அரை நொடியில் அடை

அரை நொடியில் அடை

ஈஷா ருசி

ஈஷாவின் உணவு வகைகள் அனைத்தும், “சுவையானது, ஆரோக்கியமானது, எளிதில் தயாரிக்கக் கூடியது” போன்ற அடைமொழிகளுக்குச் சொந்தமானவை என்பது நீங்கள் அறிந்ததே. அந்த விதத்தில் இரண்டு உணவு வகைகள் இங்கே உங்களுக்காக….

சுரைக்காய் அடை

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி – 1 டம்ளர்
சுரைக்காய் – 150 கிராம்
வரமிளகாய் – 4
உப்பு – சுவைக்கேற்ப
கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை – 1 கப் (பொடியாக நறுக்கியது)

செய்முறை

அரிசியை நன்கு ஊற வைத்து கழுவி மிக்ஸியில் போட்டு, அத்துடன் மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். சுரைக்காயை கேரட் துருவியல் துருவிக்கொள்ளவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை மற்றும் துருவிய சுரைக்காய் அனைத்தையும் அரைத்த மாவுடன் சேர்த்து, தோசை மாவு பதத்தில் வைத்துக்கொண்டு, தோசையாக சுட்டு எடுத்தால் சுவையான, சத்தான சுரைக்காய் அடை ரெடி.

கொய்யா இலை டீ

அரை நொடியில் அடை, Arai nodiyil adai
தேவையான பொருட்கள்

கொய்யா இலை – 5
தண்ணீர் – 1 டம்ளர்
கருப்பட்டி – தேவையான அளவு

செய்முறை

கொதிக்கும் நீரில் கொய்யா இலையை போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும். இளம் சூட்டில் கருப்பட்டி போட்டு பருகலாம். வயிற்று வலிக்கு நல்ல மருந்து. வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த வல்லது.
இதையும் வாசியுங்கள்

Tags

Type in below box in English and press ConvertLeave a Reply