ஆனந்தம் 24 x 7

ஆனந்தம் 24 x 7

நீங்கள் எனக்காக ஒன்றை செய்ய வேண்டும். தினசரி ஒரு மணி நேரமாவது நீங்கள் ஆனந்தமாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு மணி நேரத்தை அதற்காக ஒதுக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு தினசரி எந்த நேரம் வசதியாக இருக்கிறதோ அந்த நேரத்தை அமைத்துக் கொள்ளுங்கள். அந்த குறிப்பிட்ட ஒரு மணி நேரத்தில் என்ன நடந்தாலும் நீங்கள் ஆனந்தமாக இருக்க வேண்டும். அது வீடாகட்டும், அலுவலகமாகட்டும். வீட்டில் ஆனந்தமாக இருக்க முடியவில்லை என்றால் அலுவலகத்தில் இருக்கலாம். அலுவலகத்தில் இருக்க முடியவில்லை என்றால் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வருகிற நேரத்தில் அப்படி வைத்துக் கொள்ளலாம். எப்படி உங்களுக்கு வசதியோ, அப்படி ஒரு மணி நேரம் நீங்கள் கவனமாக மனப்பூர்வமாக தினசரி ஆனந்தமாக இருக்கவேண்டும். அப்படிச் செய்ய முடியுமா?

அந்த ஒரு மணி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். “நான் காலையில் ஏழு மணியில் இருந்து எட்டு மணி வரைக்கும் ஆனந்தமாக இருப்பேன். என்ன நடந்தாலும் சரி” அப்படிச் செய்ய முடியுமா? அப்படி அமைத்துக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் அப்படி இருக்க முடியுமென்றால் அதற்குப்பிறகு அப்படியே 24 மணி நேரத்திற்கு அதை நீட்டிக்க வேண்டும் என்ற ஆர்வம் வராதா? அப்படி செய்துவிட்டால் எப்போதும் சொர்க்கம் உங்கள் கையில்தானே?

மன அழுத்தம், கோபம், பதற்றம், பயம், இது ஒரு மாதிரி பழக்கம். அன்பு, ஆனந்தம், பேரானந்தம் இது ஒரு மாதிரி பழக்கம். எதையுமே நாம் பழகிக் கொள்ள முடியும். எனக்காக இதை செய்வீர்கள் என்று நம்புகிறேன்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert