ஈஷா அன்பர்களிடம் 'சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷா' என்ற பெயரைக் கூறி முடிப்பதற்குள், அனிச்சை செயலாக அவர்களது கால்கள் ஆடத் தயாராகிவிடுகிறது. இப்போது 'அலை' இசைத் தொகுப்பு அவர்களின் துள்ளாட்டத்திற்கு ஏதுவாக வெளிவந்துள்ளது. 'அலை' பற்றி இங்கே சில வரிகள்...


'சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷா'வின் புதிய வெளியீடான 'அலை' இசைத்தொகுப்பு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மஹாசிவராத்திரி கொண்டாட்டத்திற்கிடையே, 'அலை' இசைத் தொகுப்பிலிருந்து பாடப்பட்ட ஒவ்வொரு பாடலும், மக்களுடன் சேர்ந்து சத்குருவையும் நடனமாடச் செய்தது.
SOI

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

 

நாதஸ்வரம், கிட்டார், வயலின், புல்லாங்குழல், கீபோடு, தவில், தப்பு, டோல், மேலும் பிற நாட்டுப்புற இசை வாத்தியங்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ள இந்த இசைத் தொகுப்பில், சம்ஸ்கிருதி குழந்தைகள் உட்படப் பல மதுரக் குரல்கள் நமக்காகப் பதியப்பட்டுள்ளன.

இந்த இசைத் தொகுப்பின் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், அது அலை... அலை... அலை...!

இப்படி சேர்ந்திசை (கோரஸ்) பாடியவர்கள் வேறு யாருமல்ல, நமது ஆசிரமவாசிகளும் தன்னார்வத் தொண்டர்களும் பிரம்மச்சாரிகளும்தான்! ஏன் எதற்கென்று தெரியாமல், ஆதியோகி ஆலயத்திற்கு மாலைப் பொழுதில் வரவழைக்கப்பட்ட அவர்களிடம், சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசை முழக்கத்துடன் அலை... அலை... எனப் பாடும்படிக் கூறியவுடன், ஆச்சர்யமும் ஆனந்தமும் பொங்க நடனத்துடன் பாடி மகிழ்ந்தனர்.

இப்போது இந்த இசைத்தட்டின் மூலம், நீங்களும் கேட்கலாம் அந்தக் குரல்களை...!

அலை... அலை... அலை...!


வெளியீடு: சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷா
விலை: ரூ.80
இணையத்தில் பதிவிறக்கம் செய்ய: http://soundsofisha.org
தொடர்புக்கு: 0422-2515415