உங்களுக்குள் இருக்கும் படைப்பின் மூலத்தை செயல்பட அனுமதித்தால், நீங்கள் ஆனந்தமாக மட்டுமே இருக்கமுடியும்.

எகிப்திய புராணக் கதைகளின்படி, ஒருவர் சொர்க்கத்திற்குள் நுழைவதற்குமுன் இரு கேள்விகள் கேட்கப்படும். உங்கள் பதில் "ஆம்" என்றாலே ஒழிய உங்களுக்கு அனுமதி மறுக்கப்படும். முதல் கேள்வி: வாழ்க்கையில் ஆனந்தம் உணர்ந்திருக்கிறீர்களா? இரண்டாம் கேள்வி: உங்களைச் சுற்றியிருப்போருக்கு ஆனந்தம் அளித்திருக்கிறீர்களா? இந்த இரு கேள்விகளுக்கும் நீங்கள் "ஆம்" என்று பதிலளித்தால், நீங்கள் சொர்கத்தில்தான் இருக்கிறீர்கள் என்று நான் சொல்வேன்.

உங்களுக்கும் உங்களைச் சுற்றியுள்ளோருக்கும் நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயம், நீங்கள் ஆனந்தமான மனிதராக மாறுவதுதான். கோபம், வெறுப்பு, சகிப்பின்மை ஆகியவை பயங்கரமான வழிகளில் மக்களது தலைகளுக்குள் நுழைந்துகொண்டிருக்கும்போது, ஆனந்தமான மனிதர்கள் மட்டுமே நமக்கிருக்கும் ஒரே காப்பீடு. இனிமையாய் இருப்பதன் மகத்துவத்தை உணர்ந்தோர் மட்டுமே தன்னைச் சுற்றி இனிமையை உருவாக்க முனைவார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நீங்கள் தொடும் அனைத்தும் ஆனந்தமாய் மாறும் நிறைவினை நீங்கள் பெறுவீர்களாக.

Love & Grace

Note:

You are invited to celebrate this New Year’s with Sadhguru! Bringing in the New Year in the presence of Sadhguru is a rare privilege.

Join the Live Webstream – Darshan with Sadhguru from Isha Institute of Inner-sciences, December 31st at 8pm EST, Jan 1st 1am GMT, 6:30am IST.

Live on Sadhguru’s Youtube and Facebook pages.