்.

அந்த அரத்தைய பொடியாக்கி தேன் கூட கலந்து டெய்லி 2 வேள சாப்பிட்டீன்னா சளி கிளியெல்லாம் பறந்திரும் கண்ணு.

"என்ன இது..? தொண்டைய என்ன பண்ணி வெச்சிருக்க? சளி அதிகமாயிருக்கு போல?!" என்று அக்கறையுடன் கேட்டாள் பாட்டி.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஊர் ஊராக சென்று குடித்த தண்ணீராலும் கவனமின்றி கிருமி தொற்றுள்ள நீரைக் குடித்ததாலும் தொண்டை கொஞ்சம் மோசமடைந்துதான் இருந்தது.

"அதெல்லாம் ஒன்னுமில்ல பாட்டி லேசா கொஞ்சம் சளி, அவ்வளவுதான்" என்றேன்.

"அடப்பாவி! சளி நெஞ்சு வரைக்கும் இருக்கு, லேசா இருக்குனு சாதாரணமா சொல்ற...! சரி... சரி! கொஞ்சம் பொறு, இதோ வாறேன்" என்று கூறி உள்ளே சென்றவள், ஒரு கிண்ணத்தில் ஏதோ ஒரு முலிகைப் பொடியுடன் தேனைக் கலந்து கொண்டுவந்தாள்.

"இந்தா இத சாப்பிடு!" என்று கொடுத்துவிட்டு, வழக்கம்போல் தன் வைத்தியத்திற்கான கைவேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.

ஏதும் பேசாமல் அதைச் சாப்பிட்ட பின், "நீங்க குடுத்தது என்னது பாட்டி?" என்று அவளிடம் கேட்டேன்.

"அதான் அரத்தை. அந்த அரத்தைய பொடியாக்கி தேன் கூட கலந்து டெய்லி 2 வேள சாப்பிட்டீன்னா சளி கிளியெல்லாம் பறந்திரும் கண்ணு. சிற்றரத்தை பேரரத்தைனு ரெண்டு வகை இருக்கு. ரெண்டுமே சளிக்கு நல்லதுதான். இது நெஞ்சு சளி, கோழை, ஈளை, இருமல், நாட்பட்ட கபம்னு எல்லாத்தையும் குணமாக்குற சக்தி வாய்ந்தது இந்த அரத்தை. அப்புறம்... அரத்தைய கஷாயம் போட்டு குடிச்சா, நுரையீரல்-தொண்டை நோய்ங்கெல்லாம் ஓடிப்போகும்"

  • அரத்தை பொடி 2 கிராம்-தேனுடன் தினமும் இருவேளை சாப்பிட சளி சம்பந்தமான தொல்லை நீங்கும்.
  • இது இஞ்சி குடும்பத்தை சேர்ந்தது. அரத்தை வேரின் ரைசோம் மருத்துவ குணம் வாய்ந்தது.

என்று சொல்லி வைத்தாள். பாட்டி கொடுத்ததை நக்கிச் சாப்பிட்டவுடன் நெஞ்சுக்கு கொஞ்சம் தெம்பு வந்தததைப் போன்று இருந்தது. இன்னும் எத்தனை எத்தனை விஷயங்களைத் தனக்குள் புதைத்து வைத்திருக்கிறாளோ. கேட்டுப் பார்ப்போம்!

(வைத்தியம் தொடரும்)

கொல்லைப்புற இரகசியம் தொடரின் பிற பதிவுகள்
ஈஷா ஆரோக்யா மையங்கள்:

சென்னை: (044) 42128847; 94425 90099
சேலம்: (0427) 2333232; 94425 48852
கரூர்: (04324) 249299; 94425 90098
கோவை: 83000 55555

Tatters, Dick Culbert @flickr@flickr