ஆலு சுண்டல் பிரியாணி செய்வது எப்படி?

ஆலு சுண்டல் பிரியாணி செய்வது எப்படி?, aloo sundal briyani seivathu eppadi?

ஈஷா ருசி

பொதுவாக, அசைவ உணவில் பலவகை பிரியாணி ரெசிபிகள் இருக்கும். சைவ பிரியாணியில் வித்தியாசம் காட்டுவது சற்று சிரமம். இங்கே சுண்டல் மற்றும் உருளைக்கிழங்கில் பிரியாணி செய்யும் செய்முறை ஒரு புதிய ரெசிபியாய் அமையலாம், முயற்சித்துப் பாருங்கள்!

ஆலு சுண்டல் பிரியாணி

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி சாதம் – 1 பவுல்
சுண்டல் – 1 கப்
உருளைக்கிழங்கு – 2
நெய் – 2 டேபுள் ஸ்பூன்
அரைத்த முந்திரி விழுது – ¼ கப்
தக்காளி சாஸ் – ½ கப்
கொத்தமல்லி இலை – 1 கைப்பிடி
புதினா – 1 கைப்பிடி
இஞ்சி பேஸ்ட் – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபுள் ஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 1 டேபுள் ஸ்பூன்
கரம் மசாலா – 1 ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

சுண்டலை ஊறவைத்து வேகவைக்க வேண்டும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். பாசுமதி அரிசி சாதம் தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். மற்ற அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலக்க வேண்டும். வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் கலவையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதில் சுண்டல் உருளைக் கிழங்கும் சேர்த்து கலந்து, பின் சாதம் சேர்த்து அதில் நறுக்கிய பச்சை கொத்தமல்லி சேர்த்து சிறிது நேரம் வேகவைக்க வேண்டும். பின் கலந்து சூடாக பரிமாறவும்.
இதையும் வாசியுங்கள்

Tags

Type in below box in English and press Convert